Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-021 ஸ்வாமிநாதன் (இந்திய ஆட்சி பணி) I.A.S


அற்புதத்தின் சுருக்கம்: வரம் வேண்டி நமக்கு இறைவன் அருளினால் அவர் கடவுள். கேட்காமலேயே நமக்கு தகுதியானதையும் தேவயானதையும் கொடுத்தால் அவர் மஹாபெரியவா. இந்த அற்புதத்தின் ஒரு இந்திய ஆட்சிபணி கலெக்டர். ஆல் ரேடியோவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒருவர் மஹாபெரியவா நீ கலெக்ட்டரா என்று சந்தேகத்துடன் கேட்டதற்காக பிரபஞ்சமே ஒன்று கூடி அவரை கலெக்டர் ஆக்கி விட்ட அற்புதம்.காணுங்கள் காணொளியை.மஹாபெரியவா என்ன நினைத்தாலும் அது அற்புதம்.என்ன சொன்னாலும் அது அற்புதம்.என்ன செய்தாலும் அதுவும்அற்புதம். அற்புதத்தின் அற்புதம் “மஹாபெரியவா”.

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-021

ஸ்வாமிநாதன் (இந்திய ஆட்சி பணி) I.A.S

நம்முடைய வாழ்க்கை முறை

விதிகளின் படி இருக்கிறதோ

நம்முடைய

வார்த்தைகளும்

பலிதமாக வேண்டும் என்பது இறை விதி

ஒரு வாழும் உதாரணம்

பக்தரை பற்றி சொல்லவேண்டுமானால் இவர் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒரு முறை மஹாபெரியவாளை தரிசனம் காணும் பொருட்டு மஹாபெரியவா முகாமுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது தன்னுடைய கைங்கர்ய மனுஷாளில் ஒருவரை அனுப்பி இவரை அழைத்து வர சொன்னார்.

இவரிடம் மஹாபெரியவா கேட்கிறார். நீ என்ன வேலை பார்க்கிறாய். அதற்கு இவர் சொல்கிறார் ஆல் இந்தியா ரேடியோ என்று. மஹாபெரியவா சொல்கிறார் இல்லை நீ காலெக்ட்ரோன்னு நினைச்சேன். கேட்டு அடுத்தசில மாதங்களில் கலெக்டர் ஆகி விட்டார். இவர் கலெக்டர் ஆன அற்புதத்தை மட்டும் உங்களுக்கு விவரிக்கிறேன். மற்ற அற்புதங்களை காணொலியின் வாயிலாக கண்டு களியுங்கள்

தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஏழாம் (1957) வருடம் மஹாபெரியவா சென்னை சமஸ்க்ரித கல்லூரியில் முகாமிட்டிருந்தார். வழக்கமாக ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு பிரவசனம் இருக்கும். (உபன்யாசம்)

நாள் மாலையில் தன்னுடைய உபன்யாசத்தின் போது ஒரு கலெக்டரின் குணாதிசயங்களும் அவர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் சொல்லிக்கொண்டிருந்தார்.

வெளியில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை அழைத்துவருமாறு தன்னுடைய கைங்கர்ய மனுஷாள் ஒருவரை அழைத்து அந்த வாலிபரை அழைத்து வரச்சொன்னார். அந்த வாலிபரும் வந்து கை கட்டி வாய் பொத்தி மஹாபெரியவா முன் நின்றார்.

அவர்களுடைய சம்பாஷணையை உங்களு தருகிறேன் .இதோ சம்பாஷணை.

நீ என்ன பன்னரே?

தன்னுடைய வேலையயை சொல்கிறார்.

ஏன் நீ கலெக்டருக்கு விண்ணப்பிக்கல்லயா ?

இல்லை பெரியவா எனக்கு ஒரு வருஷம் வயசு அதிகமாயிடுத்து.

சரி நீ போ என்று அனுப்பி விடுகிறார்.

நாள் காலையில் அன்றைய தினசரி பத்திரிகையில் ஒரு விளம்பரம்.சுமார் என்பது கலக்டருக்கான காலி இடங்கள் இருப்பதாகவும் அதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். இதில் என்ன அற்புதம் என்றல் ஒரு சிறப்பு சலுகையாக ஒரு வயது தளர்த்தி மஹாபெரியவா அழைத்த நபர் விண்ணப்பிக்கும் படியாக அந்த விளம்பரம் இருந்தது.

நாள் அந்த நபர் மஹாபெரியவாளை தரிசனம் காண சென்றார். அப்பொழுது விளம்பரம் வந்திருப்பதை சொன்னார். ஆனால் கிடைப்பது மிகவும் கடினம் என்றார். மஹாபெரியவா அந்த நபரிடம் கேட்கிறார் விண்ணப்பிக்க என்னிக்கு கடைசி நாள்.அந்த நபர் சொல்கிறார். நாளைக்கு பெரியவா.

நேரம் பார்த்து ராமச்சந்தரன் என்னும் இந்திய அரசுப்பணியில் மிகவும் உயர் பதவியில் இருப்பவர். மஹாபெரியவாளை தரிசனம் காணும் பொருட்டு காஞ்சி மடத்திற்கு வந்திருந்தார். அவரிடம் மஹாபெரியவா கேட்கிறார். இந்த பையனுக்கு வீண்ணப்பம் வாங்கி நீயே பூர்த்தி பண்ணி உன் கையாலேயே டெல்லியில் சேர்த்துடறயா என்று கேட்கவும் உடனே அந்தப்பயனை தன்னுடைய வீட்டிற்கே அழைத்துப்போய் தானே பூர்த்தி செய்து தானே விண்ணப்பத்தை சேர்த்து விட்டார். அந்த நபர் கலக்டரும் ஆகி விட்டார். அவர்தான் ஸ்ரீ ஸ்வாமிநாதன் I.A.S..

சிந்தித்து பாருங்களேன் மஹாபெரியவா ஒருவரை மனதில் நினைத்து சங்கல்பித்து விட்டால் நான் அடிக்கடி எழுதுவது போல இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்தசங்கல்பத்தை நிறைவேற்றிவிடும் ஒன்று நினைத்தால் அந்த நினைப்பு எப்படியோ கை கூடிவிடும் என்பது இறை விதி. மஹாபெரியவளை பரமேஸ்வரன் அவதாரம் என்று எப்படி சொல்லாமல் இருப்பது.

இது போல் எவ்வளவோ அதிசயத்தக்க நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இந்த காணொளியை காணுங்கள். உங்களுக்கு மஹாபெரியவாளின் இறை சக்தி ஓரளவுக்கு புரியலாம்.

அன்று மட்டுமல்ல இன்றும் உங்கள் உருகும் பக்தியின் வாயிலாக மஹாபெரியவாளின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள் உங்களுக்கு வானமே எல்லை


https://www.youtube.com/watch?v=vbz-mMBH-jw

ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்