Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -076 விண்ணும் மண்ணும்


என் வாழ்வில் மஹாபெரியவா -076

விண்ணும் மண்ணும்

இரண்டு மஹாபெரியவா பக்தர்கள் சந்தித்து

கொள்ளும் பொழுது கேட்க வேண்டிய கேள்வி

கடைசியாக நீங்கள் அறிந்த

மஹாபெரியவா அற்புதங்கள் என்ன

இதில் ஒருவருடைய பக்தியின் ஆழம் தெரிகிறது

நீங்கள் கடைசியாக பின்பற்றிய

மஹாபெரியவா போதனைகள் என்ன

இதில் ஒருவருடைய மனதின் விசாலம் தெரிகிறது

மஹாபெரியவாளின் ஆழத்தை அளக்க அளக்க

உங்கள் மனம் பண்படுகிறது

எப்பொழுதும் நீங்கள் மஹாபெரியவா

ஸ்மரணையிலேயே இருந்தால்

எல்லையில்லா பிரபஞ்சத்துடன் உங்கள் தொடர்பு இருக்கும்

அனுபவித்து பாருங்கள் வார்த்தைகளுக்கு

அப்பாற்பட்ட அனுபவம்

****

நமக்கெல்லாம் மஹாபெரியவா அற்புதமென்றால் அது ஒரு உள்ளத்தை தொடும் உணர்வுகள். ஆனால் மஹாபெரியவாளை பொறுத்த வரை அவருக்கு அது மேலும் ஒரு நாள்.

அந்த பரமன் என் வாழ்வில் நிகழ்த்திய நிகழ்த்தி கொண்டிருக்கிற அற்புதங்களை உங்களுக்கு அவ்வப்போது என் பதிவுகள் வாயிலாக சமர்ப்பித்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்பொழுது புரிகிறது. என் இறுதி மூச்சில் கூட ஒரு அற்புதம் நிகழ்ந்துதான் என் மூச்சு அடங்கும் என்று நினைக்கிறேன்.

இது வரை மஹாபெரியவா என் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களையே எழுதி முடித்தபாடில்லை. ஆனால் மீண்டும் பல அற்புதங்கள் அடங்கிய என் வாழ்கை ஆரம்பித்து விட்டது.. இந்த அற்புதங்களை எல்லாம் என் எழுத்துக்கள் மூலம் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவந்து உங்களை இன்னும் மஹாபெரியவா பக்தி ஆழத்திற்கு அழைத்து சென்று மஹாபெரியவா பக்தியை உங்கள் உடலுக்குள் பாய்ச்சி உங்களுக்கும் மஹாபெரியாவாளுக்கும் இடையே ஒரு பக்தி பாசத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன்.

மஹாபெரியவா எனக்கு இடும் கட்டளைகள்

பொதுவாகவே மஹாபெரியவா எனக்கு இடும் கட்டளைகள் எல்லாமே வியாழக்கிழமை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மட்டுமே இருக்கும்.. இந்த மாதம் (ஏப்ரல்) நான்காம் தேதி வியாழக்கிழமை காலையில் என்னுடைய பிரும்ம முகூர்த்த நேர பிராத்தனையில் போது நடந்த சாம்பாஷனை இதோ உங்களுக்காக.:

பெரியவா : ஏண்டா நீ எல்லாருக்கும் நான் சொன்ன குரு பூஜை செய்யச்சொல்லி அவாளுக்கு என் கிட்டே இருந்து அனுகிரஹமும் ஆசிர்வாதமும் வாங்கித்தரே.. இதை எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கமே பன்னரே.. ஒரு கையையும் ஓரு காலையும் வெச்சுண்டு இவ்வளவையும் பண்ணிண்டு இருக்கே. உனக்கு இன்னும் சக்தியை கொடுத்து நான் ஒன்றை செய்ய சொன்னா செய்வாயா?

நான்: என்ன செய்யணும்? பெரியவா சொல்லுங்கோ.

பெரியவா : எத்தனையோ சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் சிதிலமடைந்து பூதம் காக்கும் கோவிலா மாறிடுத்து. அந்த காலத்திலே ராஜாக்களும் மனுஷாளும் சேர்ந்து பெரிய கோவில்களை கட்டினா.. அந்த கோவில்களெல்லாம் நாளடைவில் சிதிலம் அடைந்து போச்சு.

அந்த கோவிலுக்கெல்லாம் சக்தி ரொம்ப அதிகம்.. ப்ரபஞ்சத்தோட தொடர்பு கொண்டது. செய்யும் பிரார்த்தனைகள் எல்லாமே உடனே பிரபஞ்சத்தை அடைந்து விடும். பிரபஞ்சத்தில் இருந்து உடனே பதிலும் கிடைச்சுடும். அந்த மாதிரி கோவில்களை எல்லாம் கண்டு பிடிச்சு புனருத்தாரணம் பண்ணி மனுஷா வழிபாட்டிற்கு ஏத்த மாதிரி பண்ணுடா.

எப்படி என்னோட குரு பூஜை கலியின் விகாரங்களுக்கு பதில் சொல்லறதோ அதுபோல இந்த சக்தி வாய்ந்த கோவில்களெல்லாம் மனுஷா பண்ணற அத்தனை பிரார்த்தனைகளுக்கும் உடனே பதில் சொல்லும். நீ பண்ணு.. இது உனக்கு கடைசி ஜென்மம்.. நானே வந்து உன்ன அழைச்சுண்டு போறேன்.

விண்ணும் மண்ணும்

நான்: பெரியவா நீங்களே பலதரம் என்கிட்டே சொல்லியிருக்கேள். விண்ணையும் மண்ணையும் இணைக்கும் சாதனம் கோவில்கள் மட்டுமே என்று. அப்படியென்றால் வானத்தில் இருக்கும் இறைவனுக்கும் மண்ணில் இருக்கும் மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு சாதனம் கோவில்களே.

அப்படியானால் நீங்கள் சொல்லற மாதிரி பல கோவில்களை கண்டெடுத்து புனருத்தாரணம் பண்ணி மனுஷா வழிபாட்டிற்கு ஏற்பாடு பண்ண சொல்லறேள். உங்களோட இந்த கைங்கர்யத்திற்கு “விண்ணும் மண்ணும்” அப்படின்னு பேர் வைக்கிறேன் பெரியவா. நீங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்கோ.

பெரியவா: பேஷா வையேன். ரொம்பவும் பொருத்தமா இருக்கு. நீ எல்லோர் கிட்டயும் கையேந்தி பிச்சை எடுத்து பண்ணு. உனக்கும் புண்ணியம். உனக்கு உதவறாலுக்கும் புண்ணியம்..

நான்: ரொம்ப சந்தோஷம் பெரியவா.ஆனால் நான் எப்படி ஒரு காலையும் ஒரு கையையும் வெச்சுண்டு எங்கே போவேன்?. எப்படி தேடுவேன்.? யாரை கேப்பேன்? பெரியவா.

பெரியவா: நீ எங்கேயேயும் போக வேண்டாம்டா யாரையும் தேட வேண்டாம். உன்னை தேடி வேண்டிய விவரங்கள் வரும். நீ எடுத்து பண்ணு.

நான்: சரி பெரியவா. நிச்சயம் உங்கள் கட்டளையை தலை மேலே ஏத்துண்டு பண்ணறேன் பெரியவா. முதல்ல எந்த கோவிலை எடுத்துக்கறது.

பெரியவா: நாளைக்கு ஒரு கோவிலை பற்றி உனக்கு தகவல் வரும். அந்த கோவிலை முதலில் எடுத்துண்டு பண்ணு.

நான்:: சரி பெரியவா .பண்ணறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.

அடுத்த நாள் மஹாபெரியவா அற்புதத்தில் ஒரு நாயகன் சங்கரன் என்னும் ராகவன் என்னை தொடர்பு கொண்டு பின்வருமாறு சொன்னான்.

"நான் என் குடும்பத்துடன் கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது மிகவும் சிதிலம் அடைந்த ஒரு சிவன் கோவிலை பார்த்தோம். அந்த கோவிலை நாம் நம் டிரஸ்ட் மூலம் எடுத்து திருப்பணிகள் செய்யலாம் மாமா.

உங்களுடைய நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் எல்லாரும் உதவ முன்வருவா. பண்ணலாம் மாமா " என்று சொன்னார். நானும் சரி ராகவன் நிச்சயம் பண்ணலாம். மாமஹாபெரியவாளை கேட்டுவிட்டு பண்ணலாம் என்று சொல்லி கை பேசியை துண்டித்தேன்.

அடுத்த நாள் நான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு மற்றவர்க்ளுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் முடித்துக்கொண்டு மஹாபெரியவாளிடம் பேச ஆரம்பித்தேன். நான் பேச ஆரம்பித்தேன்.

பெரியவா : கும்பகோணத்துக்கு பக்கத்துலே திருமேற்றளிகை அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊரிலே சோழ மன்னன் கட்டின சிவன் கோவில் இருக்கு.. அந்த கோவில் சிதிலமடைந்து ஒரு கால பூஜைக்கு கூட வழியில்லாம இருக்குடா. நமக்கு படியளக்கிற பரமேஸ்வரனுக்கு நன்றி கடனா அந்த கோவிலை எடுத்து புனரமைத்து மூன்று கால பூஜைக்கு ஏற்பாடு பண்ணி நெவேத்தியத்துக்கும் ஏற்பாடு பண்ணனும். உனக்கு இன்னிக்கே வேண்டிய தகவல் எல்லாம் வந்து சேரும்.. அதை தெரிஞ்சுண்டு என்கிட்டே வா.

நான்: சரி பெரியவா நான் வரேன்.

மஹாபெரியவாளிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு விடை பெற்று காயத்ரி ஜெபத்திற்கு உட்கார்ந்து விட்டேன்.

மஹாபெரியவா அற்புதம் ஆரம்பித்து விட்டது.

அன்றே காலை பத்து மணிக்கு எனக்கு வாட்ஸாப் செய்தி வருகிறது. அனுப்பியவர் திரு ராகவன். இவர் மஹாபெரியவா குரு பூஜை அற்புதத்தின் நாயகன் சங்கரன் என்கிற. ராகவன். அவர் அனுப்பிய பத்திரிகை செய்தி இதுதான். தினமலர் பத்திரிகையில் மஹாபெரியவா சொன்ன திருமேற்றழிகை கோவிலை பற்றிய விவரங்கள் அடங்கிய பத்திரிகை செய்து அது.

கோவிலை பற்றிய விபவரங்கள் மேலும்.

திருமேற்றளிகை கோவிலை சித்தர்கள் லிங்கம் வடிவில் வந்து பூஜை செய்கிறார்கள். அந்த கோவிலை பத்து அடி கரு நாகம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. யாரும் நெருங்கவே பயப்படுகிறார்கள்.போன்ற விவரங்கள் எனக்கு கிடைத்தது. கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் முடிந்தவுடன் மஹாபெரிரியவாளிடம் பேச ஆரம்பித்தேன்.

நான்: பெரியவா. நீங்கள் சொன்னமாதிரியே திருமேற்றளிகை கோவிலை பற்றிய விவரங்கள் கிடைத்தது. இப்போ நான் என்ன பண்ணனும் பெரியவா.

பெரியவா: நீ இன்னும் ஒரு வாரத்துல கும்பகோணம் கிளம்பி போ. போய் அந்த கோவிலுக்கு என்ன வேணுமோ அதை அத்தனையும் அவாளுக்கு பண்ணிகொடுத்துட்டு வா. ஜெயம் உனக்கே என்று என்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார்.

நான்: பெரியவா நான் ஒத்தை காலை வெச்சுண்டு எப்படி போறது ? பெரியவா. எனக்கு ஒண்ணுமே புரியலை பெரியவா. வெளி உலகத்தை பாத்தாலே எனக்கு தலையை சுத்தறது.

பெரியவா: உனக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ திருமேற்றளிகை போ. உனக்கு நீ யாருன்னு தெரியும். . நான் உன் கூடயே வருவேன். உன் கையை பிடிச்சுண்டே வருவேன்.. உன்னோட கால் தரையில் படாம கூட்டிண்டு போய் திரும்ப கூட்டிண்டு வந்து விடறேன். நீ ஒரு சக்கர வண்டியை மட்டும் வாங்கிக்கோ.. இனிமே உனக்கு அது அடிக்கடி தேவைப்படும்.

நான்: சரி பெரியவா. நான் சக்கர வண்டியை வாங்கிடறேன் .கும்பகோணத்துக்கு ரயிலில் முன் பதிவு பண்ணிண்டு கிளம்பறேன் பெரியவா.

அன்று மாலையே என் வீட்டிற்கு சக்கர நாற்காலி வந்து விட்டது. என் மனைவியுடன் சேர்ந்து கடைக்கு போய் எல்லாவற்றையும் வாங்கி வந்தது திருமதி சௌம்யா என்னும் மஹாபெரியவா பக்தை.. என் இல்லத்தில் இருந்து காரில் ஏறி எழும்பூர் ரயில் நிலையம் சென்றோம்.

இது நடந்தது இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி.வெள்ளிக்கிழமை.

பத்து வருடங்களுக்கும் மேலாக வெளி உலகத்தை பார்க்கவில்லை. அதனால் என் கால்கள் கொஞ்சம் நடுங்கியது. மஹாபெரியவா என்று என் மனதிற்குள் அழைத்தேன். கால்கள் நடுங்குவது நின்றது. கொஞ்சம் உதவியுடன் என்னால் ரயிலில் ஏற முடிந்தது..

மஹாபெரியவாளின் காருண்யத்தை என்னவென்று சொல்வது. நான் வெளியில் எங்கும் சாப்பிடுவதில்லை என்பதை எல்லோருமே அறிவர்.

ஆடுதுறையில் எனக்கு உணவளித்த மஹாபெரியவா

காலை நேரத்தில் நான் சிறியது டிபன் சாப்பிடுவது வழக்கம். அந்த நேரம் வந்தவுடன் என் வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்தது. ரயில் ஆடுதுறையை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆடுதுறையில் ரயில் நிற்கும் பொழுது சிறிது பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்தேன். வண்டியும் நின்றது. நான் என்னுடைய கால் ஊனத்தால் எழுந்து வெளியில் செல்ல முடியாது. ஆகவே என்னுடன் வந்தவர்களிடம் கொஞ்சம் பழங்கள் வாங்கி வர செல்லலாம் என்று இருந்தேன்.

அப்பொழுது ரயில் ஆடுதுறையில் நின்றது. அப்பொழுது ஒரு அம்மையார் எங்கள் அருகில் வந்து தன்னை புவனா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பின்வருமாறு பேச ஆரம்பித்தார்.

நீங்கள் கும்பகோணம் செல்வதை அறிந்து கொண்டேன். நீங்கள் வெளியில் எங்கும் எதுவும் சாப்பிட மாடீர்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் இப்பொழுது சென்னையில் இருந்து கும்பகோணம் போறேன். எனக்கு ஆடுதுறைல இறங்கணும். இருந்தாலும் உங்களை தரிசித்துக்கொண்டே கும்பகோணம் வரை பேசிக்கொண்டே வரலாம் என்று இப்பொழுது உங்களுடன் பிரயாணம் செய்கிறேன்.

புவனா அம்மையாரை பற்றி நான் மேலும் தெரிந்து கொண்டது.

இந்த புவனா என்னும் அம்மையார் ஆடுதுறையில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவு விடுதியே பெரும்பாலோருக்கு ஒரு தாய் போலத்தான். ஏன் தெரியுமா? வேதம் படித்த பிராமணர்கள் இங்கு உணவு அருந்த வந்தால் அவர்களுக்கு மடியுடன் சமைத்து எந்த விலையும் இல்லாமல் உணவு பரிமாறுவார்கள்.

மஹாபெரியவாளை பற்றி இவரிடம் பேசும் பொழுது இவரின் கண்கள் குளமாகி விடும். .தன்னையும் அறியாமல் கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீரை கூட பொருட்படுத்தாமல் நான் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் எங்கோ ஒரு தாய்க்கு பிறந்தேன். புவனா எங்கோ ஒரு தாய்க்கு பிறந்தாள். இருந்தும் சென்னையில் இருக்கும் நான் கும்பகோணம் செல்ல ஆடுதுறையில் இருக்கும் புவனா எனக்கு உணவு சமைத்து பரிமாறுவது என்பது மஹாபெரியவா என்னும் ஆண்டவனின் கட்டளை.

கட்டளையை பிரபஞ்சம் நடத்தி விட்டது..

நான் வெளியில் எங்கும் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்து கொண்டு ஆடுதுறையில் அவர் நடத்தி வற்றும் உணவு விடுதிக்கு தகவல் சொல்லி எனக்கு காலை உணவை தயார் செய்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து தருமாறு தன்னுடைய ஆடுதுறை மக்களை கேட்டுக்கொண்டார்கள். அதன் படி ஆடுதுறையில் மஹாபெரியவா ஏற்படின் படி எனக்கு வீட்டில் மிகவும் மடியாக சமைத்த உணவு பரிமாறப்பட்டது.

என் கண்கள் பணிந்த. கண்களில் கண்ணீர் பெருகியது. நான் மஹாபெரியவாளை என்னை பெறாத பிரபஞ்ச தாயாக பார்த்தேன்.

கும்பகோணத்தில் மஹாபெரியவா எனக்கு கொடுத்த திவ்ய தரிசனம்

காலை உணவு சாப்பிட்டுவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். பத்து வருடத்திற்கு பிறகு நான் வெளி உலகத்தை பார்க்கிறேன். ஆனால் என்றுமே என்னை வெளி உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக அந்த மதிய வேலையில் மஹாபெரியவா என்னிடம் பேசுகிறார். மஹாபெரியவா பேசியது இதோ உங்களுக்காக.

"என்னடா பத்து வருஷம் கழிச்சு நீண்ட தூரம் வெளியிலே போறோமே. என்ன ஆகுமோ அப்படினு பயப்படறயா? ரயில் ஆடி ஆடி கும்பகோணம் போய் சேரப்போறான்.. நானே கும்பகோணத்தில் உன்னை வரவேற்பேன்..தைரியமா போய் கும்பகோணத்தில் இறங்கு." என்று சொல்லி முடித்தார். மதியம் இரண்டு மணி சுமாருக்கு ரயில் கும்பகோணம் சென்றது.

நானும் ரயில் நின்றவுடன் கீழே இறங்கி