top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-019

வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமா

மற்றவர்களை புரிந்து கொள்ள

உங்கள் இதயத்தை கேளுங்கள்

உங்களை புரிந்து கொள்ள

உங்கள் மூளையை கேளுங்கள்

ஏன் தெரியுமா

மூளைக்கு கணக்கு மட்டும் தான் தெரியும்

இதயத்திற்கு கணக்கையும் தாண்டி

மற்றவர் இதயத்தின் உணர்வுகள் புரியும்

பொதுவாக ஒருவரது பேச்சு நம் எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வரும்.. செயல்களில் ஒரு வேகத்தை கொண்டு வரும். மாமாவின் அனுபவம் நமக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை கொண்டு வருகிறது. வாருங்கள் எப்படி என்று பார்ப்போம்.

வெங்கட்ராமன் மாமா தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது அவர் ஆத்மாவை கேட்டு பேசுகிறார். தன்னுடைய மூளையை கேட்கவில்லை. அதனால் சொல்லும் மாமாவின் கண்களிலும் கண்ணீர் கேட்கும் நம் கண்களிலும் கண்ணீர். மாமாவின் ஒவ்வொரு வார்த்தையும் மஹாபெரியவாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது..

மாமாவின் நெற்றியை பார்த்தாலே தெரியும் மாமா ஒரு தீவிர வைஷ்ணவர் என்று, அப்புறம் ஏன் வைஷ்ணவர் என்ற அடைமொழி என்று கேட்கிறீர்களா?. வைஷ்ணவ என்னும் அடை மொழி மஹாபெரியவாளால் ஒரு அடையாளத்துக்காக கொடுக்கப்பட்டது. மடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெங்கட்ராமன்கள் இருந்தால் எப்படி அழைப்பது?. இப்படிதான்.

மாமாவின் தகப்பனார் மஹாபெரியவாளுடன் நெருங்கி பழகிய பக்தர்களுள் ஒருவர். மாமா ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி நான்காம் ஆண்டிலிருந்து (1934) மஹாபெரியவாளுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். சுமாராக ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களுள் ஒருவராக இருந்தார். இன்றும் இருக்கிறார்.

இந்த ஐம்பத்தி இரண்டு ஆண்டு கால தொடர்பில் மாமா அனுபவித்த அற்புதங்கள் ஏராளம். மஹாபெரியவாளின் மனித நேய பண்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் விதத்தில் இருந்ததற்கான நிகழ்வுகள் ஏராளம். மாமாவின் அனுபவத்தில் இருந்து பகிர்ந்துகொண்ட நிகழுவுகளில் சிலவற்றை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

வழக்கமாக நான் சொல்லுவதுதான். சாகரத்தில் ஒரு துளி தான் இந்த பதிவு. சாகரத்தில் மூழ்க வேண்டுமா இந்த காணொளியை உடனே காணுங்கள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு (1984) பீகாரில் வரலாறு காணாத வெள்ளம்.. அதை ஒரு தேசிய பேரிடராக அன்று இருந்த மத்திய அரசாங்கம் அறிவித்தது. எல்லா மாநிலங்களில் உள்ள மக்களும் உணவு உடை பணம் பொருள் போன்றவற்றை தாராளமாக கொடுத்து உதவினர்.

  1. இந்த நிலையில் மஹாபெரியவா பொது மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார். துணியும் பொருளும் ஏராளமாக மக்கள் கொடுத்தனர்.

  2. வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமாவும் நிறைய துணி வாங்கி மஹாபெரியவா கைகளால் பீகார் மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.அதுவும் பழைய துணிகள் கூடாது. புதியதாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தார். உங்களுக்கு தோன்றலாம் மாமா ஏன் நேராக பீகார் மக்களுக்கு அனுப்பியிருக்கக்கூடாது. . ஏன் மஹாபெரியவா கைகளில் கொடுத்து அது பீகார் மக்களுக்கு போய் சேரவேண்டும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இதோ :

  3. மகாபெரியவா கைகளில் சென்று அது பீகார் மக்களுக்கு போய் சேரும்பொழுது அந்த துணிகள் பல மடங்காக பெருகும் என்பது மாமாவின் நம்பிக்கை. ஏன் தெரியுமா.

  4. அன்று திரௌபதியின் அபய குரலுக்கு கண்ணன் தன கைகளால் புடவையை சுரந்தான். அது போல கண்ணன் அவதாரமாகிய மஹாபெரியவா கைகளால் கொடுத்தால் அது பல மடங்காக பெருகும் என்ற காரணத்தால்.

  5. பழைய துணிகள் கூடாது என்பதில் மாமா உறுதியாக இருந்ததற்கு காரணம் மஹாபெரியவா கைகளுக்கு செல்லும் துணி. பழையதாக இருந்தால் அந்த துணிகளில் என்ன என்ன தீட்டு இருக்குமோ என்ற பயம் தான் காரணம்.

  6. மாமாவின் தலை மேல் இருந்த துணி மூட்டைகள் எப்படி அந்த கொட்டும் மழையில் நனையாமல் இருந்தது (பிளாஸ்டிக் காகிதம் உபயோகப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.). மரங்களில் இருந்து கொத்து கொத்தாக கீழே விழுந்த பாம்புகள் மாமாவை ஒன்றும் செய்யாமல் எப்படி இருந்தன

  7. மாமாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தியின் கால் பாதங்களில் கற்கள் குத்தி ரத்தம் கொட்டும் அளவிற்கு இருந்த காயம் எப்படி மஹாபெரியவாளின் ஒரே பார்வையில் குழந்தையின் பாதம் போல காயம் ஆறி நல்ல நிலையில் மாறியது.

  8. மாமா காஞ்சிபுரம் சென்று சேர எவ்வளவு நாட்கள் ஆனது.

  9. மாமாவை வரவேற்க யாருமே சொல்லாமல் மஹாபெரியவா மடத்தின் வாசலில் மாமாவிற்காக காத்துக்கொண்டிருந்த அற்புதங்கள் எல்லாவற்றையும் இந்த காணொளியை கண்டு களியுங்கள்.

மஹாபெரியவா என்னும் ஒரு சொல்

யார் சொல்கிறார்கள் என்பதல்ல

யார் சொன்னாலும் சொல்லின் மஹிமை

பிரபஞ்சத்தை எட்டும்

நினைத்ததை கொடுக்கும்

இது சத்தியம் என்பது உங்களுக்கு புரியும்

பாருங்கள் இந்த காணொளியை

சதாராவில் நடந்த அற்புதம்:

மஹாபெரியவா வட இந்தியாவில் சாதார என்னுமிடத்தில் முகாமிட்டிருந்தார். அப்பொழுது வெங்கட்ராமன் மாமா சதாராவிற்கு சென்று மஹாபெரியவளை தரிசிக்க வேண்டுமென்ற ஆசை. மாமாவின் தாயார் மஹாபெரியவளுக்கு அமாவாசை நாளில் ஸ்னானம் செய்ய கங்கை ஜலம் கொடுக்க எண்ணி மாமாவிடம் ஒரு சொம்பில் கங்கை நீரை நிரப்பி கொடுத்தனுப்பினார்.

மாமாவும் சாதார சென்று மஹாபெரியவளை தரிசனம் செய்து விட்டு தன்னுடைய அம்மா கொடுத்த கங்கை நீரை மாபெரியவாளிடம் கொடுத்தார். .மஹாபெரியவாளும் சொம்பு நீரை வாங்கி வைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் மஹாபெரியவா வெளியில் வரவே இல்லை. யாருக்கும் ஒன்றும்மபுரியவில்லை. வெங்கட்ராமன் மாமாவும் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது மாமாவின் நண்பர் ஒருவர் மாமாவிடம் கேட்டார். உங்கள் அம்மா கங்கை நீரை மஹாபெரியவளுக்கு எதற்கு கொடுத்தார்.என்று. அதற்கு மாமா சொன்னார் அமாவாசையில் ஸ்னானம் செய்ய. என்று

அதற்கு நண்பர் சொன்னார் இப்பொழுதான் அம்மாவாசை பிறக்கிறது.நேரம் சரியாக மூன்று மணி இருபத்தி இரண்டு நிமிடங்கள் 3.22 P.M. வெங்கட்ராமன் மாமாவின் தாயார் கொடுத்த கங்கை நீரை அமாவாசையில் குளிக்க வேண்டும் என்ற ஒரு பக்தையின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

இதை என்னவென்று சொல்வது. ஒரு பக்தையின் வேண்டுகோளை தன்னுடைய தலை மேல் ஏற்று பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா நிறைவேற்றுகிறார் என்றால் அவருடைய எளிமையை என்னவென்று சொல்வது.

தன்னுடைய பக்தன் பெரியவனா சிறியவனோ

அவனுடைய வேண்டுகோளை அவன் திருப்தி

அடையும் வகையில் நிறைவேற்றுவது என்பது

எளிமையின் உச்சம்

பரத்துவம் இருந்தால் எளிமை இருக்காது

எளிமை இருந்தால் பரத்துவம் இருக்காது

இந்த இரண்டும் ஒரு சேர அமையப்பெற்ற

மஹாபெரியவா நின் திருவடி சரணம்

(இங்கு பரத்துவம் என்பதும் இறைவனின் மேன்மையை குறிப்பது)

இந்த காணொளியை காணும் பொழுது உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்.

  1. கண்கள் கலங்கும்.

  2. மேன்மையும் எளிமையும் சேராத ஒன்று. நீங்களும் இது இரண்டுடன் கலந்து விடுவீர்கள்,

  3. ஒரு மேலை நாட்டுக்காரர்களுக்கு ஆதி சங்கரரையும் அத்துவைதயும் ஒரு விசிஷ்டாத்வைதியை சொல்ல சொல்லுவது எவ்வளவு அழகான ஒரு அணுகு முறை என்பதை அறிந்து அழுது விடுவீர்கள்.

  4. இந்த காணொளியை கண்ட பிறகு உங்கள் மனம் மிகவும் கனத்து இருக்கும் பல மணி நேரங்களுக்கு.

  5. ஒரு மனிதனுக்கு தேவையான எளிமை என்ன மற்றவர்களை எப்படி அணுக வேண்டும் என்று நன்றாக புரியும்..

நாம் ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் இருந்து ஒரு புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்கிறோம். வைஷ்ணவ வெங்கட்ராமன் மாமாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டால் கூட வாழ்க்கையில் கரையேறி விடுவோம். அதுதான் ஆழமான பக்தி யதார்த்தத்தின் அணுகு முறை நேர்மை மலையை தூக்கும் மஹாபெரியவா நம்பிக்கை இவற்றில் ஒன்றை கற்றால் கூட போதுமே.

நாமும் வைஷ்ணவ வெங்கட்ராம மாமாவை போல மற்றவர்களுக்கு வழி காட்டும் இன்னொரு மஹாபெரியவா பக்தராகி விடுவோம்.


https://www.youtube.com/watch?v=ADkOrkWTUyo&t=1255s

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page