top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா


அற்புதத்தின் சுருக்கம்: ஒருவரது உள்ளத்தை புரிந்துகொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையில் பிரச்னைகளுக்கே வழியில்லையே. கணவன் மனைவி உறவுகளின் உறவுகள் நட்புகளின் நட்புகள் எங்கும் ஒரு புரிதலோடு உறவு முறைகள் சீரடைந்து வாழ்க்கையும் சீராக இருக்கும் அல்லவா. அப்படி மற்றவர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடையே யாருக்கும் இல்லையே. ஆனால் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா லக்ஷ்மணன் மாமாவின் உள்ளத்திலிருக்கும் திருமண பிரச்சனைக்கு மாமாவின் உள்ளத்தை படித்து புரிந்து பிரச்சனைக்கு ஒரு தீர்வை நல்கிய அற்புதம் அற்புதம் மட்டுமல்ல. நமக்கும் ஒரு பாடம். என்ன படம் என்பதை புரிந்து கொள்ள இந்த அற்புதத்தை படியுங்கள்.

*********

லக்ஷ்மணன் மாமாவின் திருமண பிரச்சனை திருவானைக்காவல் கோவிலில் தான் மஹாபெரியவா முன்னிலையில் பேசப்பட்டது. பேசிய ஒரு சில வினாடிகளில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது. அதனால் தான் இந்தப்பதிவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் படங்கள் இடமம்பெற்றுள்ளன.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் தாயார்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா

உங்களைப்பற்றி கடவுள்

என்ன நினைக்கிறார்

கவலைப்படுங்கள்

உங்களைப்பற்றி சமுதாயம்

நினைப்பதை பற்றி

கவலை படாதீர்கள்

உங்கள் வாழ்க்கை பாதை

நன்றாக அமையும்”

- காயத்ரி ராஜகோபால்-

மாமாவைப்பற்றி சொல்ல வேண்டுமானால் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். இந்தக்காணொளி முழுவதும் மாமாவின் ஒளிவு மறைவில்லாத அப்பழலுக்கற்ற இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் வார்த்தைகளை நாம் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். மாமாவின் எதார்த்தமான பேச்சு ஒரு குழந்தை பேசுவதைப்போல இருக்கும்.

பேசும்பொழுது பலமுறை மஹாபெரியவா பரமேஸ்வர அவதாரம் என்பதை பதிவு செய்திருக்கிறார். மாமாவின் வாழ்க்கை சம்பவங்கள் மஹாபெரியவா ஒரு த்ரி கால ஞானி என்பதை பல முறை உறுதிப்படுத்துகிறது.

நிறைய இருந்தாலும் ஒரு சிலதை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்,இது சாகரத்தில் ஒரு துளிதான். சாகரத்தையே அனுபவிக்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.

முதல் முதலில் மஹாபெரியவளை தரிசனம் செய்தது எட்டு வயதாக இருக்கும் பொழுது ஐயம்பேட்டையில். மாமா குழந்தை பருவத்தை தாண்டி வாலிபப்பருவம் வாழ்ந்து யவ்வனப்பருவதை எட்டியதும் வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. இந்த சமயத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தார் மாமா. ஆனால் திருமணத்தை தட்டிக்கழிக்க ஒரு யோசனை செய்தார்.

உத்திரவு செய்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வீட்டில் சொன்னார். ஆனால் மஹாபெரியவாளிடம் தன்னுடைய கஷ்டங்களை எடுத்து சொல்லி திருமணத்தை தள்ளிப்போடலாம் என்று முடிவு செய்தார்.

வருடம். 1984 மஹாபெரியவா திருவானைக்காவலில் முகமிட்டிருந்தார். மாமா தன்னுடைய அத்தையை அழைத்துக்கொண்டு மஹாபெரியவாளை தரிசனம் செய்ய கிளம்பி விட்டார். ஆனால் மஹாபெரியவளை தரிசிக்க லக்க்ஷ கணக்கில் மக்கள் குவிந்திருந்தனர். மாமா அனேகமாக இடமில்லாமல் கூட்ட நெரிசலில் தெருவிலேயே நின்று கொண்டிருந்தார். மாமாவுக்கு நம்பிக்கை இல்லாமல் அத்தையுடன் ஊருக்கு கிளம்ப திரும்பினார்.

ஸ்ரீ கார்ய மனுஷாளில் ஒருவர் வேகமாக ஓடி வந்து வாங்கோ உங்களுக்கு மஹாபெரியவா உத்தரவு ஆகியிருக்கிறது. வாங்கோ என்று கூப்பிட்டார். மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை உங்களுக்காவது புரிந்ததா.

கூட்ட நெரிசலில் மஹாபெரியவா மாமாவை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் மஹாபெரியவாளிடம் யார் சொல்லியிருப்பார்கள். யார்சொல்ல வேண்டும். இன்னுமா புரியவில்லை.

ஞானக்கண்களாலேயே முக்காலங்களையும் உணர்ந்து கொள்ளும் பரமேஸ்வரன் அல்லவா மஹாபெரியவா. மஹாபெரியவாளிடம் சென்று மாமா என்ன சென்னார். அதற்கு மஹாபெரியவா என்ன யோசனை சொன்னார். மாமாவிற்கு திருமணம் ஆயிற்றா? என்பதை எல்லாம் அறிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.

படைத்த பரமேஸ்வரனுக்கு

பூச்சி முதல் மனிதன் வரை படைத்த பரமேஸ்வரனுக்கு

மனித தலை விதியை காண முடியாதா என்ன

தலைவிதியைத்தான் மாற்றி எழுத முடியாதா என்ன

சாத்தியமே மாமாவின் திருமணமும் சாத்தியமாயிற்று

சரணம்

ஜம்புகேஸ்வரர் கோவிலின் உள் பிரகாரம்

முறை மாமா மஹாபெரியவாளை தரிசித்து " உங்களுடைய பாத ரக்க்ஷை வேணும் பெரியவா என்று கேட்டவுடன் மஹாபெரியவா உனக்கு எதுக்கு பாத ரக்க்ஷை என்று கேட்டவுடன் மாமா சொன்னார். உங்கள் பாதரக்ஷை என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் என்று சொன்னார். அதற்கு மஹாபெரியவா சொன்னார். உனக்கு இப்பொழுது தேவையில்லை. வர வேண்டிய நேரத்தில் என் பாத ரக்க்ஷை உன்னை வந்து சேரும் என்று சொன்னார். மாமாவும் நமஸ்கரித்து விட்டு வந்து விட்டார்.

பல நாட்கள் கழித்து மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகு மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு சென்றார். அப்பொழுது பிரதக்க்ஷணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பழைய நினைவுகள் மாமாவிற்கு வந்து விட்டது.

தனக்கு சரியான நேரத்துல பாத ரக்க்ஷை வந்து சேரும் என்று சொன்னதை நினைவு கூர்ந்தார் இந்த நினைவாகவே பிரதக்ஷணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மடத்தில் இருந்து கைங்கர்யம் செய்பவர்களில் ஒருவர் புது பெரியவா உங்களை கூப்பிடறார் என்று சொன்னவுடன் மாமா வேகமாக புது பெரியவாளை நமஸ்கரித்து விட்டு நின்றார்.

புது பெரியவா மடத்து கைங்கர்ய மனுஷாள் ஒருவரிடம் வெளியில் ஒரு காகிதத்தில் மஹாபெரியவா பாத ரக்க்ஷை சுற்றி வைத்துள்ளது. அதை எடுத்துண்டு வாங்கோ. லட்சுமணனுக்கு கொடுக்க சொல்லி மஹாபெரியவா உத்தரவு. என்று சொல்லி சரியான நேரத்தில் பாத ரக்க்ஷயை லக்ஷ்மணன் மாமாவிடம் கொடுத்தார் புதுபெரியவா.

என்ன சொல்லுவார் என்ன செய்ய முடியும் கதறி அழுவதைத்தவிர. உயிருடன் நாமெல்லாம் இருக்கும் பொழுதே கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகும் சொன்ன வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டு கொடுத்த வார்த்தையை காப்பாற்றும் குணம் அந்த பரமேஸ்வரனை தவிர யாருக்கு வரும்.

நம் கண்ணனுக்கு தெரியாமல் இருக்கலாம்

அவர் செய்யும் அற்புதங்கள் நமக்கு

கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

இவைகள் மூலம்

முன் ப்ரத்யக்ஷமாக தரிசனம் தருகிறாரே

ஒரு முறை கூட தரிசனம் காணவில்லையே என்ற

ஏக்கமே வேண்டாம்

மனது உருகி அழையுங்கள்

உங்களுக்கு தன்னுடைய அற்புதங்கள் மூல காட்சி தருவார்

கோவிலின் கோபுர தரிசனம்

கொடுக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு மஹாபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=_fJ7wTNK2HI

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page