Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி


குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி

திருமணத்தில்

அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே

அதுவும் இதுவும் சேர்ந்தகிருந்தால்

திருமணத்தில் அமைதிக்கு வாய்ப்பில்லே

வானத்தில் பறக்கும் பறவையை விட

உங்கள் கைகளில் இருக்கும் சிட்டுக்குருவி

பாதுகாப்பானது மேலானது

இதை புரிந்து கொண்டால்

உங்கள் குடும்ப வாழ்க்கை சிறந்து விளங்கும்

இந்த குருபூஜை அற்புதங்களில் நம்முடைய நாயகியின் பெயர் சாருகேசி. சாருகேசி என்பது கர்நாடக சங்கீதத்தில் மனதை வருடும் ஒரு ராகம்.. அப்பழுக்கற்ற புனிதமான ராகங்களில் ஒன்று.. புனிதம் என்றாலே அது மற்றவர்களின் இதயக்கதவை தட்டும் தன்மை வாய்ந்தது. சாருகேசியும் கர்நாடக சங்கீதத்தின் ராகம் சாருகேசியை போலவே ஒரு அப்பழுக்கற்ற புனித ஆத்மா. இந்த கற்பனை பெயரும் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா எனக்கு கொடுத்தது.

ஒரு நல்ல குடும்பத்திற்கு இலக்கணம் வகுக்கும் ஒரு தமிழ் குடும்பத்தில் இருந்து வந்த பெண் சாருகேசி. இவளுடைய பெற்றோர்கள் இவளுக்கு நாவிற்கு பிடித்ததை சாப்பிட கொடுத்து பழக்கவில்லை. வயிற்றை நிரப்புவதை விட ஆத்ம சந்தோஷத்தை நிரப்ப வேண்டும் என்ற ஆத்மார்த்தமான விஷயங்களை சொல்லிக்கொடுத்து வளைத்திருக்கிறார்கள்.

இவளது நாவை சுவைக்கு அடிமைப்படுத்துவதைவிட மற்றவர் இதயங்களை வருடும் வார்த்தைகளை உச்சரிக்க பழக்கப்படுத்தி வளர்த்திருக்கிறார்கள் இவள் பெற்றோர்கள்.. சாருகேசிக்கு படிப்பில் சரஸ்வதி கடாக்க்ஷம் நிரம்பவே இருக்கிறது. அழகில் மஹாலக்ஷ்மியின் சாயல் நிரம்பவே இருக்கிறது.ஆனால் இத்தனை இருந்தும் மிகவும் பயந்த சுபாவம். தன்பக்கம் இருக்கும் நியாயத்தை கூட எடுத்து சொல்ல தெரியாத பெண்.,. வார்த்தை வன்முறைகள் சுத்தமாக இல்லாத பெண்.

இவள் நடந்து வந்தால் ஒரு பெண் நடந்து வருகிறாள் என்று எவருக்கும் சொல்லத்தோனது. ஒரு நூறாண்டு கால தமிழ் பாரம்பரியம் நடந்து வருகிறது என்றுதான் சொல்வார்கள்.

நம்முடைய நாயகி சாருகேசி ஒரு மென்பொருள் பொறியாளர் பட்டம் பெற்றவர். ஆனால் படித்த படிப்புக்கும் தன்னுடைய பழக்கவழக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார். விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணை பார்த்து நடக்கும் அழகான தமிழ் பெண் சாருகேசி.. மற்றவர்கள் துன்பங்களை தன்னுடைய துன்பங்கள்போல் பாவித்து அவர்களுக்காக கண்ணீர் வடிப்பது மட்டுமல்ல. அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி வேண்டிக்கொள்வதும் எல்லோரும் அறிந்த ஒன்று.

சிவபார்வதி விஷயத்தில் சாருகேசி என்னிடம் அவளுக்காக பிரார்த்தனை செய்யச்சொல்லி அவள் சோர்ந்து போய் நபிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் அவளை ஊக்கப்படுத்தி இறுதியில் வாழ்க்கையில் வெற்றி பெற வைத்து இன்று திருமணமும் ஆகி விட்டது அந்த சிவபார்வதிக்கு.

இந்த மாதிரி இறைவனே மகிழ்ந்து போகும் ஆத்மார்த்தமாக ஒரு ஆத்மா இருந்தால் அந்த ஆத்மாவின் நினைவையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பது இறைவனின் கடமை என்று நமக்கெல்லாம் தெரியும்.. நம்முடைய உள்ளத்தை கோவிலாக மாற்றினால் நம்மை படைத்த இறைவனே வந்து குடி கொண்டு விடுவான்.சாருகேசியும் அப்படிப்பட்ட தன்னுடைய உள்ளத்தை கோவிலாக மாற்றி வைத்திருக்கும் ஒரு பெண்.

உள்ளத்தை கோவிலாக மாற்றியபின் நாம் பேசும் நல்ல வார்த்தைகள் உள்ளக்கோவிலின் வாசலில் நாம் போடும் கோலங்கள். நம்முடைய நல்ல செயல்கள் நம் உள்ளத்தில் குடி இருக்கும் இறைவன் என்ற விக்கிரஹத்திற்கு நாம் செய்யும் அபிஷேங்கள். இவ்வளவையும் நீங்கள் செய்யும்பொழுது அந்த இறைவனே உங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து விடுவான் வாழ்க்கை முன்னேற்றம் என்ற பெயரில்.

இதனை நன்கு உணர்ந்த சாருகேசி தினமும் அவளுடைய உள்ளம் என்ற கோவிலின் வாசலை தெளித்து நல்ல வார்த்தைகளை பேசுவதன் மூலம் கோலம் போட்டுகொண்டிற்றுகிறாள் நல்ல செயல்கள் மூலம் தன்னுடைய கோவிலின் விக்கிரஹத்திற்கு அபிஷேகமும் செய்கிறாள்.

பொதுவாகவே ஒரு ஆணிடம் பெண்ணை விரும்புகிறாயா அல்லது பெண்மையை விரும்புகிறாயா என்று கேட்டால் ஒரு இளமையின் முதிர்ச்சியை அடைந்திருக்கும் ஆணின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா. பெண்மையை என்றுதான் இருக்கும். நம்முடைய நாயகி பெண் படுமல்ல பெண்மையை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெண்.

சில பேரிடம் விலங்குகளும் பறவைகளும் சகஜமாகவும் ஸ்வாதீனமாகவும் பழகுவதை பார்த்திருக்கிறீர்களா. ஏன் தெரியுமா? ஆத்மாவின் புனிதத்தையும் இறைத்தன்மையையும் விலங்குகளும் பறவைகளும் நன்றாக கண்டுபிடித்து விடும்.சாருகேசியிடமும் விலங்குகளும் பறவைகளும் சுவாதீனமாக பழகும். இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் யாருமே இந்த இறைத்தன்மையை அடைய முடியம் என்பதற்க்காகத்தான்.

மேலும் சாருகேசியின் குணாதிசயங்களையும் தன்மைகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால் தான் சாருகேசியின் வாழ்க்கை பிரச்சனைகளை உள்வாங்கி அந்த மன நிலையில் எப்படி வாழ்ந்தாள். அவள் எதிர்கொண்ட பிரச்சனைகளும் அதை அவள் கையாண்ட விதமும் உங்கள் வாழ்க்கைக்கே ஒரு பாடமாக அமையலாம் அல்லவா.?

இனி நான் உங்களை சாருகேசி வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை அவள் கையாண்ட விதத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லா பெற்றோர்களின் பொறுப்பும் எங்கு ஆரம்பித்து எப்படி முடிகிறது தெரியுமா?. குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தை வளர்ந்து படித்து பின் திருமண வயதை அடைந்தவுடன் அந்தக்குழந்தைக்கு ஏற்ற ஒரு பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்வதில் தான் ஓரளவுக்கு பொறுப்புகள் நிறைவேற்றுகின்றன. இருந்தும் திருமணம் மூலம் நல்ல வாழ்க்கை அமையவில்லையென்றால் பொறுப்புக்கள் இன்னும் கூடுகின்றன.

வந்த மாப்பிள்ளையிடம் மாப்பிள்ளை என்ற மரியாதையை கொடுப்பதா. இல்லாவிட்டால் தன்னுடைய மகளை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்பதற்காக கோபத்தை கட்டுவதா. மிகவும் சங்கடமான நிலை. இருதலைக்கொள்ளி எறும்பு போன்ற ஒரு நிலையை அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

நம்முடைய நாயகி படித்து பட்டமும் பெற்ற பின் திருமணமும் நடத்தி வைத்தார்கள் அவளுடைய பெற்றோர்கள். பொதுவாக கனவு நாயகனைத்தான் கை பிடிக்கப்போகிறோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கை பிடித்த கணவன் கனவுகணவன் அல்ல. நிகணவன் உருவில் வந்திருக்கும் ஒரு எமன் என்றால் எப்படி இருக்கும்.ஏமாற்றம் கோபமாக வெளிப்படுவதும் அந்தக்கோபம் விவாக ரத்துவரை செல்வதும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றைய மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

சாருகேசியின் கணவர்

இப்பொழுது சாருகேசியின் கணவரைப்பற்றி சில வரிகள். சில மனிதர்கள் சுயகட்டுப்பாடுள்ள மனிதர்களாக இருப்பார்கள் . அவர்களை அவர்களே ஆளும் தகுதி படைத்தவர்கள். இந்த வகையான மனிதர்களுக்கு நல்ல எது கெட்டது எது என்று நன்றாக தெரியும். தன்னுடைய செயல்களாலும் சொற்களினாலும் எதிர்பார்ப்புகளாலும் மற்றவர்களுக்கு வரும் இடஞ்சல்களையும் கஷ்டங்களையும் நினைத்துப்பார்த்து முடிவெடுப்பார்கள்.

இன்னும் சிலர் மற்றவர்களைப்பற்றி கவலையே படாமல் தன்னுடைய செயல்களையும் சொற்களையும் மிக சரளமாக செய்வார்கள். பேசுவார்கள் மற்றவர்களைப்பற்றி கவலையே பட மாட்டார்கள். அதுவும் மனைவியின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன்னுடைய கட்டளைப்படி வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இவர்களின் சமுதாய பார்வை எப்படி இருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை.

மொத்தத்தில் இருவருமே குழந்தைகள் மாதிரித்தான். யுவப்பருவதில் இருந்து குடும்பத்தலைவன் என்ற உயர் பதவிக்கு செல்லும் பொழுது குழந்தைகளை போலத்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும். சில குழந்தைகள் சமத்து என்ற பெயர் வாங்கிவிடும். எல்லாவற்றையும் நன்றாக புரிந்துகொண்டு பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளை நன்றாக ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள். இந்த மாதிரி குழந்தைகள் தான் பிற்காலத்தில் சமுதாயத்தால் தன்னுடைய மனைவியால் பாராட்டப்படும் மனிதனாகவும் கணவனாகவும் இருப்பார்கள்.

இரண்டாவது சில குழந்தைகள் தரையில் விழுந்து புரண்டு அழுது தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும். இந்தமாதிரி குழந்தைகள் பிற்காலத்தில் மற்றவர்களை பற்றிய கவலையே இல்லாமல் தனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்வது மற்றவர்களின் மேல் தன்னுடைய முடிவை திணிப்பது விளைவுகளை பற்றி கவலை படாமல். இந்த மாதிரி மனிதக்குழந்தைகள் வாழ்க்கையில் அடிபட்டு அனுபவப்பட்ட தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நேரத்தில் வாழ்க்கையே முடிந்து விடும். இவர்களின் தவறான அணுகு முறையால் மனைவி மட்டுமல்ல குடும்பமே பாதிப்புக்கு உள்ளாகிறது. நான் இந்த மனித ஆராய்ச்சியில் ஆண்களை மட்டும் குறிப்பிடவில்லை. பெண்களையும் சேர்த்துதான்.

இந்த மாதிரி ஒரு இரண்டாவது ரக குழந்தைதான் சாருகேசியின் கணவர். அழுது அடம்பிடிக்கும் குழந்தை. முதல் ரக சமத்து குழந்தைதான் சாருகேசி. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எப்படி ஒரு நல்ல புரிதல் இருக்கும். கணவர் முரட்டு தனத்துக்கும் மனைவியின் மென்மையான அணுகு முறைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே.

இப்படித்தான் சாருகேசியும் அவள் கணவரும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.இதுதான் சாருகேசியின் குடும்ப வாழ்க்கை. இப்படியே வாழ்க்கை திருமணமாகி ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. சாருகேசிக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கவேண்டுமென்ற ஆவல்.

ஆனால் சாருகேசியை வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார் சாருகேசிக்கு வாய்த்த கணவர். சாருகேசிக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கவேண்டுமென்ற ஆசையும் இன்றுவரை நிறைவேற வில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியமும் கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் சாருகேசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பல கனவுகளுடன் பல லக்ஷங்களை செலவழித்து திருமணம் செய்துவைத்த பெற்றோர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். கணவரின் வீட்டில் தன்னுடைய மாமியார் தன்னுடைய பையன் என்னசெய்தாலும் சரியே. சாருகேசிமேல் குற்றம் குறை கண்டு கொண்டே மனம் நோகும்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.இந்த சமயத்தில் நான் எழுதும் குரு பூஜை அற்புதங்களை படித்துவிட்டு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

பெற்றோர்களுக்கு என் அறிவுரை

இந்த இடத்தில பெற்றோர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்பிக்கொள்கிறேன். நீங்கள் வாழ்ந்து முடித்து விட்டிர்கள். ஆனால் இனிமேல் தான் உங்கள் குழந்தைகள் வாழ ஆரம்பிக்கப்போகிறார்கள்.திருமணத்தை தொடர்ந்து அவர்கள் வாழ ஆரம்பிக்கும் முயற்சியில் இ