Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா-084 சரணாலயம் பிறந்த கதை.


என் வாழ்வில் மஹாபெரியவா-084

சரணாலயம் பிறந்த கதை.

மஹாபெரியவா

என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில்

நம்முடைய சம்பாஷணைகள்

நிசப்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும்

அற்புத நிகழ்வுகள்

சமயத்தில் என்னுடைய இதயம் கூட

இடம் மாறித்துடிக்கும்

சரணாலயம் பிறந்த ;பொழுது என் இதயம்

இடம் மாறித்துடித்தது.

சரணாலயம் பூர்ண கும்பம்

சென்ற பதிவில் நான் மஹாபெரியவாளிடம் கதறி அழுததை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள்..சென்ற வாரத்தின் சுருக்கம் முதல் முறை வாசிப்பவசர்களுக்கு.

.

நான் என்னுடைய இல்லத்தில் குரு பூஜை வேண்டி தங்களுடைய பிரச்சனைகளை எடுத்து சொல்லி அவைகளை நான் மஹாபெரியவா பாதங்களில் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்குவது வழக்கம்.

வழக்கமாகவே கூட்டம் சமாளிக்கும் அளவிற்கு தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினேன்.இருந்தும் இரவு வரை சமாளித்து எல்லோரையும் மன திருப்தியுடன் அனுப்பி வைத்தேன். இரவு பத்து மணிக்கு மஹாபெரியவாளிடத்தில் போய் மிகுந்த வருத்தத்துடன் நின்றேன். இனி நடந்த உரையாடல் வழக்கம் போல் சம்பாஷணை வடிவில் உங்களுக்காக:

பெரியவா: என்னடா மூஞ்சியை தூக்கி வெச்சுண்டு நிக்கறே. என்ன வேணும் சொல்லு.

நான்: :எனக்கு என்ன வேணும். நான் என்னத்தை கேட்கப்போறேன். தேடிண்டு வர பக்தாளுக்கு மன சாந்தியையும் படும் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு வேணும்னு கேட்கறேன்,

பெரியவா சரி என்ன வேணும்னு கேளு.

நான்: பெரியவா இன்னிக்கு நீங்கள் பார்த்திருப்பேள். எவ்வளவு கூட்டம்..ஒவொருத்தரும் அவளோட கஷ்டங்களை தனியா சொல்ல ஆசைப்படறா? மத்தவாளுக்கு அவளோட கஷ்டங்கள் தெரியக்கூடாது அப்படின்னு நினைக்கிறா.

எனக்கு தனியா ஒரு ரூம் வேணும்.. என்னோட ஆத்துலே இருந்து பார்த்தாலே அந்த வீடு தெரியணும். .அந்த புது ஆத்துல உங்களோட விகிரஹத்தை வெச்சு நான் தினமும் மூன்று கால பூஜை செய்யணும்.

ஒவ்வொரு அனுஷதுக்கும் அனுஷ பூஜை பண்ணி எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கணும். இதுக்கு தகுந்தாற்போல பெரிய வீடாக வேணும். தெருவை கடந்து போற மாதிரி இருக்கக்கூடாது.. செய்வேளா பெரியவா. எனக்காக இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்லே.

பெரியவா: என்னடா நீ கேக்கறமாதிரி வீடு வேணும்னா நான் கட்டி தான் தரணும். நாளைக்கு காத்தலே பதினோரு மணிக்கு நீ கேட்டமாதிரி வீடு கிடைக்கும். நீ சுயநலம் இல்லாமே எல்லாருக்கும் பிரார்த்தனை பன்னரே.நீ நன்னா இரு. இது உனக்கு கடைசி ஜென்மம், உன் பிராணன் போகும் போது நானே வந்து அழைச்சிண்டு போவேன். ஷேமமா இரு.

நான்: என்ன பெரியவா எனக்கு தெரிஞ்சு இந்த சுற்றுவட்டாரத்தில் ஒரு வீடுமே இல்லை. எப்படி நாளைக்கு காத்தலே வீடு கிடைக்கும்.

பெரியவா: உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். உனக்கு நீ கேட்டமாதிரி வீடு அமையும். அது ஒரு கோவிலா இருக்கும்.அந்த கோவிலிலே பார்வதி பரமேஸ்வரன் இருப்பா மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணு இருப்பா காமாட்சி இருப்பா. அண்ணன் தம்பியான விநாயகரும் முருகரும் இருப்பா.

நீயும் காத்தலே இருந்து உலகத்திலே எல்லாருடைய கஷ்டங்களளயும் வாங்கி கழிக்கறே. உன்னோட தலை சூடாகி கொதிக்கும். வரவாளும் கனத்த மனசோட வரா. அதுனாலே நீ குளு குளு வசதியோடு இருக்கும் அறையில் இருப்பே. கவலை படாதே.

நான் : பெரியவா நீங்கோ மாட்டு தொழுவத்தில் இருந்தேள். எந்த வசதியும் இல்லாமே சாதாரணமா இருந்தேள்.நான் மட்டும் எப்படி பெரியவா இவ்வளவு வசதியா இருக்கறது.

பெரியவா: நான் பதிமூணு வயசிலே சன்யாசி ஆயிட்டேன். நீ ஒரு கிரஹஸ்தன் டா. கிரஹஸ்தன் சந்நியாசியா இருக்கறது ரொம்ப கஷ்டம். உனக்கு கொஞ்சம் வசதி வேணும்டா.

நீ சுய நலம் இல்லாமே மத்தவாளோட நலனுக்கு ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமே உழைக்கிறே.. ஒரு விரலிலிலே புஸ்தகம் எழுதறே.

அரிசி வெங்காயம் பூண்டு புளி வெளியில் இருந்து வாங்கி சாப்பிடமே நீயே சமைச்சு சுயம்பாகம் சாப்பிடறே. தினமும் பேப்பர் படிக்கறதில்லே.டிவி பாக்கறதில்லே ஒரு நாளைக்கு எத்தனை பேரோட பிரச்சனைகளை பொறுமையா கேட்டு அவாளுக்கு அனுக்கிரஹம் வாங்கித்தரே. நீ ஆயிசோட இருக்கனும். இது உனக்கு கடைசி பிறவிங்கறதை மறந்துடாதே.

நான் பலருக்கும் பல கைங்கர்யங்களை கொடுத்து சூஷ்ம ரூபத்தில் வழி நடத்தறேன்.ஒருத்தருக்கு கோவில் கைங்கர்யம் ஒருத்தருக்கு பிரவசனம் பண்ணறது ஒரு சிலருக்கு கோவில் புனருத்தாரணம் செய்யறது சிலருக்கு எழுதறது இப்படி பலருக்கும் பல கைங்கர்யங்களை கொடுத்திருக்கேன்.

ஒனக்கு மட்டும்தாண்டா மத்தவாளோட குறைகளை கேட்டு அந்த குறைகளை என் பாதங்களில் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்து அவளோட வாழ்க்கையில் விளக்கேத்தற கைங்காயத்தை கொடுத்திருக்கேன்.

இது மட்டும் இல்லாமே புத்தகம் எழுதறது பழங்காலத்து கோவில்களை கண்டுபிடிச்சு புனருத்தாரணம் செய்யறது புதுசா எனக்காக மெட்ராஸில கோவில் கட்டுன்னு சொன்னவுடனே சரி பெரியவா அப்படின்னு அதுக்கான வேலையை ஆரம்பிச்சு செய்யரே. மத்தவளோட கஷ்ட களங்களில் அவாளுக்கு தைரியம் சொல்லி பயம் போக்கி வாழ வைக்கறே.

இத்தனையும் ஒரு காலையும் ஒரு கையையும் வெச்சுண்டு பன்னரே. உனக்குன்னு இதுவரைக்கும் நீ எதுவுமே கேட்டதில்லே. நீ என்கிட்டே இன்னிக்கு என்ன கேட்டாயோ அது நாளைக்கு காத்தலே உனக்கு கிடைக்கும்.

நான்: பெரியவா என்னிடம் அவ்வளவாக பணம் இல்லை. நன் புத்தகம் எழுதி சம்பாதித்தை ஏழை குழந்தைகளுக்கு படிக்கறதுக்கும் ஏழை பெண்கள் கல்யாணத்திற்கு தாலி செய்யறதுக்கும் சிறு நீரகம் கெட்டுப்போய் அதற்கு உண்டான டயாலிசிஸ் சிகிச்சைக்கு உண்டாகும் செலவிற்கும் படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கும் செலவு பண்ணறேன்.

நீங்கள் எனக்காக அமைத்து கொடுக்கும் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்கவும் மாதா மாதம் வாடகை கொடுக்கறதுக்கும் என்கிட்டே அவ்வளவாக பணம் இல்லையே பெரியவா. நான் யார்கிட்ட போய் கேட்பேன்.

பெரியவா: ஏண்டா நீ மெழுகு வர்த்தி போல எரிஞ்சுண்டு மத்தவா வாழ்க்கையில் விளக்கேத்தறே. நீ கஷ்டப்படக்கூடாது. உனக்கு ஒரு பக்தை அட்வான்ஸ் கொடுப்பா. உன்னோட டிரஸ்ட் வாடகையை கொடுக்கும். வீட்டுக்காரரே அட்வான்ஸையும் வாடகையும் குறைச்சு வாங்கிப்பா. இது நாளைக்கு பொழுது விடிந்தவுடன் பேச்சு வார்த்தை தொடங்கி சரியாக பதினோரு மணிக்கு உனக்கு கொடுக்கும் புது வீட்டின் சாவி உன் கைகளில் இருக்கும் வீட்டுகாறாளே குளு குளு வசதி செஞ்சு குடுப்பா. வீடு பெரிசா இருக்கும். நீ கேட்ட மாதிரி வீடு பெரிசா இருக்கும்.

அந்த வீட்டை கோவிலா மாத்தறதுக்கு ஆகும் செலவை ஒரு பக்தர் ஏத்துப்பார். நீ தினமும் காத்தாலேயும் சாயங்காலத்திலும் போய் பூஜை பண்ணு. அங்கே வரவாளுக்கு என் பக்தியை ஊட்டு. நீ கேட்டமாதிரி உன்னோட கண்பார்வையிலேயே இருக்கும்.. ஷேமமா இரு

நான்: சரி பெரியவா நாளைக்கு காத்தாலே பிரார்த்தனைக்கு வழக்கம் போல வரேன்.

அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. இரண்டு விதத்தில் நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். ஒன்று எனக்கு தெரியாமல் என் கண் பார்வையிலேயே வீடு இருக்கும் என்பது.

இரண்டு பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த ஒரே உருவம் மஹாபெரியவாளிடம் பேசுவது என்பது அந்த எல்லையில்லா ப்ரபஞ்சத்திடமே பேசுவதற்கு ஒப்பாகும். யார் செய்த புண்ணியமோ. இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது..

எனக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம். மஹாபெரியவாளுக்கு என்று ஒரு கோவில்.அங்கு நான் நினைத்தபடி மஹாபெரியவாளுக்கு பூஜைகளும் நெவேத்தியங்களும் செய்யலாம். என்னை பார்க்க வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு தனியாக பேசவும் அழவும் தனியாக ஒரு அறை இருக்கப்போகிறது.

கனத்த இதயத்துடன் வரும் மஹாபெரியவா பக்தர்களுக்கு குளுமையான ஒரு சூழலில் மனது லேசாகும். காலை நான்கு மணியில் இருந்து உலகத்தின் பலவேறு நாடுகளில் இருந்து பக்த்தர்கள் என்னை அழைத்து தாங்கள் படும் அல்லல்களையும் துன்பங்களையும் அழுதுகொண்டே சொல்வது என்னை தரையில் சாய்த்து விடும். என் மண்டை கொதிக்கும். எனக்கும் இந்த குளுமையான சூழல் சற்றே அமைதியை கொடுக்கும்.

இப்படியே நினைத்துக்கொண்டு என்னை மறந்தேன்.கண்ணை அயர்ந்தேன். தூங்கி விட்டேன். காலை சரியாக மூன்று முப்பது .