top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024

பிரச்சனைகள்

எடுக்கும் பொழுது

மண்டியிடுகிறோம்

விஸ்வருபம் எடுத்தால்

நம் முன்னே மண்டியிடும்

ஸ்வாமி நமக்கு ஒரு வாழும் உதாரணம்

டாக்டர் சுப்ரமணியம் ஸ்வாமிக்கு அறிமுகம் தேவையா.? நம் எல்லோருக்குமே தெரியும் அவர் ஒரு பழுத்த அரசியல் வாதி, பாராளுமன்ற உறுப்பினர் மிகச்சிறந்த வழக்குரைஞர் இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தலைவர். இது ஒரு புறம்.

இவரது மறுபுறம் இவர் ஒரு மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர் என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் இவர் மஹாபெரியவாளுக்கு ஒரு நெருக்கமான பக்தராக எப்படி மாறினார் என்பது மிகவும் சுவாரசியம்..இவர் அனுபவித்த மஹாபெரியவா அற்புதங்கள் ஏராளம். அவற்றுள் உங்களுக்காக சிலதை உங்களுக்கு விளக்குகிறேன்

மஹாபெரியவா என்னும் பக்தி சாகரத்தில் முழுக்க வேண்டுமானால் இந்த காணொளியை காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.

கைலாஷ் மானசரோவர்

நமக்கெல்லாம் தெரியும் கைலாஷ் மானசரோவர் திபெத் பகுதியில் உள்ளது. ஒரு முறை டாக்டர் ஸ்வாமி மஹாபெரியவாளை தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது மஹாபெரியவா ஸ்வாமியிடம் நீ சைனா நாட்டிடம் நம்முடைய பக்தர்கள் கைலாஷ் மனோராவேர் செல்ல அவாளை வழியை திறந்து விடும்படி கேளு என்றார்.

உடனே சுவாமி அது கஷ்டம் பெரியவா. அவா நம்ம நாட்டோட பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு நம்முடன் சண்டை போடுகிறார்கள். நம்முடைய அரசாங்கமும் அதற்கு சம்மதிக்காது என்றார். அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ போய் நம்முடைய அரசாங்கத்திடம் பேசு. சீனாக்காரன் கிட்டயும் பேசு. எல்லாம் நல்ல படியா முடியும் என்றார்.

கைலாஷ் மானசரோவர் ஏரி

டாக்டர் சுவாமி அரைகுறை நம்பிக்கையுடன் அப்போதைய பாரத பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் இந்தவிஷயம் பற்றி பேசினார். ஆனால் மொரார்ஜி தேசாய் இதற்கு சம்மதிக்கவில்லை. ஏன் தெரியுமா? சுவாமி சீனாவுக்கு சென்றால் உன்னை சரியாகக்கூட வரவேற்க மாட்டார்கள். அவமானப்படுவாய் என்றார்.

உடனே ஸ்வாமி சொன்னார் எனக்கு உத்திரவு கொடுத்தது காஞ்சி மஹாபெரியவா. அதனால் அவரது இறை அற்புதத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லி சம்மதம் வாங்கி விட்டார். ஏனென்றால் மொரார்ஜி தேசாயும் மஹாபெரியவாளின் பக்தர்.

ஸ்வாமி சைனா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது .இரு நாட்டில் உள்ளவர்களும் ஸ்தம்பித்து போனார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று. அந்த பரமேஸ்வரனுக்கே வெளிச்சம். இது ஒன்றும் இல்லை.

சுவாமி சைனாவில் இருந்து கிளம்பி இந்தியா வருவதற்குள் சைனா அகில உலக அளவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதுதான் இந்தியாவின் பக்தர்களுக்காக தங்களுடையநாட்டின் எல்லையை திறந்து விட முடிவு செய்துள்ளது. டாக்டர் ஸ்வாமியின் முயற்சியை பாராட்டி வாசகங்களும் வெளி வந்துள்ளன.

சுவாமி திரும்ப இந்தியா வருவதற்கு கேட்காமலேயே இந்திய அரசாங்கம் ஹெலிகாப்டர் கொடுத்து ஸ்வாமியை அழைத்து வந்தது. சரியான நேரத்திற்கு தன்னுடைய குழந்தைகளின் பிறந்த நாளுக்கு சொன்னபடி வந்த அற்புதம். நீங்களும் இந்த காணொளியை பார்க்கும் பொழுது உங்கள் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்ப்பீர்கள் என்பது நிச்சயம்.

ஸ்வாமி திரும்ப இந்தியா வந்தவுடன் அவரிடம் அன்றைய பிரதமர் கேட்டாராம் "என்ன ஸ்வாமி சீனாக்காரர்களுக்கு மந்திரம் ஏதாவது செய்தாயா? எப்படி அவர்கள் எல்லையை திறந்து விட சம்மதித்தார்கள்.. ஸ்வாமி சொன்னாராம் மஹாபெரியவா சொன்னார் செய்தேன் என்றாராம்.. தனி மனித அற்புதங்கள் தவிர ஒரு நாட்டின் தலைவர்கள் மனதையே மாற்றி செய்த அற்புதத்தை என்னவென்று சொல்ல.

படைத்தவன் நினைக்கிறான்

படைத்தவன் கேட்கிறான்

நினைத்ததும் நடக்கும் கேட்டதும் கிடைக்கும்

ப்ரத்யக்க்ஷ பரமேஸ்வரன் மஹாபெரியவா

அற்புதங்களில் இது ஒரு சிறு துளி அவ்வளவே

அற்புதம்:II

அப்பொழுது தமிழகத்தின் முதல் அமைச்சராக. M.G.R இருந்தார் அந்த நேரத்தில் இலங்கையில் விடுதலை புலிகளின் செயல்கள் மிகவும் தீவிரமாக இருந்தது.. நம்முடைய கச்சத்தீவு இலங்கையிடம் இருந்தது.

இதனால் இந்திய மீனவர்களுக்கு கடலில் மீன் பிடிக்கும் எல்லையில் பிரச்சனை எழுந்தது..இந்தப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஸ்வாமி அவர்கள் மதுரை சென்று பிறகு அங்கிருந்து கடல் மார்கமாக கட்ச தீவு செல்ல முடிவு செய்தார்.

ஆனால் இதில் M.G.R க்கு உடன்பாடு இல்லை.ஏனென்றால் ஸ்வாமியின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று நினைத்தார். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.. உடனே காவல் துறை உயர் அதிகாரியை மதுரைக்கு அனுப்பி ஸ்வாமியை கச்சத்தீவு போக வேண்டாம் என்று அறிவுரை சொல்லச்சொன்னார். அறிவுரையை ஏற்க மறுத்தால் ஸ்வாமியை கைது செய்து அந்த விருந்தினர் இல்லத்திலேயே அங்கேயே அவருடைய அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொல்லச்சொன்னார்.

ஸ்வாமியும் தான் கச்சத்தீவு செல்லாமல் டெல்லி செய்வதாக உறுதி அளித்தார் காவல் துறை அதிகாரியிடம்.. தான் டெல்லி செல்லும் முன் காஞ்சி சென்று மஹாபெரியவாளை தரிசித்து தன்னுடைய கச்சதீவு பிரச்னையை சொல்லலாம் என்று முடிவு செய்தார்கள் ஸ்வாமி.. காஞ்சியும் கிளம்பி விட்டார்கள்.

காஞ்சி வந்து சேர்ந்தார் ஸ்வாமி.. மஹாபெரியவாளை தரிசனம் செய்துவிட்டு தன்னுடைய பிரச்னையை சொன்னார்.. மஹாபெரியவா சிறிது மௌனத்திற்கு பிறகு சுவாமியிடம் சொன்னார். "நீ உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மீது வழக்கு போடேன் என்று சொன்னார்".

இதைக்கேட்ட ஸ்வாமிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. ஏனென்றால் இந்தியா ஒரு பெரிய நாடு. அதிலும் தமிழகம் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில் மதுரை என்பது ஒரு மாவட்டம். இந்தமாவட்டத்தில் ஒரு பிரச்சனை என்றால் மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. அந்த நீதி மன்றங்களில் தான் வழக்கு தொடுக்க முடியுமே தவிர நேராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டால் அது உச்ச நீதி மன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்று தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொன்னார்.

மஹாபெரியவா அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடு என்று உறுதியாகசொல்லிவிட்டா.ர். அப்பொழுது சுவாமி அவர்கள் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தராகி விட்டார்.. மஹாபெரியவா எது சொன்னாலும் அது நூற்றுக்கு நூறு நடந்து விடும் என்பது சுவாமி நன்றாகவே அனுபவப்பட்டிருந்தார்.. முடிவு செய்து விட்டு மஹாபெரியவாளிடம் சொன்னார்.

சரி பெரியவா நீங்கள் சொன்னமாதிரி நான் உச்சநீதி மன்றத்தில் வழக்கு போடுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டு டெல்லி கிளம்பினார். டெல்லி சென்று சேர்ந்தார் ஸ்வாமி. நடந்ததை எல்லாம் தன்னுடைய மனைவியிடம் சொல்லி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட முடிவெடுத்துள்ளதாக சொன்னார்.

ஸ்வாமியின் மனைவியும் ஒரு பிரபலமான வழக்குரைஞர் . அவர் உடனே பதட்டத்துடன் சொன்னார். "என்ன சொல்கிறீர்கள் ஒரு மாவட்டத்தின் கீழ் நீதி மன்றத்தில் தொடுக்க வேண்டிய வழக்கை உச்சநீதி மன்றத்தில் யாராவது வழக்கை தொடுப்பாளா. நிச்சயம் நான் செய்ய மாட்டேன். வேண்டுமானால் நீங்களே செய்துகொள்ளுங்கள். நீதி மன்ற அவமதிப்பு வழக்கு என்று நீதிபதிகள் உங்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்போகிறார்கள். என்று மறுத்து விட்டார்கள்.

உடனே ஸ்வாமி அவர்கள் நானே வழக்கு போடுகிறேன். மஹாபெரியவா சொல்லியிருக்கிறார். இந்த வழக்கிற்கு தேவையான தசஜாவேஜுகளை மட்டும் தயார் செய்து கொடு என்று சொல்லி குறிப்பிட்ட நாளில் உச்சநீதி மன்றம் சென்று வழக்குரைஞர் நாற்காலியில் நீதிபதிகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

எல்லா சக வழக்குரைஞர்களும் ஸ்வாமியை பார்த்து விவரம் கேட்டார்கள் ஸ்வாமி விவரம் சொன்னவுடன் நண்பர்கள் வேண்டாம் இந்தவிபரீத விளையாட்டு. நீங்கள் ஒரு பிரபலமானவர். நாளை இந்தியாவே உங்களை உற்று நோக்கும். என்று ஏச்சரிக்கை செய்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஸ்வாமியின் ஒரே பதில் மஹாபெரியவா சொல்லியிருக்கிறார். நான் அவர் பேச்சை மீற முடியாது. நல்லதுதான் நடக்கும் அவரொரு தீர்க்க தரிசி. என்று ஒரே முடிவாக தன்னுடைய வழக்கு சம்பந்தமான காகிதங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தார்.

உச்ச நீதி மன்றத்தில் நடந்தஅற்புதம்:

சரியாக உச்ச நீதிமன்றம் செயல் படும் நேரம்.. நீதிபதிகள் உள்ளே நுழைந்து தங்களுடைய இருக்கையில் அமர்ந்தனர். டாக்டர் ஸ்வாமி தன்னுடைய வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜுகளை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

அப்பொழுது அரசு வழக்குரைஞர் இந்த இங்கு வழக்கை இங்கு தொடுக்க முடியாது. மேலும் இது உச்ச நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலாகும்..ஆகவே நீதிபதிகள் நிச்சயம் இந்தமாதிரி வழக்கிற்கு செவி சாய்க்கக்கூடாது. இதுவரை சரித்திரத்தில் இது போல் அனுமதித்ததில்லை.என்று வாதிட்டார்.

மஹாபெரியவாளின் அற்புதம் உள்ளே நுழைகிறது:

இந்திய கடற்படை

வாதங்களை கேட்ட நீதிபதிகள் டாக்டர் ஸ்வாமியின் வழக்கை ஏற்றுக்கொண்டனர். புதிய சரித்திரம் படைக்கப்பட்டது. இந்தியாவே திரும்பி பார்த்தது. படைத்தவன் சொல்லிவிட்டால் இந்த ஜெகமெ செய்துதானே ஆக வேண்டும். ஸ்வாமி வென்றார். வழக்கும் வென்றது.

இது மஹாபெரியவா அற்புதத்தின் ஒரு பகுதிதான். மீதி பகுதியை படியுங்கள் . பிரபஞ்ச தெய்வத்தை புரிந்துகொள்வீர்கள். எந்த அரசாங்கம் கட்ச தீவுக்கு சென்றால் கைது செய்வோம் என்று சொல்லியதோ அந்த அரசாங்கமே டாக்டர் ஸ்வாமியை சகல மரியாதையுடனும் பாதுகாப்புடனும் அனுப்பி வைத்தது.

எப்படி தெரியுமா. இந்தியராணுவமும் கடற்படையும் சூழ டக்டர் சுவாமி கட்ச தீவுக்கு சென்றார். இப்பொழுது புரிகிறதா மஹாபெரியவா ஒரு எளிமையான சன்யாசி என்பதையும் மீறி இந்தப்ரபஞ்சத்தை படைத்த பரமேஸ்வரன் என்று.

இந்த பதிவை எழுதும் பொழுது

என் உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உணர்ந்தேன்

எழுதியவனுக்கே இப்படி என்றால்

அனுபவித்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

படிக்கும் உங்களுக்கும் இந்த அனுபவம்தானே

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரபஞ்சத்தில் காணும் இறைவன் நமக்காக பூவுலகில்

அவதரித்து கலியின் தாக்கத்தில் இருந்து நம்மை எல்லாம்

காக்கவேண்டுமென்றால்

அவன் எவ்வளவு பெரிய

கருணாசாகரன்

https://www.youtube.com/watch?v=c3vVzYk3lqI

மஹாபெரியவா சரணம்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page