Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-018

தெக்காலத்துர் கிரிஷ்ணமுர்த்தி சாஸ்திரிகள்

வாழ்க்கை என்பது

பத்தில் பால்யம் இருபதில் இளமை முப்பதில் முறுக்கு

நாற்பதில் நாய் குணம் ஐம்பதில் ஆசை அறுபதில் முதுமை

எழுவதில் தூக்கம் எண்பதில் நடுக்கம் தொன்னூறில் வீக்கம்

நூறில் அடக்கம்

ஆனால் நூறையும் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும்

நூறாண்டு கண்ட தம்பதியர்

கடவுளுக்கு நிகரானவர்கள்

ஒரு வருடத்திற்கு முன் கிருஷ்ணமூர்த்தி மாமாவிற்கு வயது நூற்றி மூன்று.மாமிக்கு எண்பத்து இரண்டு வயது.ஒருவர் நூறு வயதை கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றாலே அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நிதர்சன உண்மையில் அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் இருப்பது நாமெல்லாம் அறிந்ததே.

அறுபது வயது என்பது வயது என்பதையும் கடந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களை சமூகத்தில் மரியாதையுடன் பார்ப்பார்கள் இத்தனையும் தாண்டி மாமாவும் மாமியும் நூறாண்டு கண்ட தம்பதியர் மட்டுமல்ல மாமா வேதத்திற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கழித்தவர்.இவரது வாழ்கை முறைக்காகவும் வேதத்திற்காக மாமா தன்னை அர்பணித்துக்கொண்டதற்காகவும் மஹாபெரியவாளே விருதும் பண முடிப்பும் கொடுத்து கௌரவித்திருக்கிறார்.

நாம் எல்லோருமே வாழ்க்கை கல்வி கற்பது மற்றவர்களது அனுபவத்தில் இருந்து தானே.மாமாவின் வாழ்க்கையில் இருந்தும் நாம் நிறைய கற்க வேண்டியவை இருக்கின்றன. மாமாவின் திருமணம் ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினான்காம் ஆண்டு நடைபெற்றது. சிறு வயது முதலே மாமாவிற்கு வேதத்தின் மீது மிகுந்த நாட்டம் உண்டு.மாமாவின் வாழ்க்கை இழையோட்டமே வேதம் தர்மம் இவைகள் மட்டுமே.

ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து இறந்து விட்டால் அவனுடைய நிறைவேறாத ஆசைகள் அவனுடைய ஆத்மாவின் உள்ள இருந்து கொண்டே பயணிக்கும். இந்த ஆத்மா ஒரு கர்பத்திற்குள் குடியேறி விடும் பொழுது அவனுடைய பூர்வ ஜென்ம வாசனைகளும் குடி புகுந்து விடும். இந்த மாதிரி ஆத்மாவிற்கு ஒரு சக்தி உண்டு.

கர்பம் கிடைத்தவுடன் அந்த கர்பம் தனக்கு ஏற்றதா என்று சோதிக்க முடியும். அந்த ஆத்மா கர்பம் தனக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்து விட்டால் அந்த கற்பதில் இருந்து வெளியேறவும் முடியும். இதனால் தான் சிலருக்கு கர்பம் தரித்து சில நாட்களிலேயே காரணமில்லாமல் கருச்சிதைவு ஏற்படுகிறது.இதற்கு முன் ஜென்ம வாழ்க்கை ஒழுக்கம் மிகுந்ததாக இருக்கவேண்டும்.

நம்முடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரையில் வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு கறை பட்டுக்கொள்கிறோம். நினைத்து பாருங்கள் நூறாண்டு காலம் கறை படியாத வாழ்க்கை வாழவேண்டுமானால் ஒழுக்கத்தையும் தர்மத்தையும் தன்னுடைய முழுமூச்சாக கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.,

மற்றவர்கள் அனுபவங்களை கொண்டு நாம் வாழ்ந்தால்

இந்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கை வாழமுடியும்

நமே அனுபவப்பட்டு வாழவேண்டுமானால்

இந்த ஒரு ஜென்மம் போதாது

மாமாவின் அனுபவங்களை பாடமாக கற்போம்

கறை படாத வாழ்க்கை வாழுவோம்

https://www.youtube.com/watch?v=7EOPgV55q5k

Duration: 9 minutes 35 seconds

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்