குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-III- பர்வதவர்த்தினி
குரு பூஜை அற்புதங்கள்-10-பாகம்-III- பர்வதவர்த்தினி

உனக்கு வேண்டியதை எல்லாம் செய்யும் பொழுது
தாய் தந்தை என்று இரு உயிர்கள் கரைகின்றன
எப்பொழுதும் இதை கவனத்தில் கொள்ளவும்
பர்வதவர்த்தினியின் குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற பிரார்த்தனையை மஹாபெரியவா இன்னும் ஆசிர்வதிக்காததால் இந்த மூன்றாவது வார அற்புதத்தை குழந்தை பாக்கியம் பிரார்த்தனை ஈடேறிய பிறகு வரும் வாரங்களில் வெளி வரும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவது என் கடமை. ஆகவே இந்தபதிவு.
இதன் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பிரார்த்தனைகள் ஈடேறிய பிறகு தான் இந்த குரு பூஜை அற்புதங்களில் எல்லா மஹாபெரியவா அற்புதங்களும் இடம் பெறும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்கிறது.
நான் முதலிலேயே சொல்லியிருந்தேன் பர்வதவர்த்தினியின் குழந்தை வரம் இன்னும் ஈடேறாததால் ஸ்ரீ ஆண்டாள் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய மேலும் ஒரு அற்புதம் வெளியாகும் என்று.ஆனால் அதற்குள் பர்வதவர்தினி வாழ்வில் மேலும் ஒரு அற்புதத்தை மஹாபெரியவா நிகழ்த்தினார்.
ஆகவே இந்த வாரம் பர்வதவர்த்தினியின் மூன்றாவது வார அற்புதம் வெளிவருகிறது.இது நிச்சயமாக குழந்தை பாக்கிய அனுக்கிரஹம் இல்லை.. மேலே படித்து தெரிந்துகொண்டு மஹாபெரியவாளை வணங்குங்கள். பர்வதவர்தினி வாழ்வில் நிகழ்ந்த மேலும் ஒரு அற்புதம் இன்று இடம் பெறுகிறது. தவறாமல் படித்து மஹாபெரியவாளின் அனுகிரஹத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள்.
******
சென்ற வாரம் எத்தனையோ விண்ணப்பங்களில் பர்வதவர்த்தினியின் கணவர் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்பட்டு நூற்றுக்கணக்கான பேரில் இவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடு சென்றதோடு அற்புதம் நிறைவு பெற்றது.
கணவரை மிகவும் சந்தோஷமாக வழியனுப்பிய பர்வதவர்த்தினிக்கு புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்க ஆரம்பித்தது. ஆம்! பர்வதவர்த்தினியின் புகுந்த வீட்டில். வழக்கமான பிரச்சனை தான். மாமியார் நாத்தனார் பிரச்சனைகள் தான்.
இத்தனை நாளும் கணவரின் துணையோடு வந்த பிரச்சனைகளை எதிர்கொண்டாள் பர்வதவர்த்தினி. புகுந்த வீட்டிலும் சரியான நேரம் பார்த்து காத்திருந்தனர். இப்பொழுது ஒரு வெள்ளாட்டுக்குட்டி சிங்கத்தின் குகையில் மாட்டிக்கொண்டது போல மாட்டிக்கொண்டாள் பர்வதவர்த்தினி.
எல்லோரும் காலையில் அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்புவதென்றால் மிகவும் மன மகிழ்ச்சியோடு திரும்புவார்கள். ஆனால் நம்முடைய நாயகி மட்டும் வீட்டிற்கு வரும் பொழுது இரவு ஏழு மணியாகிவிடும். ஏழு மணி தானாகவே ஆகி விடாது. நம்முடைய நாயகி ஏழு மணி ஆக்கிவிடுவாள். வீட்டிற்கு செல்வதென்றால் அவ்வளவு பயம்.
சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்ட ஆட்டுகுடியல்லவா அவள். சில நாட்கள் மாலை வீட்டிற்கு செல்லும் முன் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து என்னிடம் தன்னுடைய பயத்தை சொல்லுவாள். எனக்கு ஒரு தந்தை பெண்ணை கொடுத்த இடம் சரியில்லையென்றால் எப்படி தவிப்பாரோ அப்படி நானும் தவிப்பேன். எனக்கு பெண் குழந்தைகள் கிடையது. ஆகவே எந்த பெண் பிள்ளைகள் தன்னுடைய கஷ்டத்தை என்னிடம் சொல்லும்பொழுது ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் கேட்பேன். சிலருடைய கஷ்டங்களை கேட்கும்பொழுது அழுதும் விடுவேன்.
ஒரு நாள் தன்னால் இனிமேல் முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டாள் பர்வதவர்த்தினி.இந்த சமயத்தில் தன்னுடைய இயலாமையை என்னிடம் தெரிவித்தாள். நானும் அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு மறு நாள் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா பர்வதவர்த்தினியின் கணவருக்கு அத்தனை போட்டிகளுக்கு நடுவில் அந்த வேலையை வாங்கிகொடுத்தீர்கள். அவளுடைய மற்றொரு ப்ரார்தனையான குழந்தை வேண்டுதலுக்கு அவளுக்கு எப்பொழுது அனுக்கிரஹம் செய்ய முடியுமோ அப்பொழுது செய்யுங்கள் பெரியவா.
இப்பொழுது அவளுடைய கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை அவளுடைய மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார்கள் படுத்தி எடுக்கிறார்கள். ஒரு நாள் தள்ளுவதே ஒரு யுகம் போல இருக்கிறதாம் பெரியவா. அவளுடைய கணவரும் இப்பொழுது அங்கில்லை. அவளுக்கு நீங்கள்தான் பெரியவா எல்லாம்.கொஞ்சம் அவளுக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
மஹாபெரியவா சிறிது அமைதிக்கு பிறகு என்னிடம் கேட்டார்.
அவளுக்கு அவளுடைய அப்பா அம்மா கூட இருக்க முடியுமான்னு கேளு என்று சொல்லி முடித்து விட்டார். நானும் மறு நாள் பர்வதவர்த்தினியையை தொடர்பு கொண்டு மஹாபெரியவா உன்னோட அப்பா அம்மா கூட இருக்கமுடியுமான்னு கேட்கிறார் என்று சொன்னேன்.
அதற்கு பர்வதவர்த்தினியின் பதில்
"மாமா என்னோட அப்பா அம்மாவோட இருக்கணும்னா நான் அவர்களின் ஊருக்கு நான் என்னுடைய நிறுவனத்தில் சொல்லி இட மற்றம் கேட்கவேண்டும். நான் இப்பொழுது கேட்டால் இன்னும் ஒரு வருடத்தில் அவர்கள் என்னுடைய கோரிக்கையை பரிசீலிப்பார்கள். இது முடியாது மாமா. முதலில் என்னுடைய கோரிக்கையை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
பின்பு அங்கிருந்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்i. பின்பு சில மாதங்கள் கழித்துதான் அவர்களால் என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்க முடியுமானு சொல்லுவார்கள். இது நடக்காத காரியம் மாமா. அதற்குள் நான் இங்கு ஒரு வழியாகி விடுவேன். என்று தன்னுடைய நிலையை எனக்கு தெளிவாக்கினாள்.
நான் அவளிடம் சொன்னேன் நான் நாளை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவாளிடம் கேட்டு சொல்வதாக சொன்னேன். மறு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிராத்தனையில் பொழுது முதல் பிரார்த்தனையாக மஹாபெரியவாளிடம் பின்வருமாறு என்னுடைய பிரார்த்தனையை சமர்பித்தேன்.
"பெரியவா அவளுடைய அப்பா அம்மாவுடன் இருக்கணும்னா அவள் அவர்கள் ஊருக்கு மாற்றல் வாங்கி போகவேண்டுமாம்.ஆனால் அந்த மாற்றல் கிடைக்க ஒருவருடத்திற்கு மேலாகுமாம்.அதுவரை அந்தக்குழந்தை தங்க மாட்டாள் போல இருக்கிறது பெரியவா. அவளுக்கு எதாவது விமோச்சனம் செய்யுங்கள் பெரியவா என்று சொல்லி என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
மஹாபெரியவா என்னிடம் திரும்ப சொன்னார்
"அதைத்தாண்டா முதலிலேயே கேட்டேன் அவளால் அவள் ஊருக்கு போக முடியுமான்னு: என்று சற்று நிறுத்தி விட்டு அவளை இட மாற்றத்கிற்கு விண்ணப்பிக்கச்சொல் என்றார். நாளைக்கு இட மற்ற விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் நாளைக்கு எனக்கு கொஞ்சம் பசும்பால் வைத்து அதிகாலையில் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ளச்சொல். என்று முடித்துக்கொண்டார்.
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இருந்தாலும் மஹாபெரியவா ஒன்று சொல்லிவிட்டால் யாரும் அதை பற்றி பேசவோ சர்ச்சையோ பண்ண முடியாது. நானும் சரியென்று மஹாபெரியவாளிடம் விடை பெற்று என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
மறுநாள் காலையில் பர்வதவர்த்தினி என்னை தொடர்பு கொண்டாள் நானும் மஹாபெரியவா சொன்னதை அப்படியே சொல்லி நாளை காலை பிரும்ம முகூர்த்தத்தில் செய்து விடு என்றேன். அவளுக்கு ஒரே ஏமாற்றம் .என்ன மாமா இது இன்னும் ஒரு வருஷத்திற்கு மேலாகும் மாமா. அதுவரை எனக்கு இது நரகம்தான் என்று சொன்னாள்.
நான் அவளுக்கு சொன்னேன் "உன்னுடைய பிரச்சனைகளை மஹாபெரியவா நன்றாக உள் வாங்கிக்கொண்டுதான் இந்த பிரார்த்தனையை சொல்லியிருக்கிறார்.. மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில் முடியாது என்பதற்கு இடமே இல்லை.மஹாபெரியவா சொன்னதை செய்து விட்டு உன்னுடைய இட மற்ற விண்ணப்பத்தை உன்னுடைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிடு. நல்லதே நடக்கும் என்று சொல்லி விடை பெற்றேன்.
பர்வதவர்த்தினியைவிட எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. மஹாபெரியவா இதுவரை நடத்திய பிரும்ம முகூர்த்த அற்புதங்கள் எனக்கு தைரியத்தை கொடுத்தாலும் எனக்குள் ஒரு கவலை. நானும் மனிதன் தானே.வழக்கமாக ஒரு வாரத்தில் நடக்கவேண்டியது ஒரு நாளில் நடக்கும். ஒரு மாதத்தில் நடக்கவேண்டியது ஒரு பத்து நாளில் நடக்கலாம்.
இந்த இடமாற்றம் ஒருவருடத்திற்கு மேல் ஆகும் என்றால் இன்னும் எத்தனை நாட்களில் நடக்கும். அதுவரை பர்வதவர்த்தினி தாங்குவாளா. மஹாபெரியவளுக்கே வெளிச்சம் என்று என் மனதை தேற்றிக்கொண்டேன்.
சரியாக ஒரு நான்கு நாட்கள் இருக்கும். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. பர்வதவர்த்தினியை அழைத்து இட மாற்ற விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறதென்று கேட்டேன். அவளும் சொன்னாள் மாமா நான் அன்றைக்கே சொன்னேன். ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று. என் தலை விதிக்கு நீங்கள் என்ன செய்யமுடியும் மாமா. நீங்கள் பிரார்த்தனைதான் பண்ண முடியும். எனக்கு விதியில் இடமிருந்தால்தான் எதுவுமே நடக்கும். ஏதாவது எனக்கு தெரிந்தால் உங்களுக்கு உடனே சொல்லுகிறேன் மாமா என்று தன்னுடைய கவலையை தெரிவித்து விட்டு விடை பெற்றாள்.
எனக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது.பாவம் இந்தப்பெண் தனியாக என்ன செய்வாள்.அவளுக்கு மஹாபெரியவாதான் துணை நிற்க வேண்டும். இந்த ஒரு வருடம் ஒரு நொடிபொழுது போல கழிய வேண்டும் என்று மஹாபெரியவளை உருகி வேண்டிக்கொண்டேன்.
மஹாபெரியவாளின் அற்புதம்
சரியாக ஆறாவது நாள் நான் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையை செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது பர்வதவர்த்தினியின் முறை வந்தது. அப்பொழுது நான் மீண்டும் மஹாபெரியவாளிடம் வேண்டினேன்
."பெரியவா பர்வதவர்த்தினி பாவம் பெரியவா. அவளுக்கு எதாவது அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா.என்று கேட்டுக்கொண்டேன்.அதற்கு மஹாபெரியவா சொன்னார். அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு.எத்தனை தடவை கேட்பேடா. என்று சொன்னதும் நான் அமைதியாகி விட்டேன்.
எனக்கோ இருப்பு கொள்ளவில்லை.அந்தப்பெண் பாவம் . என்ன கஷ்டப்படுகிறாளோ என்று மனவருத்தத்துடன் அந்த நாளை போக்கினேன்.
எனக்கு ஒரு சுபாவம் உண்டு. நான் யாருக்காவது பிரார்த்தனை செய்து அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றால் பதில் கிடைக்கும் வரை எனக்கு தூக்கம் வராது.சாப்பிடப்பிடிக்காது. அவர்கள் படும் கஷ்டத்தை நான் அனுபவிப்பதைப்போல கஷ்டப்படுவேன். பிரும்ம ,முகூர்த்த பிரார்த்தனைநேரம் போக மீதி நேரத்திலும் மஹாபெரியவாளை அரித்துக்கொண்டே இருப்பேன்.
ஆனால் என் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்க விலையென்று நான் படும் அவதிகள் அவர்களுக்கு எப்படி தெரியும். நானும் அவர்களுக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருப்பேன்., ஏன் தெரியுமா குரு பூஜை செய்தவர்களுக்கு நிச்சயம் பலன் இல்லாமல் போகாது.
என் மேல் வருத்தப்படும் சிலர் காலம் தாழ்த்தி அவர்களுடைய பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும் பொழுது என்னை நேரில் சந்தித்து கண்ணீர் சிந்துவார்கள். ஏன் காலம் தாழ்த்தி பதிலும் கிடைக்கிறது. சமயத்தில் பதிலே கிடைப்பதில்லை.
இப்படி பதிலே கிடைக்காத பிராத்தனைகள் நூற்றுக்கு இருப்பது பேருக்காவது இருக்கும். ஆனால் இந்த இருபது பேருக்கு பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதற்காக என்பது பேருக்கு நான் பிரார்த்தனை செய்யாமல் இருக்க முடியுமா? அது நியாயமா?
என்னை எவ்வளவு பேர் திட்டினாலும் என் மனசாட்சிக்கு தெரியும்.ஒவ்வொருவருக்கும் என் உயிரை கொடுத்து பிரார்த்தனை செய்கிறேன்.ஒரு பிரதிபலனும் பார்க்காமல் மற்றவர்கள் நலனுக்காக என்னுடைய ஒரு கை ஒரு காலை வைத்துக்கொண்டு வாழும் சுயநலமற்ற வாழ்க்கையில் இருக்கும் சுகம் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்காது. இதற்கும் மஹாபெரியவா அனுகிரஹமும் ஆசிர்வாதமும் இருந்தால்தான் நடக்கும்.
இனி பர்வதவர்த்தினியின் வாழ்க்கைக்கு வருவோம்.
மஹாபெரியவா சொன்ன பசும்பலாலும் விளக்கும் ஏற்றி பிரார்த்தனை செய்தாகி விட்டது . என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டு அந்த நாளை கவலையோடு நகர்த்திக்கொண்டிருந்தேன். சரியாக ஒரு நான்கு மணி இருக்கும்.என்னுடைய கைப்பேசி என்னை அழைத்து.
மறு முனையில் பர்வதவர்த்தினி. எனக்கு ஒரே கவலை. என்னென்ன கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறாளோ. நானும் கைபேசியை எடுத்து ஹலோ என்றேன். மறு முனையில் வழக்கத்திற்கு மாறாக மாமா என்று ஒரே சந்தோஷ கூக்குரல். நான் என்ன பர்வதவர்த்தினி உன்னுடைய கணவர் உன்னையும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து செல்லப்போகிறாரா. என்று வேடிக்கையாக கேட்டேன்.
பர்வதவர்த்தினி சொன்னாள். மஹாபெரியவா என் வாழ்க்கையிலும் அற்புதம் பண்ணிட்டார் மாமா. என்னுடைய இட மற்ற விண்ணப்பம் கிடைத்து ஆறே நாளில் எனக்கு என்னுடைய பெற்றோர் வாழும் ஊருக்கே மாற்றல் கொடுத்து விட்டார்கள். இது சரித்திரத்திலேயே நடக்காத ஒரு சம்பவம் மாமா. எப்படி இது நடந்தது. எனக்கு யாரையும் தெரியாது. தெரிந்தாலும் இவ்வளவு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பே இல்லை மாமா., மஹாபெரியயவா என் வாழ்க்கையில் நடத்திய அற்புதத்திலும் அற்புதம்.
நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வேலையில் சேர்ந்து விடுவேன் மாமா. ரொம்ப நன்றி என்று என்னிடம் சொன்னாள். நானும் அந்த நன்றிகள் வணக்கங்கள் எல்லாவற்றையும் மஹாபெரியவா பாதங்களில் சமர்பித்துவிடு என்று சொன்னேன்.
என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள். ஒரு நிம்மதி பெருமூச்சு.
கவனத்தில் கொள்க:
தன்னுடைய மாமியார் மாமனாரை பார்த்துக்கொள்ள அவர்கள் பெற்ற மகள்கள் இருக்கிறார்கள். இனிமேல் யாரை கொடுமை படுத்துவார்களோ தெரியவில்லை.
பர்வதவர்த்தினியின் கணவருக்கு மாற்றல் விஷயம் தெரிந்து இவளை கேட்டாராம். உனக்கு உயர் மட்டத்தில் யாரையாவது தெரியுமா. தெரிந்திருந்தால் கூட இவ்வளவு சீக்கிரம் எப்படி சாத்தியம் என்று கேட்டாராம். பர்வதவர்த்தினியும் ஆமாம் எனக்கு மிகப்பெரிய ஒருவரை தெரியும். நீங்கள் நேரில் வரும்பொழுது உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று வேடிக்கையாக சொல்லிவிட்டு விடைபெற்றாளாம். அந்த பராமப்பொருள் யாராக இருக்கும் என்ன சந்தேகம் நம் மஹாபெரியவா தான்
இன்று சமுதாயத்தில் கிடைக்காத ஒன்று
மனித நேயமும் தட்டிக்கொடுக்கும் மனப்பான்மையும்தனே
இது மட்டும் இருந்துவிட்டால் ஸ்நேகமும் உறவும்
என்றும் பலப்படுமே நம் ஆயுட்காலத்தையும் தாண்டி
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்