Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-9-பாகம்-III- சிவபார்வதி


குரு பூஜை அற்புதங்கள்-9-பாகம்-III-சிவபார்வதி

“மற்றவர்களை அழ வைத்து பார்ப்பவர்களுக்கு

தெரிவதில்லை கண்ணீரோடு சேர்ந்து

அன்பும் கரைகிறது என்று”

சென்ற வாரம் சிவபார்வதியின் வேலையில்லா பிரச்னையால் சமுதாயம் அவளை எப்படியெல்லாம் சீரழித்தது. இந்த சமுதாயபிரச்னைக்கு மஹாபெரியவா எப்படி முற்றுப்புள்ளி வைத்தார்?. எப்படி ஒன்பதாவது வார மஹாபெரியவா குரு பூஜை முடிவின் விளிம்பில் வேலை வாங்கிக்கொடுத்து சிவபார்வதியின் சமுதாயபிரச்னைக்கு இறுதிச்சடங்கு நடத்தினார் என்பதை நாமெல்லாம் படித்து ஆனந்தம் அடைந்தோம்.

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது கன்னிப்பெண்ணாக இருந்த சிவபார்வதியை எப்படி மணப்பெண்ணாக மஹாபெரியவா மாற்றினார் என்பதை அறிந்து மீண்டும் ஆனந்தம் அடையப்போகிறோம்.

சிவபார்வதிக்கு ஒரு தங்கை உண்டு. சிவபார்வதிக்கு திருமணம் முடிந்தால்தான் இன்னொரு பெண்ணுக்கு திருமணம் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தின் தீ கொழுந்து அடிக்கடி சிவபார்வதியை தீண்டிச்செல்கிறது. இந்தக்கொடுமையிலிருந்து விடுதலை வேண்டுமானால் சிவபார்வதிக்கு திருமணமோ அல்லது ஒரு வேலையோ அமைய வேண்டும்.

மஹாபெரியவா சிவபார்வதிக்கு வேலையும் வாங்கிக்கொடுத்து விட்டார். அடுத்தது திருமணம் தானே. ஒரு பிரச்சனை முடிந்து விட்டால் அடுத்தடுத்து பிரச்சனைகள் முளைப்பதுதானே வாழ்க்கை. வேலை பிரச்சனை முடிந்தவுடன் திருமனப்பிரச்சனை.

சிவபார்வதிக்கு வேலை இல்லாத சமயத்தில் நிறைய வரன்கள் வந்தும் வேலையில்லாத காரணத்தால் திருமணம் கை கூட வில்லை. அப்பொழுது சிவபார்வதியின் தங்கைக்கு வேலை கிடைத்து திருமணத்திற்கு வரங்களும் அமைய ஆரம்பித்துவிட்டது. ஆனால் சிவபார்வதி என்னும் அக்கா ஒரு தடையாக இருந்தாள்.

நினைத்துப்பாருங்கள். இதில் சிவபார்வதியின் தவறு என்ன. வேலை கிடைக்காதது அவள் குற்றமா.? கல்லுரியிலேயே முதல் மாணவி. இருந்தும் ஏன் இத்தனை மன வேதனைகள். வாழ்க்கையில் ஏன் வாழ்க்கையில் இப்படியொரு கொடுமையான நிகழ்வுகள்.

இதுதான் கர்ம வினையோ?. நிச்சயம் அதுதான். இதற்காகத்தான் ஒரு குருவின் கரங்களை பற்றி வாழ்க்கையில் பயணம் செய்யவேண்டும். நம்முடைய கர்மாவையும் தாண்டி இருக்கும் சுகிர்தம் மஹான்களின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும். மஹான்கள் முன் ஜென்ம கர்மாவை மாற்ற மாட்டார்கள். ஆனால் அதன் வீரியத்தை குறைக்க முடியும். நானே ஒரு வாழும் உதாரணம்.

என்னை சந்திக்கும் மஹாபெரியவா பக்தர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி. “மாமா உங்களுக்கு இவ்வளவு அனுக்கிரஹம் செய்த மஹாபெரியவா உங்களுடைய இடது கால் இடது கை இவை இரண்டையும் மீண்டும் கொடுக்க ஏன் அனுக்கிரஹம் செய்யமாட்டேன் என்கிறார். நீங்கள் மஹாபெரியவாளிடம் கேட்பதில்லையா மாமா என்று என்னை கேட்பார்கள்.

அதற்கு நான் சொல்லுவேன். அதை நான் ஏன் கேட்கவேண்டும். இத்தனை அனுக்கிரஹம் செய்த மஹாபெரியவளுக்கு என் இடது பக்கம் மீண்டும் உயிர்பெற ஏன் நினைக்கவில்லை. எனக்கு நன்றாக தெரியும். என்னுடைய கர்மா இன்னும் தீரவில்லை.

மேலும் எனக்கு இனிமேல் பிறவி இல்லை என்ற முடிவில் என்னுடைய கர்மாக்களை கழித்து விட்டு ஜென்மாவை முடித்துக்கொள்ளவேண்டும் இறைவனின் சன்னிதானத்தில் எல்லோரும் சமம். யாரும் இந்த கர்மவினைகளுக்கு விதிவிலக்கல்ல. கர்மாக்கள் தான் நம்முடைய தீராத பிறவி நோய்க்கு காரணம். இப்பொழுது சிவபார்வதியின் திருமண வைபவயதிற்கு வருவோம்.

சிவபார்வதி திருமண வைபவம் தொடர்கிறது.

அப்பொழுது சிவபார்வதி வேலையில்லாமல் இருந்த காரணத்தால் சிவபார்வதியை மருமகளாக ஏற்றுக்கொள்ள எந்த மாமியாரும் ஆண்மகனும் தயாராக இல்லை. மேலும் சிவபார்வதியின் தங்கைக்கு வேலை கிடைத்து அவளுக்கு திருமணத்திற்கான வரன்கள் வர ஆரம்பித்தன. சிவபார்வதியின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.

ஒருபுறம் சமுதாய தாக்குதல் மறு புறம் வேலையில்லாத காரணத்தால் மனக்குழப்பம்.சிவபார்வதிக்கு திருமணம் ஆனால் தான் அவளுடைய தங்கைக்கு திருமணம் ஆகும். வீட்டிற்குள்ளும் மேகம் சூழ்ந்த நிலைமைதான். பெற்றோர்களை சொல்லி தப்பில்லை.அவர்கள் கடமையை அவர்கள் செய்து முடித்தாக வேண்டும். சமுதாயத்தின் அவச்சொல் தாக்குதலிலிருந்து தப்பித்தாக வேண்டுமே.

சிவபார்வதியின் நிலைமை இருதலை கொல்லி எறும்புக்கு மேல் பல தலை கொல்லி எறும்புகளாக இருந்தன.இன்னும் சிவபார்வதியின் நிலைமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.நமக்கு அது முக்கியமல்ல. மஹாபெரியவாளின் அற்புத மகிமை எப்படி விஸ்வரூபம் எடுத்து என்பது தான் முக்கியம். நமக்கு தேவையையும் அதுதான்.

.இந்த நிலைமையில் சிவபார்வதி தனக்காக இல்லாவிட்டாலும் தன்னுடைய தங்கைக்காகவும் சொந்தங்களுக்காகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இந்த நிலைமையில் சிவபார்வதி என்னிடம் மீண்டும் பிராத்தனை செய்யச்சொன்னாள். இந்த முறை திருமண வைபவத்திற்காக. நானும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லி மறு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா,சிவபார்வதிக்கு சமுதாயபிரச்னைகளில் இருந்து விடுதலை வாங்கிகொடுத்தீர்கள். ஒரு நல்ல வேலையும் வாங்கிகொடுத்தீர்கள். இப்பொழுது சிவபார்வதிக்கு கல்யாணம் பண்ணவேண்டும் பெரியவா. நீங்கள் அவளுக்கு திருமணத்திற்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா." சிவபார்வதிக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் அமையவேண்டும் பெரியவா" என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். மஹாபெரியவா அளித்த பதில் பின் வருமாறு:

அவளுக்கு அனுக்கிரஹம் பணியாச்சுன்னு அவ கிட்டே சொல்லு. நீ சிவபார்வதினு பேர் வெச்சிருக்கே. பெயர் பொருத்ததோடு அவளுக்கு வரன் அமையும். நீ கவலைப்படாமல் உன்னுடைய பிரார்த்தனையை மட்டும் பண்ணு. என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

எனக்கு மனசு மிகவும் சந்தோஷமாக இருந்தது.ஏன் தெரியுமா. சமுதாயத்தால் நசிந்து போகத்தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது. நான் மஹாபெரியவளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு என்னுடைய மற்றவர்களின் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

மறு நாள் காலையில் சிவபார்வதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய பிரார்த்தனையை கேட்டாள். நான் அவளிடம் மஹாபெரியவா அனுக்கிரஹம் செய்ததையும் பெயர் பொருத்தம் கூட அமையும் என்று சொன்னார் என்று சொல்லி என்னுடைய பதிலை முடித்துக்கொண்டேன்.

சிவபார்வதியின் சந்தோஷத்திற்கு கேட்கவும் வேண்டுமா.? அவள் கனவுலகில் மிதக்க ஆரம்பித்தாள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் உதயம். ஆயிரம் கனவுகளின் மலர்ச்சி.

சரியாக ஒரு வாரம் சென்றிருக்கும். சிவபார்வதிக்கு வரன்கள் வர ஆரம்பித்தது. வரன்கள் வருவது மட்டுமல்ல. வந்த வரன்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு வந்தன. மணமகன் வீட்டார் சிவபார்வதியை தேர்வு செய்வது போக சிவபார்வதி மணமகனை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டாள்.

ஒரு வாரத்தில் மணமகன் வீட்டார் சிவபார்வதியின் வீட்டிற்கு வந்து சிவபார்வதியை பெண் பார்த்துவிட்டு மணமகனுக்கு மணமகள் சிவபார்வதியை மிகவும் பிடித்துப்போய் அங்கே சந்தோஷம் தாண்டவமாடியது.

அடுத்தது என்ன சிவபார்வதியின் தயார் மணமகன் வீட்டிற்கு சென்று வேறு விஷயங்களை பேசி முடிக்க ஆயத்தமாகி விட்டார். சில நாட்களிலேயே மணமகன் வீட்டிற்கு சென்று பேசி பரஸ்பரம் இரு வீட்டாரும் ஒரு நல்ல புரிதலுக்கு வந்து திருமணத்தை முடிவு செய்து விட்டனர்.

நிச்சயதார்த்த தேதியும் குறித்தாகிவிட்டது. இதற்கு இடையில் மணமகன் சிவபார்வதியை அவள் இல்லத்தில் சந்தித்து தங்களுக்கிடையிலான பாசத்தையும் புரிதலையும் வளர்க்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணத்திற்கு முன்பே வெளியில் ஒன்றாக சென்று தங்களுடைய கனவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.

ஒரு சில நாட்களில் திருமணமும் நடந்தேறியது. இவர்கள் திருமணத்தில்தான் திருமணம் என்பது ஆண் பெண் இருபாலாருக்குமன்றி இரு குடும்பங்களுக்கு இடையில் உருவாகும் பந்தம் என்று எல்லோருக்கும் புரிந்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. என்னுடைய பிரார்த்தனையின் போது மஹாபெரியவா பெயர் பொருத்தம் கூட அமையும் என்று என்னிடம் சொன்னார். மணமகன் பெயர் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறதல்லவா.எனக்கும் தான். வாருங்கள் மணமகன் பெயரை பார்ப்போம்

மணமகன் பெயர் சிவசங்கரன் மணமகள் பெயர் சிவபார்வதி.

மஹாபெரியவா மனது வைத்தால் கைலாய சிதம்பரநாதனே இறங்கி பூலோகம் வருவார்.

உங்கள் வாழ்த்துக்களுடன் என்னுடைய வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். நாம் எல்லோருமே புதுமண தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துவோம்.

கல்யாணத்தில் தாலி கட்டியபிறகு ஒரு பாட்டு படுவார்கள். ராம பக்தர் தியாகராஜர் பண்ணிசைத்த சீதா கல்யாண வைபோகமே பாட்டு ராஜேஷ் வைத்தியா அவர்களின் வீணை இசையிலும் தேனிசை குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் சீதா கல்யாண வைபோகமே பாட்டையும் கேட்டுவிட்டு தம்பதிகளை வாழ்த்திவிட்டு அவர்களுக்காக உங்கள் வீட்டிலேயே மங்களகரமான விருந்து உட்கொண்டு மகிழுங்கள். இரண்டு லிங்குகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டு மகிழுங்கள். சாருகேசி :

இந்த நேரத்தில் சிவபார்வதியின் தோழி சாருகேசியின் பங்களிப்பை உங்களுக்கு நினைவு படுத்தியே ஆக வேண்டும். உன் நண்பரின் பெயரை சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன் என்று சொல்வார்கள். சிவபார்வதியின் தோழி சாருகேசி என்றால் சிவபார்வதி மட்டுமல்ல சாருகேசியும் எப்படிப்பட்ட ஒரு பெண் என்பது நமக்கு தெரியவரும். இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்வு

ஒன்பதாவது வார பூஜைக்கு முதல் நாள் சிவபார்வதி விரக்தியின் விளிம்புக்கே சென்ற நேரத்தில் அவளுக்கு தைரியம் சொல்லி மறு நாள் பூஜையையும் முடிக்கவைத்து பூஜை நாளன்று வேலைக்கான ஆர்டரும் வந்தது என்னை புல்லரிக்கவைக்கிறது. விரைவில் சாருகேசியின் குரு பூஜை அற்புதங்களும் இந்த இணைய தளத்தில் இடம் பெரும் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்போலவே. இருவர் நட்பும் மனமும் மலரும் போல என்றென்றும் நீடித்து நிலைத்திருக்க மஹாபெரியவளை நொடிப்பொழுதும் வேண