Featured Posts

திவ்ய  தேச மகிமைகள் தொடரின்  சுருக்கம்:


சைவமும் வைணவமும் இந்து மதத்தின் இரு கண்கள் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா அன்றும் இன்றும் என்றும் இரு கண்களாகவே பாவித்து நமக்கும் கற்றுக்கொடுத்தார்.

திவ்ய தேச மகிமைகள் தொடரின் சுருக்கம்: : வைணவத்தில் நூற்றி எட்டு திவ்ய தேசங்களும் சைவத்தில் இருநூற்று எழுபத்தி நான்கு சிவாலயங்களும் அழவர்களாலும் சைவ சமய நாயன் மார்கhளாலும் மங்களசாசனமும் பாடலும் பெற்ற ஸ்தலங்களாக விளங்குகின்றன. முதலில் அழவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றி எட்டு திவ்ய தேசங்களையும் வரிசை படி பார்க்க உள்ளோம். நூற்றி ஆறு இந்த பூலோகத்திலும் இரண்டு மேல் லோகத்திலும் உள்ளது. இவைகளை வரலாற்று குறிப்புகளோடு உங்களுக்கு சமர்ப்பிக்க என்னால் இயன்ற வரை முயல்கிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இந்த வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்.இந்து மதம் என்பது மதத்தை பற்றி சொன்னதை விட எப்படி வாழ வேண்டும் என்று வாழ்கை முறைகளை நன்றாக வரையறுத்து கூறியுள்ளது. இந்த தொடர் பதிவுகளை தவறாமல் படியுங்கள். உங்கள் அபிப்ராயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். முதல் பதிவு இன்று ஜூன் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி சனிக்கிழமை முதல் (2019 ) வெளி வருகிறது.

வைணவமும் சைவமும் இந்து மதத்தின் இரு கண்கள்

108 -திவ்ய தேச மகிமைகள்

ஓம் நமோ நாராயணா

மஹாபெரியவா பக்த கோடிகளுக்கு என் நமஸ்கரங்கள்,

உங்களுடைய அன்பும் ஆதரவும் என்னுடைய உடல் களைப்பை போக்கி சோர்வை நீக்கி மஹாபெரியவா கைங்கர்யத்தில் தொடர்ந்து ஈடு பட வைக்கிறது என்று சொன்னால் அது நிதர்சன உண்மை.

என்னை இந்த ஆன்மீக பயணத்தில் தொடர்ந்து ஈடுபட வைப்பது இரண்டு பேர். ஒன்று பரமேஸ்வரன் அவதாரம் மகாபெரியவா இரண்டு மஹாபெரியவா எனக்கு கொடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட நல்ல உள்ளங்களை கொண்ட நீங்கள்தான்

இதனால் தான் என்னால் தொடர்ந்து ஒவ்வொரு கைங்கர்யத்திலும் ஈடுபட முடிகிறது. இன்று சமுதாயத்தில் கிடைத்தற்கரிய விஷயங்கள் இரண்டு. மனித நேயமும் தட்டி கொடுக்கும் மனப்பான்மையும் தானே. இந்த இரண்டும் எனக்கு நிறையவே கிடைக்கிறது மஹாபெரியவா அனுக்கிரஹம் உட்பட.

நம்முடைய மஹாபெரியவா கைங்கர்ய தொடரில் அடுத்து நாம் கண்டு அனுபவிக்கப்போவது நூற்றி எட்டு வைஷ்ணவ திருப்பதிகள். இந்தத்தொடர் வரும் ஜூன் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி சனிக்கிழமை முதல் (2019 ) துவங்கப்போகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

உலகத்தில் மிகவும் பழமையான மதம் இந்து மதம். இந்து மதத்திற்கு மட்டும்தான் தோற்றுவித்தவர் யார் எப்பொழுது தோன்றியது என்று வரையறுத்து கூற முடியாது.இந்து மதம் ஒன்றுதான் இறைவனால் உருவாக்கப்பட்ட வாழ்கை முறை. வாழ்கை முறையை போதிப்பது மட்டுமல்லாமல் இறைவன் தானே அவதாரங்கள் பல எடுத்து தான் போதித்தவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து நம் கண் முன்னே வாழ்ந்து கட்டியிருக்கிறான்.

இந்து மதத்தின் இரு கண்கள் சைவமும் வைணவமும். தொன்றுதொட்டு சைவத்திற்கு பரமேஸ்வரனும் வைணவத்திற்கு நாராயணனும் தலையாக இருந்து வருகிறார்கள். நாயன்மார்களும் அழவர்களும் பிறவியெடுத்து அந்தப்பிறவியை மக்களை நல் வழிபடுத்துவதற்கே அர்ப்பணம் செய்தனர்.

இந்து மதத்தின் எத்தனையோ பொக்கிஷங்களை நாம் இழந்து விட்டோம். இருபத்தையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா. போன தலை முறைக்கும் இந்த தலை முறைக்கும் இடையே இந்து மத பொக்கிஷங்கள் எத்தனை காணாமல் போயிருக்கின்றன தெரியுமா?. இந்த தலை முறையை சேர்ந்த நாமெல்லாம் வருகின்ற அடுத்த இளைய தலை முறையினருக்கு எஞ்சிய இந்து மத பொக்கிஷங்களை சீதனமா கொடுக்கலாமே. நீங்கள் என்னுடனும் உடன் படுகிறீர்களா ? வாருங்கள் நம்மால் முடிந்தவரை இழந்ததை மீட்போம். வரும் தலை முறையினரை காப்போம்.

இந்த புதிய தொடரில் வைணவ திருத்தலங்கள் மட்டுமல்லாமல் இருநூற்று எழுபத்தி நான்கு சிவாலயங்களையும் தரிசிக்கப்போகிறோம். வைணவ திருத்தலங்கள் முடிந்தபின் சிவாலயங்களுக்கு செல்லுவோம். இந்தத்தொடரில் வைணவத்தில் பெருமாள் கோவிலில் தலையில் வைக்கும் சடாரியின் முக்கியத்துவம் மற்றும் அதனுடைய தாத்பரியம் சாளக்ராமம் போன்றவற்றை பார்க்கப்போகிறோம். சைவத்தில் விபூதியின் மகிமைகள் வில்வத்தின் சிறப்புக்கள் ருத்ராக்ஷத்தின் மகிமைகள் இன்னும் எத்தனையோ அற்புதவிஷயங்களை அறிந்து அனுபவிக்கப்போகிறோம்.

இந்த திவ்ய தேச தொடரில் திவ்ய தேச சிறப்புக்கள் ஒவ்வொரு திவ்ய தேசத்தின் வரலாறு, பெருமாள் பெயர் தயார் பெயர் கோவில் செயல் படும் நேரம் பிரார்த்தனை குறிப்புகள் நேர்த்திக்கடன் கோவிலுக்கு செல்லும் வழி மற்றும் தேவையான அணைத்து குறிப்புகளையும் பார்த்து படித்து என்னால் முடிந்த வரை உங்களுக்கு அமுது படைக்கிறேன்.

உங்களுக்கு ஏதும் மனதில் தோன்றினாலோ எனக்கு தெரியப்படுத்துங்கள்.நிச்சயம் என்னால் முடிந்தவரை உங்கள் யோசனைகளையும் இந்த தொடரில் உள்ளடக்க முயற்சி செய்கிறேன்.

திவ்ய தேசங்களை பற்றி எழுதும் அதே நேரத்தில் ஆத்ம பரமாத்மாவின் உறவு பூலோகம் வைகுண்டம் பற்றிய விளக்கங்களையும் ஒரு ஆத்மாவின் பரமபதத்தை நோக்கிய பயணம் எப்படி இருக்கும்.ஒரு ஆத்மா உடலை விட்டு பிரியும் நேரத்தில் ஸ்ரீமன் நாராயணன் எப்படி நம்மை அழைத்துபோகிறான் ஒரு ஆத்மா பரமபதத்திற்கு செல்ல முடியாவிட்டாலும் அந்த ஆத்மாவிற்கு ஸ்ரீமன் நாராயணன் எப்படி காட்சி கொடுத்து திரும்ப பூவுலகில் பிறக்க வைக்கிறான் என்பதை எல்லாம் இந்த தொடர் உள்ளடக்கியிருக்கும்.

இந்ததொடர் முடியும் பொழுது வாழ்க்கையை பற்றிய உங்களது எண்ணங்கள் பறந்து விரிவடையும் என்பது நிச்சம். எப்பொழுது உங்கள் எண்ணங்களும் உள்ளமும் பறந்து விரிகிறது அப்பொழுதே உங்களுடைய பரமாத்மாவை நோக்கியப்பயணம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

இந்த தொடருக்கு பிறகு சிவாலயங்களை பற்றிய தொடர் வெளியாகும் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த தொடர் எந்த எந்த நாட்களில் வெளியாகும் என்பதை விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். உங்கள் கமெண்டுகளை பார்த்த பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாவிவரங்களோடும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

இந்தத்தொடர் வெளியாகும் நாள் இன்று (22/6/19) சனிக்கிழமை. . உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளவும்.

வாருங்கள் ஊர் கூடி தேர் இழப்போம். இழந்த நம் பொக்கிஷங்களை மீட்டெடுப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்