Featured Posts

சக்தி பீட வரலாறு- விளக்கம்


எல்லையில்லா பிரபஞ்சம் வானத்து வின் மீன்களும் நீ சந்திரனும் நீ சூரியனும் நீ சக்தி பீடங்களின் மொத்த உருவமும் நீ நீ என்னை பணித்தாய் நான் பணிகிறேன் இன்று சக்தி பீடம் பிறந்தது.

சக்தி பீட வரலாறு

காஞ்சி காமாட்சி

இந்த வாரம் சக்தி பீடங்களின் வரலாற்றை மட்டும் எழுதி எழுதி இருக்கிறேன். அடுத்த வாரத்தில் இருந்து சக்தி பீட ஆலயங்கள் பற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

சக்தி பீடங்களின் வரலாறு :

தேவி பாகவதம் என்ற நூலில் அம்பிகைக்கு நூற்றி எட்டு சக்தி பீடங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் தந்திர சூடாமணி என்னும் நூலில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் என் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த உலகத்தின் இயக்கத்திற்காக உயிர்களை படைக்க திருமால் பிரும்மனை படைத்தார். பிரம்மன் தனக்கு உதவுவதற்காக சனத் குமாரர்களை படைத்தார். ஆனால் சனத் குமாரர்கள் படைக்கும் தொழிலில் ஈடுபட விருப்பம் இல்லாமல் ஆன்மீகத்தின் மூலம் முக்தி அடைவதிலேயே கவனமாக இருந்தார்கள். பிறகு பிரும்மன் நாரதர் உட்பட பத்து ப்ரஜாபதிகளை படைத்தார். அந்த பத்து பேரில் தக்க்ஷக ப்ரஜாபதியும் ஒருவர்.

தக்க்ஷப்ரஜாபதி கடுமையான தவம் புரிந்து சிவ பெருமானிடம் வேண்டிய வரங்களையும் பெற்று கூடுதலாக ஒரு மகளையும் பெற்றான், தக்க்ஷனின் சக்தியும் தவ வலிமையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது.

தக்க்ஷனின் தவவலிமையை பார்த்த சிவ பெருமான் தக்க்ஷப்ரஜாபதி மேல் ஒரு மரியாதையும் மதிப்பும் கொண்டார். தக்க்ஷகனுக்கு வரத்தின் மூலமாக பெற்ற தாக்கஷாயினி என்னும் மகள் இருந்தாள்.. சிவ பெருமான் தாக்க்ஷயினியையை திருமணம் செய்து கொண்டார்.

சிவபெருமானுக்கு தான் மாமனார் ஆகிவிட்ட நிலையில் சிவபெருமான் தன்னை ஓர் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மரியாதை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான். தக்க்ஷப்ரஜாபதி ஆனால் இது நடக்கவில்லை.

சிவபெருமானை அவமதித்து தானே மூன்று உலகிற்கும் முதல்வன் என்று நிருபிக்க எண்ணினான்.இதன் விளைவு ஒரு யாகம் செய்து அந்த யாகத்திற்கு எல்லோரையும் அழைக்க வேண்டும். சிவ பெருமானுக்கு மட்டும் அழைப்பு கொடுக்காமல் அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான்.

இது வரை சரி. இந்த நிலையில் தக்க்ஷனின் .சக்தியும் பராக்கிரமும் கூடிக்கொண்டே இருந்தது. தானே கடவுள் என் நினைக்க ஆரம்பித்தான். சிவ பெருமானை விட தானே சக்தி மிக்கவன் என்ற நினைப்பு தழைத்தோங்கியது தலை கொழுத்தது. விளைவு சிவ பெருமானை மேலும் அவமானப்படுத்த நினைத்தான் தக்க்ஷகன்.

தக்க்ஷக பிரஜாபதி செய்யும் யாகத்தை தன்னுடைய ஞான த்ரிஷ்டியால் அறிந்த சிவபெருமான் தன்னுடைய மனைவி தாக்கஷாயினியை அழைத்து உன்னுடைய தந்தைக்கு விபரீத காலம் ஆரம்பித்து விட்டது. அவனுடைய அழிவு காலம் ஆரம்பித்து விட்டது. அவன் ஒரு யாகம் செய்கிறான். அந்த யாகத்திற்கு நமக்கு அழைப்பு விடுக்கமாட்டான். நீயும் அங்கே செல்லாதே. என்னைப்போல் நீயும் அவமானப்படுவாய் என்று சொல்கிறார்.

விநாச காலே விபரீத புத்தி:

சிவபெருமான் சொன்னதுபோலவே இந்த சமயத்தில் தக்க்ஷகன் ஒரு பெரும் யாகத்திற்கு ஏற்பாடு செய்கிறான். சிவபெருமானையும் தன்னுடைய மகளான தாக்க்ஷயினியையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அழைப்பு விடுகிறான்.

ஆனால் சிவபெருமானுக்கும் தன்னுடைய மகளுக்கும் அழைப்பு விடவில்லை. இதனால் பெருத்த அவமானத்திற்கு ஆளான சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். ஆனால் தாக்ஷதாயினி தன்னுடைய தந்தையிடத்தில் நியாயம் கேட்க யாகம் நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதி கேட்கிறாள்.

சிவ பெருமான் அனுமதி கொடுக்காமல் மறுத்து விடுகிறார், காரணம் யாகத்திற்கு சென்றால் தக்க்ஷகன் மேலும் தங்களை அவமானப்படுத்துவான் என்று சொல்கிறார். ஆனால் தாக்ஷதாயினி தான் மட்டுமாவது யாகம் நடக்கும் இடத்திற்கு சென்று நியாயம் கேட்கிறேன் என்று சொல்லி சிவபெருமான் பேச்சை கேட்காமல் செல்கிறாள்.

அங்கு சென்ற தாக்ஷயினி தன்னுடைய தந்தையிடம் நியாயம் கேட்கறாள். அப்பொழுது சிவபெருமானை இழிவாக பேசி சுடுகாட்டு புலையனுக்கெல்லாம் நான் எதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டவுடன் தாக்ஷதாயினி மிகுந்த கோபம் கொண்டாள். நியாயம் கிடைக்காது என்று தெரிந்ததும் தானே யாகத்தீயில் குதித்து யாகத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறாள்.

தனக்கு சக்தியை கொடுத்தது சக்தி. சக்தி இப்படி செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு காரியம் செய்தார் அக்னி தேவன்.பராசக்தி உடலில் இருந்து சக்தியை பிரித்தார். பிறகு உயிரற்ற உடல் கீழே உமாதேவியாக விழுந்தது.

இந்த சம்பவத்தை தன்னுடைய ஞான திருஷ்டியால் உணர்ந்து வீரபத்திரரை அனுப்பி யாக குண்டங்களையும் அங்கிருந்த தேவர்கள் மற்றும் யாகத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் அடித்து விரட்டினார் சிவபெருமான்.. தானும். யாகம் நடக்கும் இடத்திற்கே சென்று யாகத்தீயில் விழுந்த உமாதேவியை எடுத்து தன்னுடைய தோளில் போட்டுகொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்..

சிவ பெருமானின் ருத்திர தாண்டவத்தால் பூலோகத்தில் ப்ரளயமும் அழிவும் ஏற்பட்டது. இதைக்கண்ட மஹாவிஷ்ணு சிவபெருமானின் தோளில் இருக்கும் சுமையை குறைத்தால் ருத்ரதாண்டவம் நின்று விடும் என்று நினைத்தார்.

தங்கை என்றும் பாராமல் மனதை தேற்றிக்கொண்டு இந்த உலக நன்மைக்காக சிவபெருமான் தோளில் இருக்கும் தன்னுடைய தங்கையை சிதைக்குமாறு சொல்லி தன்னுடைய சக்ராயுதத்தை அனுப்புகிறார்.

சக்கரத்தாழ்வாரும் தேவியை மூன்று முறை வலம் வந்து தன்னுடைய பிழையை பொருத்தருளுமாறு வேண்டிக்கொண்டு உடலை பல கூறுகளாக சிதைக்கிறார்.. சிவபெருமானின் ருத்திர தாண்டவத்தில் இந்த சிதைத்த உடல்கள் பலவேறு இடங்களில் விழுகின்றன. அப்படி விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக மாறி இன்றும் கலி காலத்தில் மக்களுக்கு சக்தி ஸ்வரூபமாக இருந்துகொண்டு அருள் பாலிக்கிறாள் சக்தி.

முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பிரளயம் முடிந்து மீண்டும் உயிர்கள் உருவான பொழுது சிவபெருமான் உடுக்கையை அடித்துக்கொண்டு பாரத தேசம் முழுவதும் சுற்றி வந்தாராம். அப்பொழுது "அ " முதல் "ஷ" வரை ஐம்பத்தியொரு அக்க்ஷர பீடங்கள் தோன்றின. அப்பொழுது தோன்றிய அதே பீடங்களில் இப்பொழுது உமாதேவியின் சிதைந்த பாகங்கள் விழுந்து ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் மாறின.

முதலில் உயிராகிய அக்ஷரங்கள் விழுந்தன. பின்னர் மெய்யான உடல் வீழ்ந்தது. உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து இன்று நம்மையெல்லாம் காக்கும் சக்தி பீடங்கள் தோன்றின. அந்த பீடங்களில் இன்றம் பராசக்தி இருந்து கொண்டு நமக்கெல்லாம் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறாள்.

உமாதேவியின் உடற்கூறுகள் விழுந்த இடங்கள் ஐம்பத்தி ஒன்று. அந்த ஐம்பத்தியொரு இடங்களே சக்தி பீடங்களாக மாறி மானிடர்களுக்கு ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்த்து கொண்டு அருள் பாலிக்கிராள் சக்தி. இந்த ஐம்பத்தியொரு சக்தி பீடங்களை ஒவொன்றாக ஒவ்வொரு வாரமும் அனுபவிப்போம்.

இந்த சக்தி பீட வரலாற்றை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் சொல்லுங்கள். மறந்துபோன புராணங்களையும் இழந்து போன வரலாற்று உண்மைகளையும் அவர்கள் மூலம் மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொடுத்து மீண்டும் மேடையேற்றுங்கள்.

இப்பொழுது இன்றே இன்னும் ஒரு பதிவில் கொல்லூர் மூகாம்பிகை சக்தி பீடத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square