Featured Posts

108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள்


மஹாபெரியவா உன்னை மஹாவிஷ்ணு என்று அழைக்கவா உன்னை ஈஸ்வரன் என்று அழைக்கவா உன்னை காமாட்சி என்று அழைக்கவா எப்படி அழைத்தால் என்ன நீ ஒரு பிரபஞ்சம் பரம்பொருள் நாங்கள் உடலால் வாழ்கிறோம் நீ பிறப்பில் இருந்தே உணர்வாலும் உள்ளத்தாலும் எங்களுக்கு வாழ்ந்து காட்டிய இற்றை அவதாரம் அணைத்து திவ்ய தேசங்களும் நீ

108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள்

என் இனிய உறவுகளே

இதோ உங்களுக்காக இன்று காலை மஹாபெரியவா எனக்கிட்ட மற்றும் ஒரு கட்டளை.. கட்டளையின் சம்பாஷணை இதோ உங்களுக்காக.

பெரியவா: ஏண்டா போன வாரம் சக்தி பீடங்களை பற்றி எழுத சொன்னேன். நீயும் எழுதினே. நானும் பார்த்தேன். நன்னாவே எழுதி இருக்கே. நான் இன்னும் ஒன்னு சொன்ன பண்ணுவியா.?

நான்: நிச்சயம் பண்ணறேன் பெரியவா.

பெரியவா: நீ இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் 108 வைஷ்ண திவ்ய தேசங்களை பத்தி எழுது. நான் ஏன் சொல்லறேன்னா இன்னிக்கு இருக்கற குழந்தைகள் பெரும்பாலும் தனி குடித்தனம் அப்படிங்கற பேருலே தனியாக குடித்தனம் நடத்திக்கொண்டு யாருடைய வழி காட்டுதலும் இல்லாமே வாழ்ந்துண்டு இருக்கா.

வாழ்க்கை வாழறதுகுக்குத்தானே தவிர வாடறதுக்கு இல்லையே. இதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமே தெருவிலே சண்டை போடறதும் பெத்தவாளை நடுத்தெருவிலே நிறுத்தறதும் கலி காலத்தின் கொடுமையா இருக்கு.

நீ உன்னால் முடிஞ்சவரைக்கும் ஒரு விரலாலே சத் விஷயங்களை எழுதி அவாளை நல்ல வழிக்கு கொண்டு வா. உன்னோட எழுத்துக்களாலே ஒரு ஆத்மா திருந்தினாலும் உன்னோட எழுத்துக்களுக்கு அந்த புண்ணியம் போய் சேரும். இது மாதிரி நல்ல சத் விஷயங்களை எழுதிண்டே இரு.

நானும் உனக்கு ஒவ்வொன்னா சொல்லிண்டே இருக்கேன்.சளைக்காமல் எழுது .உன்னோட செயலை செய். பலனை என் கிட்டே விட்டுடு. இதை இந்த வாரம் சனிக்கிழமையில இருந்து எழுது..

முதல் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம். இதை பூலோக வைகுந்தம் அப்படின்னும் சொல்லுவா. உன்னோட எழுத்துக்களை படிக்கறவா மனசுலே போய் ஆத்ம கதவை தட்டும்.. நீ எழுத்தாளனா இலேன்னாலும் உன்னோட முதல் புஸ்தகம் "என் வாழ்வில் மஹாபெரியவா" எத்தனை பேரோட கண்களை குளமாகித்து.

நீ எழுதற ஒவ்வொரு எழுத்துக்கும் இறை சக்தியை கொடுத்து இறைவனே படிக்கறவளோட ஆத்மாக்குள்ளே சங்கமம் ஆகி சிந்தனையை நல்ல வழியில் திருப்பி வாழ வெச்சுண்டு இருக்கே.

நீ ஒரு விரலால் இத்தனையும் எழுதறே. எழுதும் பொழுது வலியால் விரலை அமுக்கி விட்டுக்கொண்டே பெரியவா அப்படின்னு நீ கூப்பிடும் போது எனக்கு வலிக்கிறதுடா?

உனக்கு இதுதான் கடைசி ஜென்மம். நானே உன்னை வந்து அழைச்சுண்டு போறேன்.நீ வலியை தாங்கிக்க தாங்கிக்க நீ உளிகொண்டு செதுக்கும் சிற்பமாக மாறிண்டே இருக்கே.

நீ என்னை காத்து போகமுடியாத இடத்துக்கும் கூட உன் எழுத்துக்களால் எடுத்துண்டு போறே. நீ என்னை அடிக்கடி கேட்டு துளைச்சு எடுப்பையே. "நான் யாருன்னு".. இப்போ உனக்கே தெரிஞ்சிருக்குமே உன்னை ஏன் நான் இத்தனை கோடி பேரில் தேர்ந்தேடுத்து உன்னை வெச்சு நான் நெனைச்சதை எல்லாம் நினைவாக்கிண்டு இருக்கேனே. நான் சொல்லறத்துக்கு மறுபேச்சு பேசாமே எல்லாத்தையும் நல்லபடியா பண்ணிண்டு இருக்கே.உன்னோட உடம்பு வலியை கூட தாங்கிண்டு பன்னரே. உனக்கு இது கைடைசி ஜென்மம் என்பதை மறந்துடாதே. நீ நன்னா இரு.

நான் பெரியவா: நான் ஒன்னு கேட்டாக்கா தருவேளா?

பெரியவா: சொல்லுடா என்ன வேணும்.

நான்: எனக்கு ஒரு ஆசை.பெரியவா. என்னோட கடைசி மூச்சு எப்போ நிக்கனும்னு என் மனசுக்குள் எழுதி வெச்சுண்டு இருக்கேன்.அதாவது உங்களோட பக்தர் ஒருவருக்கு நான் பிரார்த்தனை செஞ்சுண்டு இருக்கும் ;போதே என் ஆத்மா பிரியனும். அந்த கடைசி பிரார்த்தனை கூட அந்த பக்தருக்கு நடக்கணும். செய்வேளா பெரியவா.

பெரியவா: நிச்சயம் உண்டோட ஆத்மா நீ நினச்சா மாதிரியே பிரியும். கவலை படாதே. இந்த சனிக்கிழமையில் இருந்து திவ்ய தேசங்களை பத்தி எழுது. லோகா சமஸ்தா சுகினோ பாவந்து இந்த வாக்கியத்துக்கு

நீ ஒரு வாழும் உதாரணாம்டா. நன்னா இரு.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்