top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -078


என் வாழ்வில் மஹாபெரியவா -078

நொடிகள் பல கடந்தாலும்

மணிகள் பல சென்றாலும்

நாட்கள் பல நகர்ந்தாலும்

பிறப்பும் இறப்பும் உறுதி

வாழும் நாட்களில் பிறருக்கு உதவுங்கள்

நீங்கள் இறந்த நாளில் அந்த இதயங்கள்

உங்கள் இறுதி யாத்திரையில் உங்களுக்கு

பிரியா விடை கொடுத்து வழியனுப்பும்.

இறைவனும் உங்களை வரவேற்பான்

இந்த ஜென்மத்தில் நான் அனுபவிக்கும் மஹாபெரியவா அற்புதங்கள் ஒவ்வொன்றும் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை விட்டு செல்கிறது.. அந்த செய்தி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சொந்தமானது.

நம்மில் எல்லோருமே மஹாபெரியவா அற்புதங்களை அனுபவித்து விட்டு மஹாபெரியவாளுக்கு சான்றிதழ் கொடுப்பதோடு நின்று விடுகிறோம். அந்த அற்புதம் சொல்ல வந்த செய்தி என்ன என்பதை கூர்ந்து கவனத்துடன் பார்த்தால் அந்த அற்புதங்கள் நம் ஆத்மாவிற்கு சொல்லும் செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

இந்த திருமேற்றளி கோவில் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட செய்தி இதோ உங்களுக்காக:

  1. ஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்கள் ஆத்மா உங்களின் கடந்த ஜென்மாக்களின் வாழ்க்கைக்கு அழைத்து செல்லும். நீங்கள் யார்? நீங்கள் ஏதற்காக பிறந்தீர்கள் என்பதை உங்களுக்கு புரிய வைக்கும்.

  2. ஆத்மாவை மையாக வைத்து வாழ்ந்தால் உங்கள் ஆத்மா உங்களை சீர்படுத்தி சீராக்கி ஒரு சிஷ்யனுக்கு உண்டான தகுதியை உங்களுக்குள் வளர்த்து உங்களை ஒரு குருவின் காலடியில் சமர்ப்பித்து விடும்.

  3. ஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்களை சிஷ்யப்பிள்ளை ஸ்தானத்தில் இருந்து ஒரு நல்ல குரு ஸ்தானத்திற்கு மாற்றிவிடும்.

  4. ஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்தால் உங்களின் ஒவ்வொரு ஏக்கமும் பிரபஞ்சத்தை சென்றடையும். பிரபஞ்சம் உங்கள் ஏகத்திற்கு பதில் சொல்லும். உங்கள் எண்ணங்கள் பேசும் பேச்சுக்கள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலுமே இறைவன் இருப்பான். நீங்களே இறைவனாகவும் ஆகி விடுவீர்கள்.

  5. வாழும் உதாரணங்கள் இன்றும் நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.​

னி நாம் அனுபவித்து கொண்டிருக்கும் திருமேற்றளி பயணத்தில் என்னுடைய ஆத்மாவிற்கு கிடைத்த பரிசுகள் என்ன என்பதை பார்ப்போம். மேலே நான் கூறிய அனைத்துக்கும் உங்களுக்கு ஒரு வாழும் சான்றாக அமையட்டும்.

நாக கன்னியின் தரிசனம்:

திருமேற்றளியில் பலரும் சிலாகித்து பேசும் நாக கன்னியின் தரிசனத்தை என்னால் கோவிலில் காண முடியவில்லையே என்ற ஏக்கம்.

எனக்கு, நான் கோவிலில் இறுதி வரை அன்று நாக கன்னிகையின் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற என் ஏக்கம் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவாளை சென்று அடைந்திருக்க வேண்டும். நாக கன்னிகையின் தரிசனம் கிடைத்தது. எப்படி தெரியுமா?

அன்று இரவு சீக்கிரமே படுத்து உறங்குவதற்கு சென்று விட்டேன். உடல் அசதியால் படுத்தவுடன் தூங்கி விட்டேன். அதிகாலை மூன்று மணிக்கு எனக்கு ஒரு சொப்பனம்.

திருமேற்றளி கோவில் பிரதான சன்னதி பிரும்ம நந்தீஸ்வரர் சன்னதி வாசலில் என்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்து பல வருடங்களுக்கு பிறகு ஈஸ்வரனுக்கு செய்யும் அத்தனை அபிஷேகங்களையும் பார்த்து ஜோதியில் கலந்து என்னை மறந்த நிலையில் இருந்தேன்.

அதே நொடியில் கோவில் வாசலில் இருந்து ஒரு பத்து அடி நாகம் புயல் வேகத்தில் படிகளில் ஏறி எனக்கு மிக நெருக்கத்தில் வந்து என்னை பார்க்கிறது.

பாம்பென்றால் படையே நடுங்குமே. நான் எம்மாத்திரம். எனக்கு உடல் வியர்த்து நடுங்குகிறது. அந்த ஈஸ்வரன் சன்னதிக்கு முன் வாசல் நிலை படியில் இருந்து ஏறத்தாழ அந்த லிங்க திருமேனி உயரத்திற்கு படம் எடுத்து ஆடுகிறது.

எல்லோரும் என்னை கொஞ்சம் கூட அசையாமல் இருக்குமாறு எச்சரிக்கை செய்கிறார்கள். நானும் கொஞ்சம் கூட அசையாமல் பெரியவா ஈஸ்வரா என்று சத்தமாக ஜெபித்து கொண்டு கண்களை மூடி கொண்டு இருக்கிறேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி தாழம்பூ வாசனை வீசுகிறது. என்னை சுற்றி இருந்த பக்தர்கள் எல்லோரும் ஹர ஹர சங்கர என்று கோஷம் செய்கிறார்கள்.

நான் கண்களை மூடிக்கொண்டு என்னை மறந்த நிலையிலேயே இருந்தேன். பத்து அடி நாகத்தின் உடல் என்னை உரசிக்கொண்டு நிற்கிறது. அவ்வளவு உயரத்திற்கு மிகப்பெரிய படம் எடுத்து கொண்டு என் அருகில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்றால் எனக்கு நினைத்து பார்க்கவே குலை நடுங்கியது. அந்த காட்சி எனக்கு கிடைத்த ஆசிர்வாதமா? இல்லை ஆபத்தா? என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.

அப்பொழுது அங்கு கூடி இருந்த பக்தர்கள் உச்ச குரலில் ஈஸ்வர சங்கரா என்று கத்தினார்கள். எனக்கு கண்களை திறந்து பார்க்க பயமாக இருந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் கண்களை திறந்து பார்க்குமாறு சொன்னார்கள்.

நான் தைரியத்தை வரவழைத்து கொண்டு கண்களை திறந்தேன். அவ்வளவு உயரத்தில் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்த நாக கன்னிகை தன்னுடைய உயரத்தில் இருந்து மெதுவாக இறங்கி கொண்டு இருந்ததது.

என் கண்கள் உயரத்திற்கு வந்தவுடன் சற்றே நிதானித்து என்னை பார்த்தது.எனக்குள் குலை நடுங்கியது. பிறகு தரையோடு தரையாக இறங்கி தன்னுடைய படத்தை எடுத்து தரையில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்தது.. என் தூக்கமும் கலைந்தது.கனவும் முடிந்தது.

எனக்கு நாகக்கன்னியின் தரிசனம் கிடைக்கவில்லையே என்ற என் ஏகத்திற்கு கிடைத்த பரிசு இந்த நாக கன்னி தரிசனம்.உருவத்தில் பயங்கரம் இருந்தாலும் நாக கன்னியின் உள்ளத்தில் ஒரு தாயின் கருணையை பார்க்க முடிந்தது..

ஆத்மாவை மையமாக வைத்து வாழ்ந்த எனக்கு மஹாபெரியவா என்னும் பிரபஞ்சம் கொடுத்த பரிசு. இது எல்லோருக்குமே பொருந்தும். வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு நான் சொல்வதில் இருக்கும் உண்மை விளங்கும்.

திருமேற்றளிக்கு போ. நீ யார் என்பது உனக்கு புரியும்.

திருமேற்றளியில் நடந்த மற்றும் ஒரு அற்புதம். என் ஆத்ம வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு.

நானும் மஹாபெரியவாளிடத்தில் ஒவ்வொரு நாளும் நன் யார் பெரியவா? என்று கேட்பதும் அதற்கு பெரியவா உனக்கு இப்போ ஒன்னும் தெரிய வேண்டாம் போகப்போக உனக்கு தெரியும் என்று சொல்வதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.. நானும் விடாமல், நான் யார் சொல்லுங்கள் பெரியவா என்று துளைத்து எடுத்த பிறகு சொன்ன ஒரு விஷயம் இதோ உங்களுக்காக.

பெரியவா சொன்னது." நீ பிறந்த நாளும் நான் சன்யாசம் வாங்கிண்ட நாளும் ஒரே நாள். பிப்ரவரி மாதம் சனிக்கிழமை பதிமூன்றாம் தேதி. வருஷம் தான் வேறே " இப்போதைக்கு இது போறும். கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்னார். நான் மஹாபெரியவாளை துளைத்து எடுத்த கேட்ட கேள்விக்கு இன்று பதில் கிடைக்க போகிறது. ஒவ்வொரு நொடியும் நடக்கப்போகும் அற்புதத்தையும் அந்த அற்புதத்தின் மூலம் எனக்கு கிடைக்கும் பதிலையும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அந்த சமயத்தில் அந்த கிராமத்திற்கே சம்பந்தம் இல்லாமல் ஒரு வெளிநாட்டு கார் ஒன்று கோவிலுக்குள் நுழைந்ததது.அந்த காரில் இருந்து ஒரு அம்மையார் இறங்கி சன்னதிக்கு அருகில் வந்தார்.

அங்கு கூடி இருந்த மக்களிடம் தான் அந்த கோவிலுக்கு வந்ததன் காரணத்தை சொன்னார். இதோ அம்மையார் சொன்ன காரணம்.

"நேற்று இரவு எனக்கு கனவு வந்தது. அந்த கனவில் மஹாபெரியவா தரிசனம் கொடுத்து "நான் நாளைக்கு திருமேற்றளி பிரும்ம நந்தீஸ்வரர் கோவிலுக்கு வருவேன்.நீ அந்த கோவிலுக்கு வா என்று உத்தரவிட்டார். அதான் நான் இங்கே வந்தேன் என்று சொன்னார்.

அதற்கு அங்கு கூடி இருந்த மக்கள் சொன்னது இதோ உங்களுக்காக

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்.சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழ மன்னர் கட்டிய கோவில். இத்தனை நாளும் இந்த கிராமத்து மக்களாகிய நாங்கள் எங்களால் முடிந்த அளவு பூஜையும் நெய்வேத்தியமும் செய்து வந்தோம்.

இப்பொழுது தான் G.R மாமா என்பவர் மஹாபெரியவா காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவுப்படி இங்கு வந்திருக்கிறார். காஞ்சி பெரியவர் வரவில்லையென்றாலும் அவர் சார்பில் G.R. மாமா வந்திருக்கிறார் என்று அந்த கிராமத்து மக்கள் வந்த அம்மையாரிடம் சொன்னார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மஹாபெரியவா ஏதற்காக அந்த அம்மையார் கனவில் தான் திருமேற்றளிக்கு வருவதாக சொல்லி விட்டு என்னை அங்கு அனுப்ப வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்த அம்மையார் என்னை வணங்கி விட்டு சொன்னார்கள். மஹாபெரியவா சொல்லித்தான் நீங்களே இங்கு வந்திருக்கிறீர்கள் இந்த கோவிலுக்கு என் சார்பில் ஏதாவது கைங்கர்யத்திற்கு உதவ முடியும் என்றால் அது என் பாக்கியம். சொல்லுங்க மாமா என்றார் .

மஹாபெரியவா தான் வருவதாக சொல்லிவிட்டு இந்த G.R .மாமாவை அனுப்பினால் அதற்கு என்ன பொருள். இதற்கு மேல் இந்த அற்புதத்தை விவரிக்க எனக்கு மிகவும் சங்கோஜமாக இருக்கிறது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அன்று இரவு மஹாபெரியவா என் சொப்பனத்தில் வந்து சொன்ன விஷயத்தை உங்களுக்கு எழுதலாமா என்று வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏன் தெரியுமா?

இந்த கலி காலத்தில் இப்படியும் நடக்குமா? என்று கிண்டலும் கேலியும் பேசினால் அது மஹாபெரியாவாளுக்கு நான் வாங்கித்தரும் அவப்பெயராக ஆகிவிடுமே என்று கவலையாய்இருக்கிறது. நான் சொல்வதற்கும் அதன்படி நடக்கும் செயலும் இம்மி பிசகாமல் நடப்பதும் அதற்கு தேவையான சான்றுகள் இருந்தாலும் எனக்கு சங்கோஜமாக இருக்கிறது.

உங்களை மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இந்த பூவுலகில் ஜீவராசிகளின் எண்ணிக்கை

எண்பத்து நான்கு லக்க்ஷம்

இதில் மிகவும் உயர்ந்த ஜீவன் மனிதன்

மனிதனின் பல லக்க்ஷம் பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் கோடியில் ஒருவருக்கு ஒரு குரு ஆசிர்வதித்து அனுகிரஹிப்பார். இறைவனே குருவாக வந்து ஆசிர்வதிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஆனால் அதுவே நடந்து விட்டால் ஐம்பது வயதில் கூட கர்பத்தீட்டு படாமல் நீங்கள் படைக்கப்படலாம் அல்லது உருவாக்க படலாம் அது நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

உங்கள் .G.R மாமா


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page