Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி


குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி

காயப்படுத்துவதற்க்கு பலர் இருந்தாலும்

சிலர் மருந்தாக இருப்பதால்தான்

நம் வாழ்க்கை

அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது

சரிதானே நான் சொல்வது

நாமும் ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவாளின் அற்புதச்சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறோம். எவ்வளவு நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காமல் சின்ன குழந்தைகள் மாதிரி நனைந்து சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டே இருக்கிறோம். மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் அல்லவா. துன்பங்களும் கவைலைகளும் தனக்கு. இன்பங்களும் சந்தோஷங்களும் நமக்கு. என்ற ஒரு பாசமுள்ள தாய் மஹாபெரியவா.

பசிக்கு சோறு போடுபவள் தாய்

பசித்து விடுமோ என்ற கவலையில்

பார்த்து பார்த்து உணவளிப்பவர்

நம்முடைய மஹாபெரியவா

தாய்க்கும் மேலே ஒருவர் உண்டென்றால்

அது நம் மஹாபெரியவா தான்

இந்த வார அற்புதச்சாரலின் நாயகி சிவபார்வதி. அன்னை பார்வதிக்குள்ள அத்தனை குணங்களும் ஒரு சேர வாய்க்கப்பெற்றவள். விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணைப்பார்த்து நடக்கும் ஒரு பெண். தனக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் எதையும் பாராட்டாமல் மற்றவர் துன்பங்களுக்கு இறைவனிடம் முறையிட்டு அழும் ஒரு பெண். வயதில் மூத்தவர்களுக்கும் அனுபவசாலிகளுக்கும் உரிய மரியாதையை கொடுத்து அவர்களின் ஆசியையும் பெற்று சமுதாயத்தில் நன் மதிப்பையும் பெற்ற ஒரு பெண்.

பொதுவாக வீட்டில் நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படித்தான் சமுதாயத்திலும் நம்முடைய பழக்கவழக்கங்கள் இருக்கும். பெற்றோர்களுக்கு கொடுக்கும் மரியாதை அவர்களின் நலனில் காட்டும் அக்கறை இத்தனை நல்லகுணங்களையும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் ஒரு பெண் சிவபார்வதி.

கைலாயத்தில் சிவபெருமானுடைய பார்வதியை பார்த்திருக்கிறோமோ இல்லையோ நம்முடைய நாயகி சிவபார்வதி கைலாய பார்வதியை ஒத்த பெண். ஆனால் ஒன்று பாத்திடீர்களா அத்தனை பிரபஞ்ச சக்தியையும் ஒருசேர பெற்ற அந்த கடவுளே மனிதனாக அவதரித்து விட்டால் மானுட இனத்தின் அத்தனை வேதனைகளையும் அந்தந்த யுகத்தின் சொல்லவொண்ணா துன்பங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது மனிதப்பிறவிக்கு வகுக்கப்பட்ட இலக்கணம்.

நம் கண் முன்னே காட்சியளிக்கும் காட்சிகள் எத்தனை எத்தனை. இராமாயணத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ராமச்சந்திர மூர்த்தியின் அவதாரமாகிய ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின் மனைவி எடுத்த அவதாரம் ஸ்ரீ ராமனின் இல்லத்தரசி சீதா தேவி.

இவர்கள் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் பட்டியலிட்டால் அது முடிவே இல்லாத பட்டியலாகி விடும். ஸ்ரீமன் நாராயணன் அவதரித்த கண்ணன் என்னும் குழந்தை பட்ட கஷ்டங்கள் எத்தனை பிறந்தது சிறைச்சாலையில். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே தன்னுடைய வளர்ப்புத்தாயை சென்றடைந்தது. இன்னும் எத்தனையோ துன்பங்கள்.

நல்ல விஷயங்கள் மனதில்

கல்வெட்டுக்கள் போல பதியவேண்டுமா

ஒரே விஷயத்தை பலமுறை

சிந்தித்து படியுங்கள்

நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. மஹாபெரியவாளின் அற்புதங்களை விட்டுவிட்டு இடையே எதையோ எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்கள் அல்லவா. நமக்கு பிடித்ததை படிக்கும் பொழுதுதானே நாலு நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். எழுதும் எனக்கும் எழுதின ஒரு திருப்தி படிக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்ட ஒரு திருப்தி. விஷயங்கள் தெரிந்தே இருந்தாலும் மறுபடியும் தெரிந்துகொள்வதில் தப்பிலேயே.

இப்படித்தான் நம்முடைய கலாச்சார பொக்கிஷங்களை எல்லாம் நம்முடைய மூதாதையர்கள் அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் கவனமாக எடுத்துச்சென்று சேர்த்தார்கள். நாமும் வரும் தலைமுறையினருக்கு கலாச்சார பொக்கிஷங்களை எடுத்துச்சென்று சேர்க்கவேண்டாமா. இது நம் கடமையும் கூட. அல்லவா.

நாமும் பல கடவுள் அவதாரங்களை பற்றி படித்து வணங்கி நம்முடைய அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுகிறோம் . என்றாவது நாம் யோசித்திருப்போமா? எதற்கு இவ்வளவு அவதாரங்கள் என்று. இன்று உங்களுடன் இதற்குண்டான விடையை பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாங்கும் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு கூட உபயோகிக்கும் முறை என்று ஒரு புத்தகம் தருகிறார்கள் (operative manuals). மனிதன் வாழ்க்கை எவ்வளவு முக்கியம்.அதற்கு வாழும் வழியும் வாழும் முறையும் என்று எந்த மதமாவது சொல்லிக்கொடுக்கிறதா. இல்லையே. நம்முடைய இந்து மதம் ஒன்றுதான் சனாதன தர்மத்தை புராணங்கள் இதிகாசங்கள் மூலம் வாழும் கலையாக போதிக்கிறது.

போதிப்பது மட்டுமல்ல இதிகாசங்கள் புராணங்கள் போதித்த தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.. தர்மத்தை கடைபிடித்து சகோதர பாசத்துடன் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன் ராமாயணத்தின் நாயகன். விளைவுகள் நமக்கெல்லாம் தெரியும்.. அதர்மத்தை கடைப்பிடித்து சகோதர்களை கூட பகைவர்களாய் நினைத்து வாழுந்து காட்டிய துரியோதனன். விளைவுகள் நாம் அறிந்ததே.. உண்மையில் மஹாபாரதத்தில் நாயகன் கண்ணன். சூத்திரதாரி

இதிகாசம், புராணம் என்றல் என்ன. கதையின் நாயகன் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட காவியங்கள் இதிகாசங்கள். புராணங்கள் என்பது கதையின் நாயகன் வாழ்ந்து மறைந்து பிற்காலத்தில் எழுதப்பட்டால் அது புராணம். இதன் மீதியை அடுத்த வாரம் பார்ப்போம்.

இதற்குமேல் சிவபார்வதி புராணம்

இப்பொழுது சிவபார்வதியின் வாழ்க்கைக்கு வருவோம். சிவபார்வதி ஒரு மென்பொறியாளர்.இவர் அண்ணா பல்கலை கழகத்தின் அங்கமான கல்லூரி ஒன்றில் படித்து மென்பொறியாளர் பட்டம் பெற்றவர். இவர் கல்லுரியிலேயே முதல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த பெண்.

சிவபார்வதி சர்வதேச புகழ் பெற்ற கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கப்பெற்று நல்ல முறையில் வேலை பார்த்து வந்தாள். மிகவும் சீராக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. வாழ்க்கை எப்படி சீராக செல்லமுடியும். வாழ்க்கை என்றாலே ஏற்ற தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் நிறைந்ததுதானே. வாழ்க்கை மேடு பள்ளங்களுக்கு காரணமான கர்ம வினைகள் எப்பொழுது எந்த திசையிலிருந்து நம்மை தாக்கும் என்று தெரியாது.

ஆனால் வாழ்க்கையை புரட்டிப்போட்டு சென்ற பின் அதற்கு நாம் வைக்கும் பெயர் கர்ம வினை உண்மை தானே. மஹாபெரியவாளே இந்த கர்மவினையை அனுபவித்திருக்கிறார். இதை பற்றி பின்னர் ஒரு முறை எழுதுகிறேன்.

சிவபார்வதியின் கர்மவினை அவளை எப்படி தாக்கிச்சென்றது என்பதை பார்ப்போம்.சிவபார்வதிக்கு ஒரு குணம் உண்டு. எத்தனை பெரிய பதவியிலிருக்கும் ஆளாக இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களும் செயல்களும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சரியாக இருக்குமேயானால் அதை தவறு என்று மற்றவர்கள் சொன்னால் அதை தடுத்து தன்னுடைய எண்ணங்களும் செயல்களும் சரியே என்று சாதிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்.

இப்படித்தான் ஒரு முறை தன்னுடைய அலுவலகத்தில் தனக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரியை தன்னுடைய செயல் சரியே என்று தன்னுடைய மனசாட்சிப்படி தன்னை நிலைநாட்டிவிட்டாள். இதற்கு கிடைத்த பரிசு சிவபார்வதி தன்னுடைய வேலையே இழந்தாள். காலை தனக்குரிய கார் வந்து தன்னை ஏற்றிக்கொண்டு அலுவலகம் சென்றது. மாலையில் அதே கார் வீட்டில் வந்து இறுதியாக இறக்கிவிட்டு சென்றது.

அன்றிலிருந்து சுமார் ஓராண்டு காலம் காலம் வேலையை இழந்து சமுதாயத்தால் கேலி கிண்டல் பேச்சுக்கு ஆளாகி வாழ்க்கை எல்லையின் முடிவுக்கே சென்று விட்டாள் இந்த வேலையை இழந்து ஓராண்டு காலம் சிவபார்வதி பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சொல்லி மாளாது.

இந்த ஓராண்டு கால சோதனைகள் அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் வரும் வாரங்களில் எப்படி மஹாபெரியவளின் அறுபுத்தசாரல்கள் பதிலளித்தன என்பதை காண்போம். இந்த வாரம் ஓராண்டு ஆண்டு காலம் வேலையற்ற பெண்ணாக வாழ்ந்தவளுக்கு அத்தனை கட்டுப்பாடுகளை கடந்தும் தளர்த்தியும் மஹாபெரியவா எப்படி வேலை பெற்று தந்தார் என்பதுதான் இந்த வாரம் நாம் நனையப்போகும் அற்புதசாரல்கள்.

சாருகேசி

சிவபார்வதி வாழ்க்கையின் உச்சகட்ட சோகத்திலும் ஏமாற்றத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த காலம். இந்த சமயத்தில் இறை நம்பிக்கை முற்றிலுமாக இழந்து சமுதாயம் என்றாலே மற்றவர் தோல்வியில் இன்பம் அனுபவிக்கும் கும்பல்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். சிவபார்வதியின் கல்லூரி கால தோழி. மிகவும் நெருங்கிய சினேகிதி. அந்த தோழியின் பெயர் சாருகேசி. நட்புக்கு இலக்கணமே சாருகேசிதான் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையில்லை.

சாருகேசி தன்னுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி என்னை தொடர்பு கொண்டாள். தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவாகி பூஜை செய்து கொண்டிருந்தாள்.

சாருகேசியின் விவரங்களை ஏன் இவ்வளவு முன்பே அறிமுகப்படுத்துகிறேன் என்று நீங்கள் நினைப்பது என்னால் உணரமுடிகிறது. இதற்கு காரணம் நட்புக்கு இலக்கணமான சாருகேசிதான் சிவபார்வதி மனம் துவண்டு நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில் ஊக்கம் கொடுத்து தன்னை ஒரு உதாரணமாக காட்டி ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவா குரு பூஜை செய்ய வைத்தாள்.

சாருகேசி இந்த முன்னோட்ட அறிமுகத்திற்கு தகுதியானவள் என்பது என் கருத்து. சுயநலத்தை மையமாகக்கொண்டு வாழும் இக்காலத்தில் மற்றவர் நலனிலும் அக்கறை கொண்டு வாழும் ஒரு புனித புண்ணிய ஆத்மா சாருகேசி.

சாருகேசி ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய பூஜையின் முனேற்றத்தை தெரிவித்து விட்டு தன்னுடைய தோழி சிவபார்வதியின் இத்தனை நேரம் நீங்கள் படித்த அதனை விவரங்களையும் என்னிடம் சொல்லி விட்டு மஹாபெரியவாளிடம் குரு பூஜை உத்தரவு வாங்கிக்கொடுக்குமாறு வேண்டினாள்.

நானும் சரியென்று சொல்லி சிவபார்