குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-II- பர்வதவர்த்தினி
குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-II- பர்வதவர்த்தினி

கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தண்ணிழல் பார்த்து தானே குறைக்கும்
இந்தப்பதிவு எழுதும் வரை பர்வதவர்த்தினி கருவுற்ற செய்தி எனக்கு கிடைக்கவில்லை. ஊர்ஜிதமாகாத எந்த தகவலும் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களில் இடம் பெறாது என்பதால் சிறிது காத்திருக்கலாம் என்று நினைத்து பர்வதவர்தினியின் கணவருடைய வேலைக்கான பிரார்த்தனையை பார்ப்போம்.
பர்வதவர்த்தினி என்னிடம் கொடுத்த பிரார்த்தனைகள் பட்டியலில் இந்த கணவர் வேலை விஷயமும் ஒன்று. நானும் பர்வதவர்தினியிடம் குரு பூஜை மகிமைகள் பற்றி சொல்லி நம்பிக்கையுடன் பூஜை செய்யுமாறு சொன்னேன்.அவளுடைய சார்பில் நானும் மஹாபெரியவாளிடம் பின் வருமாறு பிரார்த்தனையை சாம்ப்பித்தேன்.
"பெரியவா பர்வதவர்த்தினியின் கணவருக்கு அவருடைய படிப்புக்கு ஏற்ற வேலை அமைய வேண்டும். அவருக்கு தாராளமாக அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ணுங்கள் பெரியவா என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
முதலில் ஒன்றாவது வாரத்தில் இருந்து ஐந்தாவது வாரம் வரை அழைத்துச்செல்கிறேன். மஹாபெரியவாளை தியானம் செய்து கொண்டே படியுங்கள்.
முதல் வாரம் முதல் ஐந்தாவது வாரம் வரை
இந்த ஐந்து வாரங்களில் நிறைய கம்பெனிகளில் இருந்து வேலைக்கான நேர் கானலிலும் தேர்வு பெற்று வேலையில் சேருவதற்கான கடிதமும் வந்தது. ஆனால் ஒன்று கூட கணவருடைய படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையாக தெரியவில்லை. ஐந்தாவது வார பூஜை முடித்துவிட்டு பர்வதவர்த்தினி என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய கவலையை தெரிவித்தாள்.
நான் பர்வதவர்ந்தினியிடம் சொன்னேன்
"எப்பொழுது நீ மஹாபெரியவா குரு பூஜையை இப்படியொரு பக்தியுடன் செய்தாயோ மஹாபெரியவா நிச்சயம் உன்கணவரை கைவிடமாட்டார். நமிக்கையுடன் இரு என்று சொல்லி விடை பெற்றேன்.
ஆறாவது வார பூஜை முதல் எட்டாவது வார பூஜை வரை
இந்த மூன்று வார பூஜையும் மிகவும் அமைதியான முறையில் முடிந்தது. எட்டாவது வார பூஜை முடிந்தவுடன் பர்வதவர்த்தினி என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய கவலைகளை மீண்டும் என்னிடம் தெரிவித்தாள்.
நானும் அவளிடம் சொன்னேன்
"மஹாபெரியவாளுக்கு மட்டும் தான் தெரியும் உனக்கு எது நல்லது எப்பொழுது கொடுத்தால் உன்னால் அந்த வேலையை கடைசி வரை பிரச்சனைகள் இல்லாமல் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று.
ஆனால் நமோ பெற்றோரிடம் ஆடம் பிடிக்கும் குழந்தைகளை போல் மஹாபெரியவாளை அவசரப்படுத்துவதும் ஆத்திரப்பட்டு கத்துவதும் செய்கிறோம். ஆனால் இத்தனை வசுவைகளையும் வாங்கிக்கட்டிக்கொண்டு மீண்டும் அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்து விடுகிறார். அந்த கருணை சாகரன்.
நானும் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டு அனுபவித்திருக்கிறேன் பிரார்த்தனை நிறைவேறவில்லையென்றால் மஹாபெரியவளை கோபித்து கொள்வது என்னையும் வசை படுவது. இத்தனையும் வாங்கிக்கட்டிக்கொண்டு மஹாபெரியவா எப்படி அனுக்கிரஹம் செய்கிறாரோ நானும் என் தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு அதிகாலை நான்கு மணிக்கு என்னை வசை பாடியவர்களுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் என்னை மறந்து பிரார்த்தனை செய்வேன்.
இப்பொழுது வேண்டுமானால் எனக்கு பழகிப்போயிருக்கலாம். இந்த மாதிரி என்னை வசை பாடுவது மற்றவர்களிடம் வெறும் திண்ணை பேச்சுக்கள் பேசுபவர்களையும் நினைத்துப்பார்க்கும் பொழுது எனக்கு மனம் மிகவும் சங்கடமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மஹாபெரியவா என்னை எப்படி தேற்றினார் என்பது நாம் எல்லோருமே தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இதைப்பற்றி விரைவில் மிகவும் தெளிவாக உங்களுக்கு என்னுடைய பதிவுகள் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
ஆனால் பர்வதவர்த்தினியை பொறுத்தவரை எல்லாவற்றையும் நன்றாக புரிந்துகொள்ளும் பக்குவமும் நாகரீகமும் தெரிந்த பெண். அவளும் சொல்லுவாள் மஹாபெரியவா நிச்சயம் உங்களுடைய பிரார்த்தனைக்கும் நான் செய்யும் குரு பூஜைக்கும் பலன் தராமல் இருக்கமாட்டார். நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீர்கள் மாமா என்று எனக்கு ஆறுதல் சொல்லுவாள். நானும் மஹாபெரியவாளிடம் விடாமல் வேண்டிக்கொள்வேன் அவளுக்கு அனுக்கிரஹம் செய்யவேண்டுமென்று.
ஒன்பதாவது வார பூஜை
இந்த வார பூஜை முடித்து காலையிலேயே என்னை அழைத்தாள் பர்வதவர்த்தினி. சென்ற வாரம் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருப்பதாகவும் இந்த வேலை மட்டும் மஹாபெரியவா அனுகிரஹத்தில் கிடைத்துவிட்டால் சம்பளம் மட்டும் இப்பொழுது வாங்கும் சம்பளத்தைவிட மூன்று மடங்கு அதிகம்.மற்றும் பல சலுகைகள். இன்று ஒன்பதாவது வார பூஜை முடிந்த கையோடு நேர்காணலுக்கு செல்கிறார். அவருக்கு இந்த வேலை கிடைத்துவிடவேண்டும். உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. இருந்தாலும் சொல்கிறேன் மாமா. தவறாக நினைக்க வேண்டாம்.
ஒன்பதாவது வார பூஜை முடிந்து அந்த வாரமும் முடிந்தது. நானும் ஞாயிற்று கிழமையன்று மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா பர்வதவர்த்தினியின் கணவருக்கு இந்த வேலை அமைந்து விட வேண்டும். அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா. என்று வேண்டிக்கொண்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். திங்கள் பழுது புலர்ந்தது. உலகுக்கு மட்டுமல்ல பர்வதவர்த்தினிக்கும் தான்.
பொதுவாகவே நாம் செய்யும் வேலையில் எப்பொழுது ஈடுபாடு வரும் நாம் அந்த வேலையை பிடித்து ஆத்மார்த்தமாக செய்யும் பொழுது தானே.ஒரு வேலை பிடிக்காத போது எட்டு மணிநேர வேலை கூட எட்டு நாட்கள் வேலைபோல இருக்கும்.ஒரு வேலையை பிடித்து செய்யும் பொழுது எட்டு மணி நேர வேலைகூட எட்டு வினாடிகளாக மாறிவிடும்.
ஆனால் நமக்கு பிடித்த வேலை எங்கிருக்கிறது. அது நமக்கு கிடைக்குமா என்று வாழ்க்கையில் பாதி நாட்களை கழித்து விடுகிறோம். ரசாயனம் படித்தவர் வங்கியில் பணம் எண்ணிக்கொண்டிருக்கிறார். பொறியியல் படம் பெற்றவர்கள் வங்கியில் குமாஸ்தாவாக பணியாற்றுகிறார். இந்த மாதிரி ஒரு நிலையில் தான் பர்வத வர்த்தினியின் கணவர் இருந்தார்.
ஆனால் பர்வதவர்த்தினி ஒரு புத்திசாலிப்பெண். மானுட முயற்சியும் இறை அருளும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற உண்மையை நன்கு அறிந்து இருந்தாள் இறைவனை கண்டதில்லை. இறைவனை கண்டு எப்படி நம்முடைய பிரார்த்தனையை சமர்ப்பிப்பது.என்று குழம்பிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுதான் அவளுக்கு நம்முடனேயே வாழும் தெய்வம் மஹாபெரியவா பரமேஸ்வரனை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை பலிக்கும்.காரியம் கை கூடும் என்று உறுதியாக நம்பினாள்.
பர்வதவர்த்தினிக்கு மீண்டும் ஒரு கவலை. உலகின் மிகச்சிறந்த கம்பெனிகளுள் இந்த நிறுவனமும் ஒன்று.இந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் ஏராளம்.அதிலும் தேர்வாகி நேர்முக காணலுக்கு தேர்வாகி இருப்பவர்கள் சுமார் நூறு பேர். ஆனால் இருக்கும் வேலை ஒருவருக்குத்தான். இந்த போட்டியில் என் கணவருக்கு வேலை கிடைக்குமா மாமா என்று நம்பிக்கையில்லாமல் கேட்டாள் பர்வதவர்த்தினி.
நிச்சயம் உன் கணவர் தேர்வாகிவிடுவார். கவலை படவேண்டாம்.என்று சொன்னேன். எனக்குள் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.. எத்தனை பேர் வேண்டுமானாலும் நேர்முகதேர்வுக்கு வரட்டும். அத்தனை பேருமா மஹாபெரியவா குரு பூஜை செய்தவர்கள். இவர் ஒருவர் தானே. ஆகையால் நிச்சயம் இவருக்கு வேலை கிடைக்கும் என்பது என்னுடைய கணிப்பு மட்டுமல்ல. குரு பூஜை மேல் இருக்கும் நம்பிக்கையும் கூட.
மஹாபெரியவா குரு பூஜை அற்புதம்
பொழுது விடிந்தது. உலகத்திற்கு மட்டுமல்ல. பர்வதவர்த்தினிக்கும் தான். காலை பதினோரு மணி சுமாருக்கு அந்த ஒரு வேலை யாருக்கு என்று தெரிந்துவிடும். பதினோரு மணியும் வந்தது. கணவரும் வீட்டிற்கு வந்தார். வந்தவுடன் மஹாபெரியவா பொற் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். எழுந்தார். அவர் சொன்ன செய்தி பர்வத வர்த்தினியின் காதுகளில் தேனாக பாய்ந்தது. ஆமாம் அந்த ஒருவரு வேலை பர்வதவர்த்தினியின் கணவருக்கு கிடைத்து விட்டது.
ஆம் அன்றுதான் பர்வதவர்த்தினியின் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது. அது ஒரு பன்னாட்டு நிறுவனமானதால் பிரான்ஸ் நாட்டில் பயிற்சிக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். பர்வதவர்த்தினி தன்னுடைய கணவர் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை பார்த்து கையசைத்துக்கொண்டிருந்தாள்.
நான் என் வீட்டில் மஹாபெரியவா முன் நின்று என் கண்ணீர் துளிகளால் மஹாபெரியவாளுக்கு பாத பூஜை செய்து கொண்டிருந்தேன்.. நான் தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து செய்யும் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மேலும் ஒரு குடும்பம் பயன் பெற்றது.
என்னுடைய பிரார்தனைக்கும் பர்வதவர்த்தினியின் குரு பூஜைக்கும் பலன் கொடுத்த மஹாபெரியவா கருணா சாகரன் உங்களுக்கு என் நமஸ்கரங்கள் என்று சொல்லி என் ஒரு கரத்தை மட்டும் நெஞ்சில் வைத்து என் நமஸ்கரங்களை சமர்பித்தேன். (எனக்கு இடது கரம் மட்டுமல்ல இடது புறம் பாகவத நோயால் பாதிக்கப்பட்டுவிட்டது. என்னால் ஒரு கையால் மட்டுமே நமஸ்காரம் செய்ய முடியும்).
“பெரியவாதான் காமாட்சி
காமாட்சிதான் பெரியவா”
தொடுவார் தொட்டால் பூக்கள் மலரும்
தொடுவார் தொட்டால் விழுதுகள் வளரும்
தொடுவார் தொட்டால் பட்ட மரம் கூட உயிர் பெற்று விடும்
மஹாபெரியவா தொட்டால் உயிரற்ற வாழ்கை கூட
உயிர் பெற்று விடும்
மஹாபெரியவா குரு பூஜை திசை மாறிய வாழ்க்கையை
சரியான திசையில் செலுத்தும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்