Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026 தியாகு தாத்தா


சரணாலய பெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026

தியாகு தாத்தா

வெற்றி என்பது எவ்வளவு முறை விழுந்தாலும்

எழுந்து நிற்கிறீர்களா அதுதான்

வாழ்க்கைக்கே வெற்றிவாழ்க்கைக்கே வெற்றி

தாத்தாவை பற்றி ஒரு சிலவரிகள்:

குடும்பத்தில் தியாகு தாத்தா தான் முதல் தலை முறை மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு. இந்தப்பதிவு முழுவதும் நாம் இனிமேல் தியாகு தாத்தாவை தாத்தா என்றே அழைப்போம். இன்றைய நாளில் தியாகு தாத்தாவிற்கு என்பதுக்கு மேல் இருக்கும்.

  • தன்னுடைய பதினைந்தாவது வயதில் தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் முடிகொண்டான் என்னும் கிராமத்தில் தன்னுடைய தாயருடன் வசித்து வந்தார். அப்பொழுது ஒரு நாள் அங்குள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக மஹாபெரியவா வந்துகொண்டிருந்தார். மஹாபெரியவாளுக்கு தியாகுவை முன்பின் தெரியாது. தியாயுகுவுக்கும் மஹாபெரியவாளை தெரியாது.

  • விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த மஹாபெரியவா வழியில் சென்ற ஒருவரை அழைத்து விளையாடி கொண்டிருக்கும் தியாகுவை அழைத்து வரச்சொன்னார்.. வந்த தியாகுவிடம் தன்னுடன் மடத்திற்கு கைங்கர்யம் பண்ண வர முடியுமா என்று கேட்டார். தியாகவும் சரி வருகிறேன் என்றார்.

  • நடந்த ஆண்டு . 1939 அப்பொழுது தாத்தாவிற்கு வயது பதினைந்து. தாத்தா சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் நல்ல பாவனையோடு சொல்லியிருக்கிறார். கேட்கும் பொழுதே நம் ஆத்மாவிற்கு ஒரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம்.

  • சில அற்புத நிகழ்வுகளை மட்டும் உங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக சமர்ப்பிக்கிறேன். மஹாபெரியவாளின் அற்புத சாகரத்தில் மூழ்க இந்த காணொளி முழுவதையும் பாருங்கள்.

அற்புதம் - 1

தாத்தா மஹாபெரியவாளிடம் மிகுந்த உரிமையுடன் பழகுவார்.. பதினைந்து வயதில் இருந்தே மஹாபெரியவாளிடம் பழக்கம் இல்லையா!. ஒரு முறை எதோ ஒரு விஷயத்தில் மஹாபெரியவாளிடம் கோபித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு பஸ் பிடித்து வந்து கொண்டிருந்தார்.. வீடு வந்து சேரும் வரை தாத்தா மஹாபெரியவாளை எல்லா விதத்திலும் திட்டி தீர்த்து விட்டார்.

அதற்கு பிறகு பல வருடங்கள் கழித்து தன நண்பருடன் தரிசனம் காண சென்னைக்கு வந்தார் தியாகு தாத்தா.. அப்பொழுது மஹாபெரியவா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தியாகு தாத்தா. மஹாபெரியவாளுக்கு நமஸ்கரம் செய்தார். அப்பொழுது மஹாபெரியவா தான் பேசிக்கொண்டிருந்தவரிடம் சொல்கிறார்.:

"எனக்கு கூட அம்பாளுக்கு சஹஸ்ர நாம அர்ச்சனை செய்ய வார்த்தைகள் கிடைக்காது. ஆனால் தியாகு இருக்கானே எனக்கு ஒரு பெரிய சஹஸ்ர நாம அர்ச்சனையே செய்து விட்டான். கீழே விழுந்து நமஸ்கரித்த தியாகு தாத்தா எழுந்திருக்கவே இல்லை.

தாத்தாவிற்கே மறந்து போன விஷயத்தை பல வருடன் கழித்து மஹாபெரியவா சொல்கிறார் என்றால் அவர் பிரபஞ்சேஸ்வரன் பரமசிவம் தானே.. தாத்தா கண்களில் கண்ணீருடனே படுத்து கிடந்தார். இந்த நிகழ்வை கேளுங்கள். உங்கள் கண்களிலும் கண்ணீர் வரும்.

மனிதர்களில் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற நிலையில் அத்தனை வெசுவுகளையும் வாங்கிக்கொண்டு தான் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு யாரால் இருக்க முடியும். மஹாபெரியவா இந்த பிரபஞ்சத்தை படைத்த தெய்வம் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்.?

அற்புதம் – 2

நாம் இதுவரை மஹாபெரியவாளின் அற்புதங்களை மட்டுமே அனுபவித்து வந்தோம். அற்புதத்தில் இருந்து ஒரு சிறு மாற்றத்திற்காக மஹாபெரியவா ஒரு சாதாரண மனுஷனாக இருந்தால் எப்படி இருக்கும். நினைத்து பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா மேலே படியுங்கள்.

மஹாபெரியவாளுக்கு மற்றவர் குரலில் பேசும் திறமை உண்டு...மூங்கில் குச்சியில் சிலம்பம் ஆடுவார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. தலையில் குளிக்கும் சொம்பை வைத்துக்கொண்டு கரகம் ஆடுவதை கண்டிருக்கிறீர்களா. இந்த காணொளியை காணுங்கள். அவ்வளவு பெருமை வாய்ந்த பரமேஸ்வரன் மனிதனின் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு மனிதனுக்கு சரிசமமாக வாழ்ந்த சம்பவங்களும் உண்டு.

ஒருமுறை மஹாபெரியவா தன்னுடைய அறைக்குள் இருக்கிறார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக வேறு யாரோ ஒருவருடைய குரலில் பேசிவிட்டு பிறகு தன் குரலில் பதில் சொல்கிறார்.

ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் கதவை திறந்து மஹாபெரியவா வெளியே வரவே இல்லை. பிறகு தான் மட்டும் வெளியே வந்தார். தாத்தா திரு திரு வென்று முழித்து கொண்டு நிற்கிறார். மஹாபெரியவாளுடன் பேசிக்கொண்டிருந்த இன்னொருவரை தாத்தா தேடுகிறார். இவர் தேடுவதை பார்த்து ரசித்து "நன்னா ஏமாந்து போனாயா" என்றாராம். அப்பொழுதுதான் தாத்தாவிற்கு மஹாபெரியவா பல குரலில் பேசுவார் என்பது தெரிந்தது..

சிலம்பமும் கரகாட்டமும்:

பண்டிகை காலங்களில் கிராமத்தில் இருந்து கலைஞர்கள் வந்து மஹாபெரியவா முன்பு சிலம்பம் ஆடுவார்களாம்..பிறகு கரகாட்டம் ஆடுவார்களாம்.அவர்கள் எல்லாம் ஆடிவிட்டு சென்றவுடன் மஹாபெரியவா தாத்தாவிடம் சொல்லுவாராம் என்னடா இவாளுக்கு ஆடவே தெரியலை. நான் ஆடறேன் பாரு என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள தண்டத்தை வைத்து சிலம்பம் ஆடுவாராம்.

பிறகு குளிக்கும் சொம்பை தலையில் வைத்துக்கொண்டு கரகம் ஆடுவாராம்..தியாகு தாத்தா எவ்வளவு பாக்கியசாலி. பரமேஸ்வரனை ஒரு சாதாரண மனிதனாக பார்த்தார் அல்லவா. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.

அம்பாள் காமாட்சி உயிருடன்:

எல்லோருக்குமே மஹாபெரியவா செய்யும் பூஜையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டு. அதுவும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. தாத்தா அப்படி ஒரு முறை மஹாபெரியவா செய்யும் பூஜையை பார்க்க நினைத்தார்.

மறைவுக்குக்காக திரை போடப்பட்டிருந்தது.. ஒரு சில வினாடிகள் வெளியில் காத்திருந்து விட்டு பின்னர் திரையை மெதுவாக விலக்கி பார்த்தார். பார்த்தவருக்கு தன்னுடைய கண்களை தானே நம்ப முடியவில்லை.

அத்தனை நகைகளுடன் அலங்கார பூஷிணியாக அமர்ந்திருக்கிறாள் அம்பாள் காமாட்சி.. நெற்றியில் பெரிய குங்கும பொட்டு..ஒரு கையில் கரும்பும் மற்றொரு கையில் லீலா புஷ்பங்களையும் வைத்துக்கொண்டு ஒரு தெய்வீக சிரிப்புடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்க மஹாபெரியவா அம்பாளின் பாதங்களை பிடித்து கொண்டு இருக்கிறார். யாருக்கு கிடைக்கும் இந்த காட்சி.. இதற்கு பிறகு இந்த காணொளியை காணுங்கள். உங்களுக்கே புரியும்.

https://www.youtube.com/watch?v=l1Zmk86bykI

Play duration: 2 hours-07 minutes-59 seconds

தியாகு தாத்தாவின் எழுபது ஆண்ட கால மடத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புத அனுபவங்களை இந்தக்காணொளி மூலம் அனுபவியுங்கள்.

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றார்

கீதையிலே கண்ணன்

இந்த கலி காலத்தில் அழைக்கவே வேண்டாம்

நினைத்தாலே போதும் வருவேன் என்கிறார்

கலியுக கண்ணன் மஹாபெரியவா

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square