Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -074


என் வாழ்வில் மஹாபெரியவா -074

என் தாய் என்னை பெற்றெடுத்தாள்

தந்தை என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்

மஹாபெரியவா தன்னுடைய இறை அற்புதத்தால்

என்னை கர்பத்தீட்டு படாமல் ஐம்பதாவது வயதில் படைத்தார்

நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை

G.R மாமாவாக வடிவமைத்தீர்கள்

இன்று உங்கள் G.R .மாமா உங்கள் முன்

மஹாபெரியவா பாதமே கதி

என் இனிய உறவுகளே. நம் இருவருக்கும் இடையே இருக்கும் உறவின் நெருக்கம் மஹாபெரியவா உருவாக்கியது.. நம்முடைய உறவின் வயது குறுகிய காலமாக இருந்தாலும் அந்த உறவின் நெருக்கத்தில் இரண்டு மூன்று தலை முறைகளின் முதிர்ச்சியும் மேற்பட்ட உறவின் இலக்கணங்களும் தென் படுகிறதே.

இதற்கு காரணம் என்ன?. மஹாபெரியவா பக்தியும் குரு பூஜையும் மட்டுமே இதற்கு காரணம் என்றால் உங்கள் அனைவருமே நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள் என்பது நிதர்சனமான உண்மை.

உங்களுக்கு என்னிடம் இருந்தோ அல்லது எனக்கு உங்களிடம் இருந்தோ சுயநலத்தை மையகமாக வைத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லையே?. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நம்முடைய உறவுதானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். நம் உறவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. நம் உறவு என்றுமே தேயாத பௌர்ணமி நிலவு. இங்கு அமாவாசை நிலவு என்ற பேச்சுக்கே இடமில்லை

.மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்து இருக்கிறது. வரும் காலங்களில் இந்த ஒரு புள்ளி இந்த எல்லையில்லா பிரபஞ்சத்துடன் இணைந்து விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

என்னை என் பெற்றோர்கள் உயிரும் உதிரமும் கொடுத்து பெற்று வளர்த்தார்கள். என் பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயர் ராஜகோபாலன். வாழ்க்கையில் தோல்வியின் விளிம்பில் இருந்த என்னை தாங்கிப்பிடித்து மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி என்னை சரீர சுத்தி ஆத்ம சுத்தி பூரண சுத்தி என்று எல்லாவற்றையும் கொடுத்து கங்கையில் கழுவி எடுத்து இந்த உலகில் தான் விட்டு போன பணியில் காலத்திற்கு ஏற்றாற்போல் சற்றே மாற்றம் செய்து தொடருமாறு உங்களுக்காகவே உங்கள் கைகளில் என்னை கொடுத்து விட்டார்கள்.

நீங்களும் உங்கள் வீட்டு குழந்தைபோல் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்து எனக்கு .G.R மாமா என்று பெயர் சூட்டி வாஞ்சையோடு அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து நொடிப்பொழுதும் என்னை வளர்த்து கொண்டிருக்கிறீர்கள்.

அப்பொழுதான் எனக்கு ஒன்று புரிந்தது. ஒருவரின் வாழ்க்கையில் நாற்பது ஐம்பது வயது வரை பெற்றோர்கள் வைத்த பெயர் இருக்கும். அதற்கு பிறகு சமுதாயத்திற்காக அந்த பெயரை கொண்டவர் உழைத்து தனக்கென்று சமுதாயம் கொடுக்கும் பெயரை ஏற்பார். அதற்கு பிறகு பெற்றோர்கள் வைத்த உதிர்ந்து விடும்.

அது போலத்தான் இந்த ராஜகோபாலனுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் உதிர்ந்து நீங்கள் எனக்கு சூட்டிய G.R மாமா என்ற பெயர் இன்று என்னுடன் ஒட்டிக்கொண்டது. என் இறுதி மூச்சு வரை நீங்கள் வைத்த இந்த பெயர் மட்டுமே என் அடையாளமாக இருக்க போகிறது என்பது நிச்சயம்.. உங்கள் அனைவருக்கும் என் இதயம் நன்றி சொல்கிறது.

மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்த அனைத்தையும் உங்களிடம் என் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறேன். என் முதல் புத்தகமான என் வாழ்க்கையில் மஹாபெரியவா மூலமும் உங்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம் கூட எழுதி கொண்டு இருக்கிறேன். இந்த புத்தகங்கள் எல்லாமே மஹாபெரியவா என் மூலம் நிகழ்த்திய நிகழ்த்தி கொண்டிருக்கிற வாழும் அற்புதங்களாகவே எனக்கு படுகிறது. வயதில் மூத்த மஹாபெரியவா பக்தர்களின் கருத்துக்களும் இதுவே.

சமீபத்தில் மஹாபெரியவா எனக்கிட்ட கட்டளைகள் பற்றியும் அந்த கட்டளைகள் மூலம் நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மஹாபெரியவா என்னை வைத்து நிகழ்த்தும் அற்புதங்கள் அனைத்தும் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்திதான் என்ற உண்மையில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மஹாபெரியவா என் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களையே இன்னும் எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.அதற்குள் மேலும் அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்.

அத்தனை அற்புதங்களும் சமுதாய நன்மைக்கும் கலி காலத்தில் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை கலியுக விகாரங்களுக்கும் ஒரு பதிலாக அமைந்த அற்புதங்களே. இந்த வரிசையில் மஹாபெரியவா எனக்கிட்ட மூன்று கட்டளைகளும் அதன் பயனாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களையும் உங்களுடன் வரும் வியாழக்கிழமையில் இருந்து “என் வாழ்வில் மஹாபெரியவா” தொடர் வாயிலாக பகிர்ந்து கொள்ளப்போகிறேன். அந்த மூன்று கட்டளைகள் இதோ உங்களுக்காக:

  1. விண்ணும் மண்ணும்

  2. மஹாபெரியவா நாத பிரும்மம்

  3. மஹாபெரியவா குரு பூஜை பிரபஞ்ச கோவில்

விண்ணும் மண்ணும்:

இந்த முதல் தொடர் முற்றிலும் சிதிலம் அடைந்த புராதன கோவில்களை கண்டெடுத்து புனருத்தாரணம் செய்து வழிபாட்டிற்கு ஏற்ற கோவில்களாக மாற்றி இழந்த பிரபஞ்ச சக்திகளை மீட்டுவழிபாட்டிற்கு வரும் பக்தர்களின்துயர் களைந்து அவர்களின்அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுப்பது. ஊர் கூடி தேர் இழுப்பது என்ற வழக்கத்தை நமக்கு கற்று கொடுத்த மஹாபெரியவா கட்டளை படி நாம் எல்லோருமே சேர்ந்து இந்த பணியை செய்ய போகிறோம்.

இந்த பணியில் மஹாபெரியவா நமக்கு காண்பித்த முதல் கோவில் சோழர் காலத்து கோவில். சுமார் ஆயிரத்து நானூறு வருடங்கள் பழமை வாய்ந்த கோவில். கும்பகோணத்துக்கு அருகில் பட்டிஸ்வரம் கோவிலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளது திருமேற்றளி என்னும் ஒரு சிறு கிராமம்.

இங்கு தான் பிரும்மனேபிரதிஷ்டை செய்துவழிபட்ட பிரும்ம நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தான் மஹாபெரியவா நமக்கு காண்பித்து கொடுத்த முதல் கோவில்.யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். அந்த பரமேஸ்வரனே ஒரு கோவிலை காண்பித்துஅந்தகோவிலைமீட்டெடுஎன்னும் நமக்கிட்டகட்டளையைசிரமேற்கொண்டு மனிர்களாகிய நாம் செய்வது என்பது எவ்வளவு பெரியபாக்கியம்.ஒன்று சேருவோம் ஊர் கூடி தேர்இழுப்போம் .

மஹாபெரியவா நாத பிரும்மம்

இந்த இசை தொடர் மஹாபெரியவா எனக்கு கொடுத்த அடுத்த அற்புத பணி. உங்களுக்கு விசாலாக்ஷி மாமியை நன்கு தெரியும். நம்முடைய இணைய தளத்தில் இந்த மாமியை நேர் காணல் நடத்தி உங்களுக்கு அறிமுக படுத்தி இருக்கிறேன்.

ஒரு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது மஹாபெரியவா என்னிடம் சொன்னது.

"ஏண்டா என்னோட பக்தை ஒருத்தி விசாலாக்ஷி மாமின்னு பேரு. அவா என்னோட பேரில் நிறைய பாட்டு எழுதி வெச்சிருக்கா. நான் ஸ்தூலத்தில் இருந்த போது என்னால் ஒன்னும்பண்ணமுடியலை. இப்போ நீ அவளை கண்டு பிடிச்சு அவோ எழுதின பாட்டையெல்லாம் உலகம் பூரா மேடையேத்தறயா?

இதிலே இருந்து கிடைக்கும் பணத்தில் பழைய கோவில்களையெல்லாம் கண்டு பிடிச்சு புனருத்தாரணம் பண்ணு. ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி பண்ணு. ஏழை பெண்களுடைய கல்யாணத்திற்கு என்னோட சீரா தாலி பண்ணி கொடுக்கறயா? என்று என்னிடம் ஒரு குழந்தையை போல கேட்டார். இதன் விவரங்களை இந்த என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் மூலம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

மஹாபெரியவா குரு பூஜை பிரபஞ்ச கோவில்

ஒரு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரம்.மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் முடிந்தது. நான் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொள்ளும் நேரம். அப்பொழுது மஹாபெரியவா சொல்கிறார்

“ கொஞ்சம் நில்லுடா. நான் ஒன்னு கேட்டா பண்ணுவியா ? என்று கேட்டார்.

நான் அதிர்ந்து போனேன். என்ன பெரியவா எனக்கு ஒரு ஜென்மத்தை கொடுத்து நான் வாழும்வாழ்க்கைக்குஒரு அர்த்தமும் கொடுத்துண்டு இருக்கேள். சொல்லுங்கோ பெரியவா நான் என்ன பண்ணனும் என்று கேட்டேன்.

பகவத் கீதைக்கு இணையான குரு பூஜையை உன் கையிலே கொடுத்து என் பக்தர்களை கலியின் விகாரங்களில் இருந்து காப்பாற்று அப்படின்னு சொன்ன காரியத்தை நன்னாகவே பண்ணிண்டு இருக்கே. அன்னிக்கு ஒரு சின்ன தீப்பொறியா இருந்த குரு பூஜை இன்னிக்கு உலகம் பூராவும் பத்திண்டு கொழுந்து விட்டு எரியறது

எனக்கு இந்த மெட்ராஸில குரு பூஜை பிரபஞ்ச கோவில் ஒன்னு கட்டேன். அந்த கோவில் குரு பூஜை பண்ணிண்டு இருக்கறவாளுக்குஒரு சரணாலயமா இருக்கட்டும். சொன்னார். அது சத்தியமான வாக்கு.

இதை தொடர்ந்து நிகழ்ந்த அற்புதங்களை உள்ளடக்கிய தொடராக இது இருக்கும் என்பது நிச்சயம். அதற்கு மஹாபெரியவா சொன்ன பதில் அதை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கிற அற்புதங்கள் அனைத்தும் உள்ளடக்கிய தொடராக இருக்கப்போகிறது என்பது நிச்சயம்.

நீங்கள் அனைவருமே என்னுடைய வாழ்க்கையில் மஹாபெரியவா நிகழ்த்தி கொண்டிருக்கிற அற்புதங்களைஉங்களின் வாழ்க்கையில் நிகந்த அற்புதமாகவே பாவித்து படித்து அனுபவித்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

இந்த அற்புதங்களும் அந்த வகையில் உங்கள் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் என்பது சத்தியம். என் விரல் பிரசவிக்கும் ஒவொரு வார்த்தையும் என் இதயத்தின் ஆழத்தில்இருந்து வரும் வார்த்தைகள்.

என் இதயத்திற்கு துடிக்க மட்டுமே தெரியும்.

நிச்சயமாக நடிக்க தெரியாது.

இப்பொழுது உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த வியாழன் அன்று உங்களை இந்த தொடரின் அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன். அதுவரை நீங்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து மஹாபெரியவா தியானத்திலேயே இருங்கள்.முடிந்த வரையில் இந்த தொடரை இடைவெளி இல்லாமல் பதிவுகளாக வெளியிட முயற்சிக்கிறேன். நீங்கள் எல்லோரும் எனக்காக செய்யும் பிரார்த்தனைகள் நிச்சயம் பலிதமாகும் என்பது சத்தியம்.

இறுதியாக மஹாபெரியவா என்னிடம் சொன்னது இதோ உங்களுக்காக:

1 உன்னோட இந்த கைங்கர்யத்தில் சேர்ந்து உதவி செய்யறவளோட ஜென்மாந்திரத்து பாவங்கள் எல்லாமே எரிந்து சாம்பலாகும்.

2. யார் கிட்டயேயும் உதவி செய்யுங்கள் என்று கேட்காதே. பிராப்தம் இருக்கறவா உதவி செய்வா.

3. கொடுக்கணும்னு மனசு இருக்கு ஆனா வசதி இல்லை அப்படிங்கற மனுஷாளை மனசார வாழ்த்த சொல்லு. அவாளுக்கும் நான் ஆசிர்வாதம் பண்ணறேன்.

  1. இதையெல்லாம் மனசுலே வெச்சிண்டு காரியத்தில் இறங்கு. எல்லாமே நன்னா வரும். எல்லோரும் ஷேமமா இருங்கோ

என்று வாழ்த்தி மஹாபெரியவா முடித்து கொண்டார்.

மீண்டும் அடுத்த வியாழக்கிழமை உங்களை என்னுடைய பதிவு வாயிலாக சந்திக்கிறேன்.

பாட்டி சொல்லும் கதைகளில் கேட்டு அறிந்திருப்போம்

புத்தகங்களிலும் காலண்டரிலும் பார்த்திருப்போம்

சொல்லக்கேள்வி ஆனால் பார்த்த அனுபவம் உண்டா ?

இறைவனை அனுபவித்த அனுபவம் உண்டா ?

பதில் என்னவாக இருக்கும்? இல்லை என்பதுதானே அந்த பதில்?

மஹாபெரியவா என்னும் பிரபஞ்சத்தை அனுபவித்த பிறகு

நம் அனைவரின் பதில் என்னவாக இருக்கும்.

பார்த்தோம் அனுபவித்தோம் அழைத்தால் ஏனென்று கேட்டார்.

மஹாபெரியவாளையும் குரு பூஜையையும் மறக்க முடியுமா?

மஹாபெரியவா பாதமே கதி

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square