Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III- அமிர்தவர்ஷினி


குரு பூஜை அற்புதங்கள்-8-பாகம்-III-அமிர்தவர்ஷினி

கல்யாணம் பண்ணிப்பார்

வீட்டை கட்டிப்பார்

இது பழமொழி மட்டுமல்ல

நம் எல்லோருடைய

அனுபவ மொழியும் கூட

கடந்த இரண்டு வாரங்களாக அமிர்தவர்ஷினியின் மஹாபெரியவா கனவு தரிசன தாகத்தை எப்படி மஹாபெரியவா தணித்தார் என்பதை பார்த்தோம். பார்த்தது மட்டுமல்லாமல் ஆச்சர்யப்பட்டும் வியந்தும் போனோம். அதற்கு அடுத்த வாரம் அமிர்தவர்ஷினியின் புத்திர பாக்கிய பிரார்த்தனை எப்படி எட்டாவது வார பூஜையின் முடிவில் மஹாபெரியவா அனுக்கிரஹம் பண்ணார் என்பதயும் பார்த்தோம். வியந்தோம். மஹாபெரியவளின் பராக்ரமம் விண்ணளவு உயர்ந்து விஸ்வரூபமாய் நின்றதையும் பார்த்தோம். கை கூப்பியும் வணங்கினோம்

இந்த வாரம் நாம் படித்து அனுபவிக்கப்போவது அமிர்தவர்ஷினியின் நெருங்கிய சொந்தத்தில் உள்ள பெண்ணின் திருமணம் எதிர்கொண்ட பிரச்சனைகள், அடுத்தது என்ன என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றுகொண்டிருந்த பெற்றோர்களின் விவரிக்க முடியாத மன நிலை இத்தனைக்கும் மஹாபெரியவா குரு பூஜை எப்படிப்பட்ட ஒரு தீர்வை கொடுத்தது என்பது அற்புதத்தின் உச்சம். இந்த அற்புதத்தைத்தான் இந்த வார மஹாபெரியவா குரு பூஜை மூலம் படித்து வியக்கப்போகிறோம் தரையில் விழுந்து வணங்கப்போகிறோம்.

அமிர்தவர்ஷினியின் நெருங்கிய சொந்தங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு திடுமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. கல்யாண ஏற்பாடுகள் மிக மும்மரமாக நடந்துகொண்டிருக்கிறது.சொந்த பந்தங்களுக்கெல்லாம் கல்யாண அழைப்பிதழும் அனுப்பியாகி விட்டது. நண்பர்கள் வட்டாரங்கள் கூட தங்களுடைய சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

கல்யாண செலவிற்கான மொத்த பட்ஜெட் தொகை இருபத்தைந்து லக்க்ஷ ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. பெண்ணின் பெற்றோர்கள் அவர்களுடைய ஊரில் இருக்கும் வீட்டு மனையை விற்று வரும் தொகையில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று கணக்குப்போட்டிருந்தார்கள்.

பொதுவாகவே நாம் ஒரு

கணக்குப்போட்டால் தெய்வம்

ஒரு கணக்கு போடும்.

ஒரு கல்யாணம் நீண்ட நாள் நினைவில் நிற்கவேண்டுமானால் கல்யாணத்தில் நடந்த கலாட்டாக்கள், சம்பந்தி வீட்டு மனுஷாள் அடித்த கூத்து பெண்ணின் மாமாவோ பையனின் மாமாவோ பண்ணும் குட்டி குட்டி கலாட்டாக்கள் இவை அத்தனையும் ஒருசேர கொடுக்கும் ஒரு தாக்கம் தான் நெடு நாள் நினைவில் நிற்கும் கல்யாணம்.

ஆனால் அமிர்தவர்ஷினியின் சொந்தக்கார பெண்ணுக்கு நடந்த கல்யாணத்தில் நடந்த அத்தனை கலாட்டாவும் பெண்ணுக்கு மாமனோ அல்லது சம்பந்தி வீட்டாரோ அல்ல. அரசாங்கத்தின் புதிய பொருளாதார சீர்திருத்தம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் மஹாபெரியவா குரு பூஜைக்கு வித்திட்ட கல்யாணம்.

குடும்பமே இடிந்து போய் அமர்ந்திருந்தது. யாருக்கும் கவலைப்படுவதை தவிர வேரு ஒன்றும் தோன்றவில்லை. ஆண்கள் வெளியில் சென்று சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன் என்ற போர்வையில் யோசனை செய்து கொண்டிருப்பார்கள். பெண்களோ வீட்டிற்குள்ளயே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலையும் யோசனையையும் பரிமாறிக்கொள்வார்கள். அங்கே சொல்லமுடியாத வேதனையான அமைதி குடிகொண்டிருந்தது.

இந்த விஷயம் அமிர்தவர்ஷினிக்கு தெரிந்தவுடன் கல்யாணப்பெண் இருக்கும் வீட்டிற்கு விரைந்தாள். தன்னுடைய மூளையையும் கசக்கிபார்த்தாள். விளைவு மஹாபெரியவா குரு பூஜை. நாம் எப்பொழுதுமே கடவுளிடம் பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டுமென்று கேட்கும்பொழுது நம்முடைய பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கும் கடவுளை விட நம்முடைய பிரச்சனை எவ்வளவு பெரியது என்று சொல்லி அந்த கடவுளையே பயமுறுத்துவோம். சிலருடைய பிரார்த்தனைகளும் நம்பிக்கையில்லாத பிரார்த்தநாயகத்தான் இருக்கும்.

இப்படித்தான் கல்யாண வீட்டிலிருக்கும் மற்ற சொந்தங்கள் கேட்க ஆரம்பித்தன. ஒரு குரு பூஜை செய்தால் எப்படி ருபாய் இருபத்திஐந்து லக்க்ஷ ரூபாய் கிடைக்கும். உங்கள் மஹாபெரியவா எப்படி ஒரு சூட்கேசில் வைத்து கொடுப்பாரா என்று கிண்டலும் கேலியும் பேசினார்கள்.

அமிர்தவர்ஷினிக்கு சிரிப்புதான் வந்தது. மனசுக்குள் சிரித்துக்கொண்டே நினைத்துக்கொண்டாள் " இந்த அசடுகளுக்கு இப்போது எதுவும் புரியாது மஹாபெரியவா குரு பூஜை எல்லாம் நடித்தி முடித்த பிறகுதான் தெரியும் என்று நினைத்துக்கொண்டே மணப்பெண்ணின் அம்மாவை அழைத்து மஹாபெரியவா குரு பூஜை பற்றி சொல்லிவிட்டு அந்த பூஜையை நடத்தும் முறையையும் சொல்லிகொண்டுத்தாள். எல்லாவற்றையும் சொல்லிமுடித்து விட்டு அவர்கள் வீட்டலிருந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து செய்த முதல் வேலை என்னை தொலைபேசியில் அழைத்து எல்லா விவரங்களையும் சொல்லி முடித்தாள் அமிர்தவர்ஷினி.

அமிர்தவர்ஷினி சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கல்யாணப்பெண்ணின் அம்மா செய்யப்போகும் மஹாபெரியவா குரு பூஜையுடன் அமிர்தவர்ஷினியும் சேர்ந்து செய்தால் பலன் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையல்லவா. எனக்கு தோன்றியது இதுதான் ஒருவருக்கு இருவர் குரு பூஜை செய்தால் மஹாபெரியவா மனமிரங்கி தன்னுடைய அனுகிரஹங்களையும் ஆசிர்வாதங்களையும் தாராளமாக வழங்குவார்கள் அல்லவா. ஆகவே இருவருக்கும் மஹாபெரியவளிடத்தில் உத்தரவு வாங்கி குரு பூஜை செய்யச்சொன்னேன். ஆனால் நான் ஒன்பது வாரமும் தொடர்பு கொண்டிருந்தது அமிர்தவர்ஷினியிடம் தான்.இனி ஒன்பது வாரமும் அமிர்தவர்ஷினி எனக்கு கல்யாண பிரச்னையின் தீர்வு குறித்து தெரிவிப்பாள்.

வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் ஒன்பது வாரமும் பயணம் செய்து மஹாபெரியவாளின் அற்புத ஆசிர்வாதத்தை அனுபவிப்போம்.

நரசிங்கப்பெருமாள்

தூணிலும் துரும்பிலும் இருந்தது

புராணங்களின் வெளிப்பாடு

மஹாபெரியவா இருந்தது

நம் கண் முன்னே நிகழ்ந்த நிகழ்ந்துகொண்டிருக்கிற

உண்மையின் மூலம் வெளிப்பாடு

இது சத்தியமான உண்மை

முதல் வாரம்:

அமிர்தவர்ஷினி ஏற்கனவே மஹாபெரியவா குரு பூஜையில் முன் அனுபவம் பெற்றிருந்ததால் நான் விளக்கங்கள் அதிகமாக கொடுக்க தேவை ஏற்படவில்லை. தானாகவே முறைப்படி எல்லா ஏற்பாடுகளையும் முதல் நாள் இரவிலேயே செய்து வைத்திருந்தாள்

நிச்சயம் இந்த திருமணத்தை ஒட்டிய பண பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. அதுவும் மஹாபெரியவா அனுகிரஹத்தில் கிடைக்கும் என்பது அமிர்தவர்ஷினியின் அசைக்கமுடியாத ஆழமான நம்பிக்கை. ஏனென்றால் இரண்டு முறை மஹாபெரியவா நான் இருக்கிறேன் என்று சொல்லி ஓடோடி வந்து தன்னுடைய இறை கரத்தை நீட்டி அமிர்தவர்ஷினியை மீட்டிருக்கிறார். அதனால் முதல் வார பூஜையை நம்பிக்கையுடன் நல்ல முறையில் முடித்து விட்டு என்னிடமும் தெரிவித்து விட்டாள்.

இரண்டாவது வாரம்

இந்த வார பூஜையும் மிகுந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் நல்ல முறையில் முடித்து என்னிடமும் தெரிவித்து விட்டாள் அமிர்தவர்ஷினி.

மூன்றாவது வார பூஜை முதல் ஆறாவது வார பூஜை வரை:

உங்களை ஒவ்வொரு வாரமாக அழைத்துச்செல்வதை விட நான்கு வார பூஜையின் மனநிலையை சில வரிகளில் கொடுத்து விட்டால் உங்கள் நேரமும் மிச்சமாகும். நானும் உங்களுடன் சேர்ந்து மஹாபெரியவாளின் அற்புதக்கட்டத்தை நோக்கி வேகமாக பயணப்படுவேன்.

நான்கு வார பூஜையும் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் கழிந்தது. இருந்தாலும் அமிர்தவர்ஷினிக்கு மனதில் ஒரு ஓரத்தில் சிறிது பயமும் தெளிவற்ற சிந்தனையும் இருந்துகொண்டே இருந்தது.

ஆனால் நானும் அவளை மிகுந்த நம்பிக்கையுடன் இருக்குமாறு சொல்லி தைரியமாக இருக்கசொல்லுவேன். எனக்குள் அசைக்கமுடியாத ஆழமான நம்பிக்கை. மஹாபெரியவா நிச்சயம் என்னை கை விடமாட்டார் என்று. அனுபவத்தின் விளைவுதான் இந்த நம்பிக்கை.

நாமெல்லாம் மனிதர்கள் தானே ஏழாவது வார குரு பூஜை

வழக்கமாக ஒவ்வொரு வார பூஜையின் முடிவிலும் வியாழக்கிழமை மாலையில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து விடுவாள்.ஆனால் வியாழன் மாலை வரை தொலைபேசி அழைப்பு வரவில்lலை.வெள்ளி மதியம் வரையும் அழைப்பு வரவில்லை.மஹாபெரியவாளை மனதில் த்யானம் செய்து கொண்டே இருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை ஒருவழியாக தொலைபேசி என்னை அழைத்தது. முதலில் அமிர்தவர்ஷினி தாமதத்திற்கு வருந்தினாள்.

பின்னர் ஒரு சந்தோஷமான செய்தி என்று ஆரம்பித்து சொல்லதொடங்கினாள். ஒரு பெரிய பணக்காரர் தெரிந்தவர்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் பணம் கொடுத்து வாங்கும் லேவா தேவி பிசினஸ் செய்து வருவதாகவும் அமிர்தவர்ஷினியின் சொந்தத்தின் திருமணத்திற்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவுவதாக சொல்லி இருப்பதால் பணப்பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனிமேல் கல்யாண வேலைகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று சொல்லி மஹாபெரியவளுக்கு எங்களுடைய நன்றிகளை சொல்லிடுங்கோ என்று விடை பெற்றாள்.

எட்டாவது வார பூஜை

இந்த வார பூஜையையும் மிக சிறப்பாக செய்து முடித்திருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் சென்ற வாரம் போலவே என்னை வெள்ளி மாலை வரை அழைக்கவில்லை. எனக்கோ மிகவும் கவலையாக இருந்தது. எனக்கு தெரிந்த எந்த பிரச்சனைக்கும் ஒரே வழி மஹாபெரியவாளை நினைத்து த்யானம் செய்ய ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில்