திவ்ய தேச தரிசனங்கள்-1 ஸ்ரீரங்கம் - 001

சைவமும் நீ வைணவமும் நீ கலியில் உன் அவதாரம் வேத மாதா நலிந்து கொண்டிருந்த வேதத்தை மீண்டும் தழைக்க செய்தாய் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் உன் திசை நோக்கி வணங்குகிறோம் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஓம் நமோ நாராயணா

திவ்ய தேச தரிசனங்கள்-1
ஸ்ரீரங்கம் - 001
உங்கள் கவனத்திற்கு : என்னுடைய ஆங்கிலம் தமிழ் மொழி மாற்றியில் அழவார் என்று அடித்தால் சரியான எழுத்துக்களுடன் கூடிய வார்த்தை கிடைக்கவில்லை. ஆகவே எவ்வளவு முயன்றும் அழவார் என்றுதான் வருகிறது. இந்தப்பிழை கவனத்தில் கொள்ளப்பட்டுசரி செய்ய முடியவில்லை. இந்தப்பிழை கவனமின்மையின் வெளிப்பாடு அல்ல. இருப்பினும் நான் இந்தப்பிழைக்கு வருந்துகிறேன்.
********
நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீ ரங்கம் முதலாவது திவ்யதேசமாகும். ஸ்ரீ ரங்கத்தின் பெருமைகள் கணக்கில் அடங்காது. சொல்லிக்கொண்டே போகலாம். என்னால் முடிந்த அளவு மிகவும் அறிய தகவல்களை புத்தகங்கள் மூலமாகவும் பல காணொளிகளை காண்பதன் மூலமாகவும் சிறந்த உபன்யாசங்களின் தொகுப்பை கேட்பதன் மூமாகவும் சேகரித்து அவைகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஸ்ரீரங்கத்தின் பதிவுகள் மட்டுமே குறைந்தது பத்து சனிக்கிழமைகள் தாண்டும் என் நினைக்கிறேன். நான் இன்னும் சுருக்க நினைத்தாலும் என் மனசாட்சி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்னுடைய நோக்கம் இரண்டு.
ஒன்று மஹாபெரியா உத்திரவை மஹாபெரியவா மனம் குளிரும் படி எழுத வேண்டும்.இரண்டு இந்த திவ்ய தேச தரிசனங்களும் சிவாலய தரிசனங்களும் உங்கள் இல்லத்தில் பகவத் கீதையை போன்று இருக்கவேண்டும்.
ஏனென்றால் பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ படிக்கும் பொழுது எல்லா விஷயங்களும் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிய வேண்டும். எனக்கு எத்தனை சிரமம் வந்தாலும் அத்தனை சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு இந்த திவ்ய தேச தொடர் பதிவையும் சிவாலய தரிசன பதிவையும் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நான் ஈடு படுத்திகொண்டுளேன்.
இதே போல் இருநூற்று எழுப்பதினாலு சிவாலய தரிசனங்கள் மஹாபெரியவா உத்தரவின் பேரில் துவங்கப்போகிறோம். எப்படி வைணவமும் சைவமும் இந்து மதத்தின் இரு கண்களோ அதே போல் திவ்ய தேச தரிசனங்கள் சிவாலய தரிசனங்கள் இரு புத்தகமும் உங்கள் இல்லத்தின் இரு கண்கள். ஆகவே இந்த இரு புத்தகங்களும் பூஜை அறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,.
இப்படிக்கு
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்
**********

ஆயிரம் கதைகள் சொல்லும்
ஸ்ரீரங்கம் ப்ரணவாஹர விமானம்
வியக்கவைக்கும் உண்மைகள் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் சரித்திர நிகழ்வுகள் கண்கள் குளமாகும் ரங்கநாதரின் மீது மதம் தாண்டிய பெண்ணின் பக்தி காதலாய் மாறிய சம்பவம் ஸ்ரீரங்கத்து ஒரு வெள்ளை கோபுரம் ஆயிரம் கதைகள் சொல்லும்.
ஸ்ரீரங்கம்
ஒரு கோவிலா
இல்லை ஒரு காவியமா
அல்லது ஒரு சரித்திரமா
மொத்தத்தில் நம் பார்வை எப்படியோ அப்படி..
அதுதான் ஸ்ரீரங்கம்
கண்ணுக்கு தெரியும் ஒரு ஆன்மீக புதையல்
சரித்திர பொக்கிஷம்
ஈரேழு லோகத்தின் பிரதிபலிப்பு
முதலில் நான் ஒரு வரி குறியுப்புகளாக தருகிறேன். பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். இது போல் செய்யும் பொழுது எந்த ஒரு முக்கியமான விவரங்களையும் தவறவிடாமல் உங்களுக்கு என்னால் முழுமையாக சமர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறேன். உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்றும் இன்றும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு வரி குறிப்புக்கள்
எவரையும் மதம் தாண்டி வியக்கவைக்கும் கலைநயம் மற்றும் வரலாற்று உண்மைகள் புதைந்து கிடக்கிறது.
நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது.
ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுந்தம் என்றும் சொல்லுவார்கள்.
ஸ்ரீரங்கத்தில் உயிர் துறந்தவர்களுக்கு திரும்பவும் பிறவி என்ற ஒன்று கிடையாது.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே வழிபட்ட பெருமாள் பெரியபெருமாள் ரங்கநாதர்.
ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்களுக்கு வீர வைஷ்ணவர்கள் என்ற பட்டமும் உண்டு.
அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மனிதர்களை போலவே வெந்நீரில் தான் குளியல்.இதற்கென்றே ஒரு மணியக்கார இருக்கிறார்.
ஸ்ரீ ரங்கத்தில் அத்தனை கோபுரங்கள் இருந்தாலும் வெள்ளை கோபுரத்திற்கு பின்னல் ஓர் பெண்ணின் சரித்திரமே இருக்கிறது.
ஆயிரம் கால் மண்டபம் உள்ளது.
நம்முடைய இரண்டு இதிகாசங்களில் ஒன்றான கம்பர் எழுதிய கம்ப ராமாயணம் இங்குதான் அரங்கேறியது.
நான்கு புறமும் நதிகளில் சூழப்பட்ட ஒரே தீவு ஸ்ரீரங்கம்.
ஸ்ரீரங்கம் கோவிலின் பரப்பளவு நான்கு சதுர கிலோமீட்டர்கள் அல்லது ஆறு லக்க்ஷத்து முப்பத்தியொராயிரம் சதுர அடிகள்.
வைஷ்ணவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜர் அவர் முக்தி அடைந்தபிறகு உடல் பாடம் செய்யப்பட்டு இங்குதான் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் நகமும் தலை முடியும் வளர்கிறது என்கிறார்கள். ஸ்ரீ ராமானுஜர் வாழ்ந்த காலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். ஸ்ரீ ராமானுஜரை பற்றிய குறிப்புகளை வரும் பதிவுகளில் தருகிறேன்.
பெருமாளுக்கு ஒரு நாள் உற்சவத்தின் பொழுது முகமதியர்கள் அணியும் லுங்கியும் சாப்பிடும் ரொட்டியும் சமர்ப்பிக்கப்படும். அந்தசமயத்தில் ஈர வாடை தீர்த்தம் என்று ஒன்று கொடுப்பார்கள்.
பெருமாளை கவர்ந்த ஒரு முகமதிய பெண்ணுக்கு இங்கு சன்னதி உள்ளது உங்களுக்கு தெரியுமா.
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரம் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் என்பது உங்களுக்கு தெரியுமா.
ஸ்ரீரங்க பெருமாளை மையமாக வைத்து இந்த ஸ்ரீரங்க பட்டினம் என்னும் நகரம் உண்டானது.
நூற்றி எட்டு வைணவ தளங்களில் உள்ள பெருமாளும் இரவு இங்கு வந்து ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு காலையில் அவரவர்கள் திவ்ய தேசத்திற்கு திரும்பி விடுகிறார்கள்.
இங்குள்ள ரங்கநாயகி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்றபெயரும் உண்டு.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதத்தில் நுழையும் பரமபதவாசலும் ஸ்ரீ ரங்கத்தின் பரமபதவாசலும் ஒன்றே
ஸ்ரீரங்கம் மட்மே உலகத்தில் மிகப்பெரிய இந்து மதக்கோவில்.
ஸ்ரீரங்கம் கோவிலில் மொத்தம் இருபத்தியொரு கோபுரங்கள் உள்ளன.
பன்னிரு அழவர்களில் இரு அழவார்கள் இங்குதான் முக்தி அடைந்தார்கள்.
வைஷ்ணவத்தில் கோவில் என்று சொன்னாலே ஸ்ரீரங்கத்தை தான் குறிக்கும்.
பன்னிரண்டு அழவர்களில் பதினோரு அழவார்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை மங்களா சாசனம் பண்ணியுள்ளார்கள்.

ஸ்ரீரங்கம் தீவுத்தோற்றம்
ரங்கம் என்ற தமிழ் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. அவைகள் மேடை ஒளி வெளிச்சம் என்பதாகும்.
பகல் பத்து ரா பத்து உற்சவம் மிகவும் பிரபலமானது.
இந்தக்கோவில் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்தது.
இங்குள்ள ரங்கநாதர் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். அதுமட்டுமல்ல தன்னுடைய பார்வையையும் தெற்கு நோக்கியே பார்க்கிறார்.
தர்மம் வர்மன் என்னும் சோழ அரசன் தான் இந்தக்கோவிலை கட்டினான்.
ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும் திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. அவைகள் பூர் புவஹ சுவஹ மகஹாஹா ஜனஹா தபஹா சத்யம் ஆகியசொற்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஏழு உலகங்களை குறிக்கிறது.
ஏழு உலகத்தின் நடுவில் பெருமாள்பள்ளிகொண்டு எழுபந்தருளி இருப்பதாக ஸ்ரீரங்கம் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெருமாளுக்கு படுக்கையாக ஆதிசேஷனும் ராமனுக்கு தம்பியாய் லக்ஷ்மணனாகவும் கிருஷ்ணருக்கு அண்ணனாக பலராமனாகவும் இன்றும் இருக்கிறார்கள்.
கலி யுகத்தில் உடையவர் ராமாநுஜாசார்யார் பத்தாம் நூற்றாண்டில் அவதரித்தார்..
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஏழு நாச்சியார்கள்.
ஸ்ரீரங்கம் கோவில் அறுபது கோவில்களை உள்ளடக்கியது.
ஸ்ரீரங்கம் பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.
ஸ்ரீரங்கம் தயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
பன்னிரண்டு அழவர்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
பெரியபெருமாள் பார்க்கும் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.
ஏழு உற்சவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு மண்டபத்தை தவிர மற்ற மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
ஏழு பிரஹாரங்களிலும் ஏழு திருவடிகள் உள்ளன.
ஏழு பிரஹாரங்களிலும் ஏழு திரு மதில்கள் அமைந்துள்ளன.
ஏழு ஆச்சார்யர்களுக்கும் ஏழு சன்னதிகள் உள்ளன.
இந்தஒரு வரி செய்திகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். நானும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் ஒரு வரி செய்திகளை எடுத்துக்கொண்டு அதற்கான விளக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.ஒரு வரி செய்திகள் இன்னும் முடியவில்லை.அடுத்த பதிவிலும் வரும். இருப்பினும் விளக்கங்கள் அடுத்த வெள்ளிக்கிழமையே ஆரம்பமாகி விடும்.
இந்து மதம் மிகப்பெரிய மதம். எல்லா மதத்திற்கும் தாய் இந்து மதம்..மிகப்பெரிய மதத்தின் கோவிலும் மிகப்பெரியாகத்தானே இருக்கும்.இந்த ஜென்மத்தில் நாம் இந்து மதத்தில் பிறந்ததே நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின் காரணமாகத்தானே.
உங்களை மீண்டும் அடுத்த சனிக்கிழமையன்று சந்திக்கிறேன்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ஓம் நமோ நாராயண
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்..