Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-கணபதி மாமா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-025

Every Wednesday

கணபதி மாமா

பிறக்கும் பொழுது நாம் அனைவருமே

நல்ல குழந்தைகள்தானே

குழந்தை என்ற பருவம் மாறலாம்

“நல்ல” என்ற குணங்கள் ஏன் மாறவேண்டும்

இறுதிவரை நல்லவர்களாகவே இருக்கமுடியதா

முயன்றால் முடியமே

கணபதி மாமாவை பற்றி ஒரு சில வார்த்தைகள்:

மாமா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள T..குளத்தூர் என்னும் சிற்றூரை சேர்ந்தவர். மாமாவின் தந்தைக்கு மஹாபெரியவாளிடமும் ஸ்ரீ மடத்துடனும் நெடு நாளைய தொடர்பு உண்டு. இருந்தாலும் மாமா தன்னுடைய பதினான்காவது வயதில் தான் மஹாபெரியவாளிடம் வந்தார்.

மாமா ஒரு முறை மஹாபெரியவாளை தரிசனம் செய்ய போட் மெயில் என்னும் ரயில் ஏறி திருவிடைமருதூர் வந்தார். ஏனென்றால் திருவிடைமருதூர் அருகில் உள்ள வசந்த கிருஷ்ணா புரத்தில்தான் மஹாபெரியவா முகமிட்டிருந்தார்.

மாமாவின் அனுபவங்கள்:

மஹாபெரியவாளிடம் மாமாவின் அனுபவம் சொல்லி மாளாது.. அப்படி ஒரு நெருக்கமான உறவு.. மாமா இந்த காணொளியில் சொல்லியிருக்கும் அற்புதங்கள் அதிகம். சொன்ன அற்புதங்களில் இருந்து ஒரு சிலதை மட்டும் உங்களுக்காக இந்த பதிவில் எடுத்து சொல்லியிருக்கிறேன். மஹாபெரியவா சாகரத்தில் முழுக்க நீங்கள் இந்த காணொளியை காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.

மஹாபெரியவா செய்யும் சந்திரமௌலீஸ்வர பூஜை: மஹாபெரியவா கும்பகோணத்தில் இருந்தபொழுது தினந்தோறும் சந்திரமௌலீஸ்வர பூஜை நடக்கும். இந்த பூஜைக்கு கணபதி மாமா வில்வம் இலைகளை பறிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அப்பொழுதெல்லாம் காவேரி ஆற்றை கடந்துதான் அக்கரையில் உள்ள வில்வமரத்திற்கு செல்ல வேண்டும், ஆற்றை கடக்க மாமா அப்போதைக்கு ஒரு பாலம் அமைப்பாராம். வில்வ இலைகளை கத்திரிக்கோலால் வெட்டக்கூடாது. ஒரு செப்பு தட்டை வைத்து மூன்று இலைகளை கொண்ட கொத்தாக வெட்ட வேண்டும்

மஹாபெரியவா வில்வ இலைகளையும் புஷ்பங்களையும் பூஜையின் பொழுது சந்திரமௌலீஸ்வரர் மீது போடும்பொழுது சரியாக அசையாமல் சென்று அமரும் என்று சொன்னார். இதை காணும்பொழுது கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து என்பது உண்மை.

அதிசயிக்கும் தருணங்கள்:

ஒரு முறை மஹாபெரியவா ஒரு அறையில் இருந்து கொண்டு மாமாவை அழைக்கிறார். மஹாபெரியவா அறைக்குள் மின்சார விளக்கு கிடையாது. மின் விசிறி கிடையாது. மஹாபெரியவா எப்பொழுதுமே மின் விசிறியோ அல்லது மின் விளக்கோ வைத்துக்கொள்ள மாட்டார்.. நமெக்கெல்லாம் வியர்க்கும்.. ஆனால் மஹாபெரியவா ஒரு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் இருப்பதைப்போல இருப்பார். அப்பொழுது மலர்ந்த தாமரை மலரைப்போல இருப்பார்.

மஹாபெரியவாளின் அழைப்பை ஏற்று கணபதி மாமா உள்ளேசென்றர். மஹாபெரியவா மாமாவிடம் ஒரு டார்ச் லைட் கொண்டு வரும் படி சொன்னார். கொண்டு வந்த டார்ச் லைட்டை தன்னுடைய நெற்றி பொட்டில் அடிக்குமாறு சொன்னார். மாமாவும் நெற்றி பொட்டில் அடித்தார்,

அங்கு நெற்றிப்பொட்டில் நரம்புகள் சுருண்டு ஒரு சதை பிண்டம் போல காணப்பட்டது. அந்த சதை பிண்டம் பெரியதாகவும் பின்னர் சிறியதாகவும் மாறிக்கொண்டே இருந்தது. உங்களுக்கு புரிகிறதா?. மஹாபெரியவாளுக்கு தாங்க முடியாத தலைவலி. அந்த வலியினால்தான் நெற்றி போட்டு அப்படி அடித்து கொண்டிருந்தது. இந்த வலியை பொறுத்துக்கொண்டு மஹாபெரியவா மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து மாமாவை டார்ச் லைட்டை தரையில் அடிக்க சொன்னார். தரையில் மாதுளம்பழ தோல் போல் ஒன்று கிடந்தது. மஹாபெரியவா மாமாவை அந்த தோல்போல் இருக்கும் பொருளை உற்று பார்க்கும் படி சொன்னார். மாமாவும் பார்க்க ஆரம்பித்தார்.

அந்த பொருள் ஒரு ஓணான் தலையை மேலும் கீழும் ஆட்டுவதுபோல ஆடிக்கொண்டிருந்தது. உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா. மஹாபெரியவா அந்த நெற்றி பொட்டில் வலித்துக்கொண்டிருந்த பகுதியை பிடுங்கி கீழே போட்டு வலியையும் அந்த சதை பிண்டத்திற்கு மாற்றினார். இதற்கு நாம் என்ன விளக்கம் கொடுக்க முடியும்.இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் கர்ம வினைகள்: ஒருவருடைய கர்ம வினைகளிலிருந்து யாரு தப்ப முடியாது. அவர் எப்படிப்பட்ட பெரிய ஆளாக எந்த உயரத்தில் இருந்தாலும் தப்பிக்க முடியாது என்பதை சொல்லும் சம்பவம் இது.

ஓர் நாள் மஹாபெரியவா ஒரு ஜோதிடரை வரவழைத்தார். அவருக்கு ஒருவருடைய முந்தய ஜென்மாக்களின் கர்ம வினைகளும் அதற்குண்டான தண்டனைகள் பற்றியும் நன்றாக தெரியும்.

ஜோதிடரும் வந்தார். ஸ்ரீகார்ய மனுஷாள் ஜோசியரை சுற்றி நின்று கொண்டார்கள். ஆரம்பத்தில் பிறப்பு பற்றிய விவரங்களை சொல்லிவிட்டு வினை பலன்களுக்கு வந்தார். அப்பொழுது வினை பயனாக ஒன்றை சொன்னார்.

இந்த ஜாதகருக்கு முன் வினை பயனாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று. இதை கேட்டவுடன் ஸ்ரீகார்ய மனுஷாள் அந்த ஜோசியரை அடிக்கச்சென்றார்கள். மஹாபெரியவா ஸ்ரீகார்ய மனுஷாளை தடுத்தார்.அவன் மேல்தப்பு ஒன்றும் இல்லை.ஒருவருடைய கர்ம வினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது.என்று சொல்லி புரிய வைத்தார்.

இறுதியில் மஹாபெரியவா தனுக்குத்தானே எப்படி தண்டனை கொடுத்துக்கொண்டு ஓராண்டு அனுபவித்தார் என்பதை தெரிந்து கொள்ள இந்த காணொளியை காலம் தாழ்த்தாமல் காணுங்கள்.

“Cause and effect” is a science theory

" "வினைப்பயனும் வாழ்க்கையும்"

இது மஹாபெரியவா நமக்கு சொல்லிக்கொடுத்த

பிரபஞ்ச உண்மை"

உண்மை தெரிந்த பின்பு வினைகளுக்கு

முற்றுப்புள்ளி வைக்க முடியாதா

நல் வினைகள் செய்து வாழ்வோம்

பிறப்பு இறப்பு என்னும் சக்கரத்தில்

இருந்து விடுபடுவோம்

https://www.youtube.com/watch?v=FS9D-ave9YQ

Play duration: 46 minitues 39 seconds

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square