Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-029


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-029

“தொண்டுள்ளம் படைத்தவன்

இதயத்தில்

இறைவன் அடக்கம்”

நாமெல்லாம் வாரந்தோறும் மஹாபெரியவாளின் அற்புதங்களை படித்து அறிந்து வியப்பது மட்டுமல்ல சமயத்தில் கண்களில் கண்ணீரும் பெருக்கெடுத்து விடுகிறது அழுதும் விடுகிறோம். நானும் அப்படிதான் ஒவ்வொரு அற்புதங்களையும் எழுதும்பொழுது என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன்.

அப்படியொரு அற்புதம் தான் இந்த வியாழக்கிழமை அனுபவிக்கப்போகிறோம். ஒவ்வொரு அற்புதங்களையும் நாம் படிக்கும்பொழுது ஆத்மார்த்தமாக படித்தாலும் கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருவது மட்டுமல்ல. மஹாபெரியவளை தரிசனம் செய்த புண்ணியமும் நிச்சயம் கிடைக்கும்.இது சத்தியம்.

நகரம் கும்பகோணம்

நேரம்:காலை

சதாசிவம் ஜானகி தம்பதியினர் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருமே மஹாபெரியவாளின் அத்தியந்த பக்தர்கள்.. ஒவ்வொரு அனுஷ நக்க்ஷத்ர தினத்தன்றும் காஞ்சி பெரியவாளை தரிசனம் செய்ய கிளம்பிவிடுவார்கள். புறப்படுவதற்கு முன் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மஹாபெரியவா இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொண்டு கிளம்பி விடுவார்கள். காஞ்சி கிளம்பும்பொழுதேல்லாம் முதல் நாள் இரவே கிளம்பி விடுவார்கள்.

இவர்கள் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகனிடம் சில காலம் இருந்து விட்டு அப்பொழுதுதான் கும்பகோணத்திற்கு திரும்ப வந்தார்கள். மறு நாள் அனுஷ நக்ஷத்ரம். (அனுஷ நக்ஷத்ரம் மஹாபெரியவா பிறந்த நக்ஷ்த்ரம்) மறு நாள் காஞ்சிக்கு சென்று மஹாபெரியவாளை தரிசனம் செய்ய முடிவு செய்தார்கள்.

மறு நாள் அதிகாலையில் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு வெளியில் கடை வீதிக்கு சென்று பழங்களும் புஷ்பங்களும் வாங்கி வர சதாசிவம் வீட்டிற்கு வெளியில் வந்தார். காரணம் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். ஒரு கடை கூட திறந்திருக்க வில்லை. வீதி வெறிச்சோடிக்கிடந்தது. வாசலில் இருந்த கீரை வியாபாரி சதாசிவத்தைப்பார்த்து கேட்டார். என்ன சாமி காலையிலேயே கையிலே பையோட கிளம்பிடீங்க.

சதாசிவம் சொன்னார் கடைக்கு போய் பழங்கள் வாங்க வேண்டும் ஆனால் கடைவீதி வெறிச்சோடிக்கிடக்கிறது. காரணம் தெரியவில்லை என்று கீரை வியாபாரியிடம் சொன்னார்.அதற்கு கீரை வியாபாரி சதாசிவத்திடம் சொன்னார்.ஏதோ பட்டணத்திலே அரசியல் தலைவரை அடிச்சிட்டாங்களாம்

ஆகவே கடைகளை தமிழ்நாடு முழுவதும் அடைக்கச்சொல்லிட்டாங்க. பஸ்களையும் நிறுத்திட்டாங்க. வெளியிலே போகாதீங்க ஐயரே. எவனாவது கல்லை எரிந்து மண்டை உடைஞ்சிடப்போகுது. வீட்டுக்குளே போங்க ஐயரே என்று அறிவுரை சொல்லிவிட்டு அந்த கீரை வியாபாரி தன்னுடைய ஊரான புளியஞ்சேரிக்கு கால் நடையாகவே கிளம்பிவிட்டான்.

சதாசிவம் ஐயர் வெறும் பையுடன் வீட்டிற்குள் சென்றார். பதறிய மனைவி ஜானகி என்னங்க வெறும் பையோட வரீங்க. நாம காஞ்சிபுரம் போகலையா என்று கேட்டவுடன் சதாசிவம் பிரச்சனைகளை விவரித்து என்ன செய்வது என்று கவலை பட்டுக்கொண்டிருந்தனர்.

மஹாபெரியவாளிடம் விண்ணப்பம்

இருவரும் மஹாபெரியவா முன் உட்கார்ந்து இப்படி அயெடுத்தே பெரியவா. இப்போ நாங்கள் எப்படி காஞ்சிக்கு வந்து உங்களை தரிசனம் செய்யப்போகிறோம் என்று கவலைப்பட்டு மஹாபெரியவாளை நினைத்து த்யானம் பண்ணிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்கவே சதாசிவம் வீட்டின் வாசலுக்கு வந்து யாரென்று பார்த்தார்.

வாசலில் ஒரு வெள்ளை நிற அம்பாசிடார் காரிலுருந்து தும்பைப்பூ வெண்மையில் வேஷ்டியும் சட்டையும் அணிந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தார். சதாசிவம் ஐயரை பார்த்தவுடன் தன்னை சங்கரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தன்னுடைய மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.

தான் அழைத்த காரணத்தை சொன்னார். தாங்கள் தஞ்சாவூரிலிருந்து வருவதாகவும் தன்னுடைய மனைவிக்கு தாங்க முடியாத தலைவலி வந்துவிட்டதாகவும் ஒரு டிகிரி காபி குடித்தால் தலைவலி சரியாகி விடும். ஆனால் எல்லா ஹோட்டல்களும் மூடியிருந்தது . அதான் உங்க வீட்டிலே ஒரு கப் ஸ்டராங் காபி கொடுத்தேள்னா அவளுக்கு உடனே தலைவலி போய்டும் குடுக்கறேளா? என்று கேட்டவுடன் சதாசிவ ஐயருக்கு சங்கர ஐயரை பார்த்தவுடன் விருந்தே வைக்கலாம் போலிருந்தது.

அதுக்கென்ன உள்ளே வாங்கோ என்று உள்ளே அழைத்து உட்காரவைத்துவிட்டு மனைவி ஜானகியை அழைத்து அறிமுகப்படுத்தினார். ஜானகி மாமிக்கு சரியான ஏமாற்றம். காஞ்சிபுரம் போக முடியவில்லையே மஹாபெரியவா ஏதாவது வழி காட்டுங்கோ என்று தனுக்குள் சொல்லிக்கொண்டே சங்கர ஐயர் கேட்டபடி தம்பதியர் இருவருக்கும் நல்ல ஸ்ட்ராங்கான காபியை கொடுத்தார்கள். காபி குடித்துக்கொண்டிருக்கும்பொழுதே சதாசிவ ஐயர் எந்த ஊருக்கு பயணப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். என்று கேட்டவுடன் சங்கர ஐயர் சொல்ல ஆரம்பித்தார்.

தாங்கள் தஞ்சாவூரிலிருந்து காஞ்சிபுரம் சென்று கொண்டிருப்பதாயும் வழியில் கும்பகோணத்தில் காபி நன்னா இருக்கும் குடிக்கலாம் என்று பார்த்தால் ஒரு ஹோட்டலும் திறந்திருக்க வில்லை. அதுதான் உங்காத்திலே காபி வாங்கி குடித்தோம்.

சதாசிவ ஐயர் கேட்டார் காஞ்சியில் சொந்தகார மனுஷாள் இருக்காளா என்று. அதற்கு சங்கர ஐயர் கேட்டார் சொந்தமா எனக்கு காஞ்சயில் இருக்கும் ஒரே சொந்தம் மஹாபெரியவா தான்.நாளைக்கு அனுஷம் அதுனாலே காஞ்சிபுரம் கிளம்பினோம் என்று தன்னுடைய பதிலை சொல்லி முடித்தார்.

சதாசிவ ஐயரும் மனைவி ஜானகியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவரின் பார்வையும் கேட்டுவிடலாம் என்று ஆமோதித்தது .சதாசிவ ஐயரும் ஆரம்பித்தார் நாங்களும் காஞ்சிபுரம் கிளம்பலாம் என்று பிராயர்த்தனப்பட்டோம். ஆனால் இன்று ஏதோ பிரச்னையாம். மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தொந்தரவு இல்லேனா நாங்களும் உங்களுடன் மஹாபெரியவாளை தரிசனம் பண்ண வரலாமா என்று கேட்டதுதான் தாமதம் சங்கர ஐயர் சொன்னார் பேஷா வாங்கோ காரிலே நிறைய இடம் இருக்கு.

ஜானகி மாமிக்கு சொல்லவேண்டுமா ஒரு பையில் கிடைத்த துணிகளை எடுத்து அடைத்துக்கொண்டு கிளம்பத்தயாரானர்கள். மஹாபெரியவா தரிசனமென்றால் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்களே பக்தர்கள். உடம்புக்கும் வயித்துக்கும் மஹாபெரியவா தரிசனத்திற்கு பிறகு தான் என்று பக்தியின் உச்சத்தில் இருந்தனர் அந்த கால பக்தர்கள்.

சங்கர ஐயர் தம்பதியும் சதாசிவ ஐயர் தம்பதியும் நாலுபேரும் காரில் காஞ்சிபுரத்திற்கு கிளம்பினார்கள். நாலு பேருக்குமே சொல்ல முடியாத சந்தோஷம். சங்கர ஐயருக்கு மஹாபெரியவளை தரிசனம் பண்ண சதாசிவ ஐயர் குடும்பத்திற்கு உதவிய சந்தோஷம். சதாசிவ ஐயருக்கோ காஞ்சிபுரத்திற்கு போக வழியே இல்லை என்று இருந்த நிலையில் மஹாபெரியவா அனுகிரஹத்தில் நிச்சயம் நாளை அனுஷ தரிசனம் என்பதில் சந்தோஷம்.

மஹாபெரியவா தரிசனமென்றால் உயிரை கூட துச்சமாக மதித்த பக்தர்களும் இருந்தனர். இளங்காலை பொழுது குளுமையான கற்று வீசியதில் சதாசிவ ஐயருக்கு தூக்கம் கண்ணை சொருகியது. எல்லோருக்குமே தூக்கம் கண்ணை சொருகியது.. கார் சேத்தியாத்தோப்பை கடந்தது. சதாசிவ ஐயர் தான் தூங்கப்போவதாக சொல்லிவிட்டு நன்றாக தூங்கி விட்டார். வழியில் அங்கங்கே காரை நிறுத்தி காபியும் வயித்துக்கு கொஞ்சம் இட்லி தோசையும் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் கார் பயணித்தது.

எல்லோருமே நன்றாக தூங்கி விட்டனர். இரவு பதினோரு மணிக்கு மடத்தின் வாசலில் கார் வந்து நின்றது.. கார் ஓட்டுநர் எல்லோரையும் மடம் வந்துவிட்டது எழுந்திருங்கள் என்று சொல்லி எழுப்பிவிட்டார். ஸ்ரீ மடத்தின் காவலாளி ஓடி வந்து யார் இந்த நேரத்தில் என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு கதவை திறந்தார்.

ஆனால் சங்கர ஐயர் நீங்கள் மடத்துக்குள் போய் சிரமப்பரிகாரம் பண்ணிக்கோங்கோ நான் பக்கத்துதெருவில் ஒரு குடும்ப நண்பர் இருக்கிறார். அவரை பார்த்துவிட்டு நாளைக்கு காத்தலே வந்துடறோம் என்று சொல்லி பதிலுக்கு கூட காத்திருக்காமல் மிக விரைவாக சரேலென்று கிளம்பி விட்டது. சதாசிவ ஐயரும் ஜானகி மாமியும் மடத்தின் உள்ளே சென்று அவர்களுக்கு கொடுத்த இடத்தில படுத்துக்கொண்டனர்.

அந்தக்காலத்தில் மஹாபெரியவா தரிசனத்திற்கு காஞ்சிக்கு கிளம்புபவர்கள் ஒரு அசாத்திய நம்பிக்கையுடன் கிளம்பிவிடுவார்கள் . சாப்பாட்டை பற்றி கவையில்லை தூங்கும் வசதியை பற்றி நினைக்கவே மாட்டார்கள். ஏன் தெரியுமா அகால வேலையிலும் அரிசி உப்புமா கிடைக்கும் இல்லையா ஜலத்தில் போட்ட சாதமும் தயிரும் தொட்டுக்க லட்டு தூளும் கிடைக்கும். அடடா அதுவே தேவாமிர்தமா இருக்கும்.

சதாசிவ ஐயரும் அவர் மனைவி ஜானகி மாமியும் கொஞ்சம் வயிற்றுக்கு சாப்பிட்டு விட்டு அங்கே ஒரு இடத்தில படுத்து தூங்கினர். மறு நாள் காலை விஸ்வரூப தரிசனம் பார்த்துவிட்டு காலை உணவருந்தி விட்டு மற்ற பக்தர்களுடன் தரிசம் செய்ய வரிசையில் நின்றனர்.

வரிசையில் நின்று கொண்டே நேற்று கூட வந்த சங்கர ஐயரை தேடினர் சதாசிவம் தம்பதியர்.சுற்றும் முற்றும் பார்த்து தேடும்போது இவர்கள் மஹாபெரியவளை நெருங்கி விட்டனர். ஸ்ரீ கார்ய மனுஷாலில் ஒருவர் சதாசிவ ஐயரை பார்த்து யாரை தேடுகிறீர்கள். கொஞ்சம் தரிசனத்தை பாருங்கோ. உங்க கூட வந்தவர் எங்கும் போயிருக்க மாட்டார் என்று சொல்லிக்கொண்டிரும்பொழுதே மஹாபெரியவா முன்னால் வந்து விட்டனர்.

மஹாபெரியவா நிமிர்ந்து பார்த்து என்னப்பா சதாசிவம் கார்லே வந்தபோலே இருக்கே. நன்னா தூங்கிண்டு வந்தாயோ என்று கேட்டவுடன் சதாசிவம் தம்பதியினர் அதிர்ந்து போனார்கள்.யாரும் சொல்லாமலே மஹாபெரியவளுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தனர்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு சதாசிவ ஐயர் சொன்னார். மாநிலம் பூரா போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு பஸ் கூட ஓடவில்லை. அப்பறம் தான் சங்கர ஐயர் என்பவர் அவருடைய காரில் கூட்டிண்டு வந்தார். எல்லாம் உங்க அனுக்கிரஹம் தான் பெரியவா என்று சொல்லி தங்களுடைய நன்றிகளை சமர்ப்பித்துக்கொண்டிருந்தனர்.

மஹாபெரியவா சொன்னார் சங்கரனாவது கிங்கரனாவது நான் என்னடா பண்ணேன். ஏதாவது கற்பனை பண்ணிண்டு உளறாதே. இருந்தாலும் சதாசிவ ஐயரும் மாமி ஜானகியும் ஸ்ரீ மடம் பூரா தேடிப்பாத்தாச்சு. எங்கயும் சங்கர ஐயரை காணோம். அப்பொழுது அவர்கள் கண்ணில் பட்டார் நேற்று இரவு காவலுக்கு இருந்த மடத்தின் காவலாளி.

அவரிடம் விசாரித்தார்கள்.ஏன் வாட்ச் மேன் நேற்று ராத்திரி எங்களை ஒருவர் காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டாரே. நீங்கள் கூட வந்து கதவை திறந்து விடீர்களே. .அவரை பார்த்தீர்களா என்று கேட்டவுடன் வாட்ச் மேன் சொன்னார்.என்ன சொல்லிரிங்க நான் நீற்று டுட்டியிலேயே இல்லையே.நான் எப்படி வந்திருக்க முடியும்.