Featured Posts

சக்தி பீட தரிசனங்கள்-001 மூகாம்பிகை கொல்லூர் கர்நாடகா


சக்தி பீட தரிசனங்கள்-001

மூகாம்பிகை கொல்லூர் கர்நாடகா

கீழே பார்ப்பது மூகாம்பிகை

அம்மன் கொல்லூர் கர்நாடகா

மூகாம்பிகை அம்மன்

நீங்கள் மூகாம்பிகை கோவிலை பற்றி படிப்பதகர்க்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்த்து விட்டு மேலே படிக்கவும்.ஏன் தெரியுமா. பசுமையான மலை சூழ்ந்த இடம்.

ஆதி சங்கரர் த்யானம் செய்த சர்வகன்யா பீடம் இங்குதான் உள்ளது. சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக்கோவில் உங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தல்ல. உள்ளத்திற்கும் ஆத்மாவிற்கு நல்ல ஒரு இறை விருந்து.

இந்த காணொளியை இரவில் உறங்கப்போவதற்கு முன் பாருங்கள். நிச்சயம் உங்கள் கனவில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் ஏதாவது ஒரு அம்பாள் உங்கள் கனவில் உங்களுக்கு தரிசனம் தருவாள்.தரிசனம் கிடைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை ஒரு நல்ல அமைதியான பாதையில் பயன்படும் என்பது சத்தியம்.

பசுமை சூழ்ந்த சௌபர்ணிகா ஆறு

இரவில் சௌகரியப்படவில்லை என்றல் காலையில் பிரும்ம முகூர்த்தத்தில் பார்க்கவும். அன்றைய நாளில் உங்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள் உங்களை வாழ்நாளின் இறுதி வரை ஒரு நல்லபாதையில் பயணிக்க வைக்கும் என்பது நிச்சயம். உங்களது உருகும் பக்தியும் இறை நம்பிக்கையும் நிச்சயம் உங்களுக்கு அம்பாளை கண்குளிர காட்டும். இது என் அனுபவ உண்மை.

கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் கொடிமரம் இரவில்

சௌபர்ணிகா நதிக்கரையில் ஆதி சங்கரர் தவம் செய்த இடத்தில் துர்கா தேவியின் ஆதார இடமாக விளங்கும் குடஜாத்திரி மலை சூழ்ந்த பிரதேசத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோவில் கொண்டுள்ளாள்.

இங்கு சரஸ்வதி மண்டபம் மிகவும் பிரபல்யம். குழந்தைகளுக்கு நாவில் அட்சர அப்பியாசம் செய்வது மிகவும் விசேஷம். இந்த காணொளி காணும் ஒவ்வொரு வினாடியும் வினாடியும் நீங்கள் கேரளாவிலும் கர்நாடகத்திலும் வாழ்ந்து கொல்லூர் அம்பாளை தரிசனம் கண்டு அந்த அனுபவத்தில் இருந்து விடுபட மனம் இல்லாமல் அங்கேயே மனதளவில் வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.

இந்த ஐம்பத்தியொரு சக்தி பீட தொடரில் எத்தனையோ கொடுத்து வைத்த ஆத்மாக்களின் வாழ்க்கை சாபல்யம் அடையப்போவது உறுதி, வாழ்க்கையில் மற்றம் என்பது நொடிப்பொழுதில் மனதில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள்தானே.

https://www.youtube.com/watch?v=uTiF5grxxCs

மூகாம்பிகை கொல்லூர் - செல்லும் வழி

இந்த கோவில் மங்களூரில் இருந்து நூற்றி முப்பத்திஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் மார்க்கத்திலும் சுலபமாக சென்று அடையலாம். இந்தக்கோவில் ஒன்றுதான் பார்வதிக்காக பரசுராமரால் உருவாக்கப்பட்டது.

மூகாம்பிகை அம்மன் கோவிலின் உட்புறத்தோற்றம்

இந்தக்கோவில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் உள்ளது. உடுப்பி மற்றும் மங்களூரில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

கொல்லூர் பகுதியில் கமஹாசுரன் என்ற கொடிய அரக்கன் மக்களை பல விதங்களில் துன்புறுத்தி கொண்டு இருந்தான் அப்பொழுது பார்வதி தேவி அந்த அரக்கனை வதம் செய்து மக்களை காப்பாற்றினாள். இங்கு பார்வதி தேவியை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

மூகாம்பிகை தங்கத்தேரில் பவனி

இந்தக்கோவில் மூலவர் மூகாம்பிகை சிலையை ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஹலக்கல்லு வீரசிங்கையா என்னும் அரசன் நிறுவினான். மூகாம்பிகை மும்மூர்த்திகளின் சக்திகளோடு லிங்கத்தில் இணைந்து கட்சி தருகிறாள்.

உங்களுக்கு ஐம்பத்தியொரு சக்தி பீட அம்பாளும் சகல ஐஸ்வர்யங்களையும் பயமற்ற வாழ்க்கையையும் மனா நிம்மதியான வாழ்க்கையையும் அருளட்டும்.காமாட்சி அவதாரமான மஹாபெரியவாளும் உங்களுக்கு துணை இருப்பார்.

ஐம்பத்தியொரு சக்தி பீட அம்பாளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சலனமில்லா மனதையும் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கட்டும்.

நீங்கள் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ என் வாழ்த்துக்கள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் இதய கமலங்களில் வாழும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square