Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா-085 சரணாலயம் பிறந்த கதை


என் வாழ்வில் மஹாபெரியவா-085

சரணாலயம் பிறந்த கதை

சரணாலயத்தில் வாசம் செய்யும் மஹாபெரியவா

எண்ணத்தில் புனிதமும்

சிந்தனையில் இறைத்துவமும்

செயலலில் மனிதத்துவமும் இருந்தால்

இந்த பிரபஞ்சமே கைகட்டி

உங்களுக்கு சேவகம் செய்யும்.

இந்த பதிவே ஒரு வாழும் சான்று

அன்று இரவு நான் தூங்க சென்றாலும் என்னால் வழக்கம் போல் தூங்க இயலவில்லை. ஏன் தெரியுமா? மஹாபெரியவா செய்யும் அத்தனை அற்புதங்களுமே என் தூக்கத்தை விழுங்கி விடும் அற்புதங்கள்.

ஆனால் நாளை காலை மஹாபெரியவா செய்யப்போகும் அற்புதத்தித்ற்கு எல்லையே இல்லை.. எல்லா அற்புதங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் இருக்கப்போகிறது.

இதற்கு காரணங்கள் எவ்வளவு இருந்தாலும் ஒரு சில காரணங்களை இங்கே உங்களுக்காக எழுதுகிறேன்.

.

  1. முதலாவது காரணம் நான் முன் வைத்த அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று எனக்காக மஹாபெரியவா ஆசிர்வதிக்க போகிறார்.

நான் முன் வைத்த கோரிக்கைகள் இவைகள் தான்.

  1. என் கண் பார்வையில் நீங்கள் எனக்காக பார்க்கும் வீடு இருக்கவேண்டும்.

  2. தெருவை கடந்து என்னால் போக இயலாது.. அதனால் இப்பொழுது இருக்கும் வீட்டின் அருகிலேயே இருக்க வேண்டும்.

  3. உங்களை வைத்து நான் பூஜை செய்ய வேண்டும்.

  4. ஒவொரு அனுஷ பூஜைக்கும் நான் உங்களுக்கு பூஜை செய்து எல்லாருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யணும்.

  5. ஒவ்வொரு அனுஷத்திற்கும் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்யணும்.

  6. என்னால் புது வீட்டிற்கு அட்வான்ஸ் அவ்வளவாக கொடுக்க முடியாது. அதனால் அட்வான்ஸ் குறைச்சலாக இருக்க வேண்டு,ம். அந்த குறைச்சல் அட்வான்ஸையும் யாராவது ஒரு பக்தர் ஏற்று கொள்ள வேண்டும்.

  7. வாடகையும் குறைச்சலாக இருக்கவேண்டும். வாடகையும் யாராவது ஏற்றுக்கொண்டால் நான் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்தனையையை அமைதியான மனதுடன் செய்வேன்.

  8. அந்த புதிய இடம் ஒரு சாந்தியை கொடுக்கும் சாந்தி நிலையமாக இருக்கவேண்டு,ம்.

  9. அங்கு உங்களை சேவிக்க வருபவர்களின் மனக்குறையும் மனதின் பாரமும் அவர்களுக்கு அங்கேயே இறக்கி வைத்த உணர்வு வர வேண்டும்.

  10. பல நூறு ஆண்டுகளாக ஒரு கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு எவ்வளவு சக்தி இருக்குமோ அவ்வளவு சக்தியும் சாநித்யமும் இந்த கோவிலில் இருக்க வேண்டும்.

  11. பக்தர் ஒருவர் உங்களோட சரணாலயத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே அவர்கள் கனத்த மனசு லேசாக வேண்டும். இறுகிய இதயம் விசாலமாக வேண்டும். .

  12. துக்க சுவாசத்தையே சுவாசித்து கொண்டிருந்த நாசிகள் நிம்மதி பெருமூச்சை சுவாசிக்க வேண்டும்..

  13. நீங்கள் அந்த நாட்களில் மடத்தில் நீங்கள் மாடதி பதியாக உட்கார்ந்திருக்க தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி வரும் பக்தர்கள் பக்தர்களை போல இந்த சாந்தி நிலையத்திலும் இருக்க வேண்டும்...

  14. அன்றைய நாட்களில் உங்களை பார்த்தவுடன் எத்தனை ஆத்மாக்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் உங்கள் திருவடிகளை நமஸ்கரிப்பார்கள். ஏதோ தங்களுடைய பிரச்சனைகளுக்கு அந்த நொடியே தீர்வு கிடைத்து விட்டாற்போல் அழுவதும் சிரிப்பதுமாக இருப்பார்கள்.

  15. அன்றைய உங்கள் ஸ்தூல நாட்கள் இன்று உங்கள் சூஷ்ம நிலையிலும் இந்த சாந்தி நிலையத்திலும் தொடர வேண்டும்..அன்று உங்களுக்கு நான் கைங்கர்யம் செய்யவில்லை. ஆனால் இன்று உங்கள் சூஷ்ம நிலையில் ஓய்வு ஒழிச்சல் இன்றி நான் உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

  16. எனக்காக இதுவரை நான் கேட்டது எதுவும் இல்லை. நான் உங்களிடம் கேட்பது எல்லாமே பொது நலன் சார்ந்து தான் இருக்கும். நான் உங்களோட பக்தாளுக்காக கேட்டது எல்லாம் செய்வேளா பெரியவா.

பெரியவா: நிச்சயம் செய்யறேண்டா. உனக்காக இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. அந்த குறையும் உனக்கு இருக்க வேண்டாம்டா. உனக்குன்னு என்ன வேணும் இப்பவே கேளு. நன் உனக்கு அனுக்கிரஹம் பண்ணறேன். என்ன வேணுமோ கேளுடா.

நான்: பெரியவா எனக்கு ஒரு ஆசை. என்னோட பிராணன் எப்படி போகணும் தெரியுமா? பெரியவா.. நான் எனக்கு முகம் தெரியாத முகவரி தெரியாத ஒரு சக ஆத்மாவிற்கு உங்களிடம் கெஞ்சி பிரார்த்தனை செய்யும் பொழுது என் கடைசி மூச்சு ங்கிற்க வேண்டும். நான் செய்யும் அந்த கடைசி பிரார்த்தனையும் அந்த ஆத்மாவிற்கு பலிக்க வேண்டும். இதுதான் எனக்காக நான் கேட்கும் கடைசி ஆசை.

பெரியவா: இவ்வளவு தானடா? உனக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு போ.ஆமாம் நீ இவ்வளவு கேட்கறீயேடா. அந்த காலத்து கோவிலுக்கு இருக்கற சாந்நித்தியம் இருக்கணும்கறே. நான் ஸ்தூல சரீரத்தில் இருந்த மாதிரி இப்போ சூஷ்ம சரீரத்திலும் நடக்கணும்கறே. இவ்வளவு ஆசையை மனசுலே வெச்சுண்டு என்கிட்டே பிரார்த்தனை செய்யரே. இந்த கோவிலுக்கு என்ன பேர் வைக்கப்போறே..

நான்: அதையும் நீங்களே சொல்லுங்கோ பெரியவா.

பெரியவா: நீயும் என்கிட்டே சரணாகதி பண்ணிட்டே. குரு பூஜை உதவு வேண்டி உன்னை தேடி வரவாளையும் சரணாகதி பண்ண வைக்கறே. பேசாமே இத கோவிலுக்கு சரணாலயம்னு பேர் வை. அங்கே வரவாளுக்கு நிச்சயம் மன சாந்தியும் நிம்மதியும் கிடைக்கும்.

நான்: ரொம்ப சந்தோஷம் பெரியவா. நீங்கள் சரண்சலயத்திற்கு வந்துட்டேள்ன்னு எனக்கு எப்படி தெரியும் பெரியவா?

பெரியவா: இப்போ மெட்ராஸில மழையே இல்லை. நீ சரணாலயம் போன முதல் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்.

என்னோட ;பூரண கும்பம் சரணாலத்திற்கு வரும்.

பெரிய இசை வல்லுநர்கள் சரணாலயத்திற்கு வருகை தருவது மட்டுமல்ல எனக்கு முன்னால் அவர்களின் இசை ஞானத்தை காண்பிப்பார்கள். சரணாலயம் ஒரு இசை கோவிலாகவே மாறிவிடும். இது போல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.. நான் உன் சரணாலயத்தில் வந்து வாசம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்னு தெரிஞ்சுக்கோ.

எல்லாத்துக்கும் மேலே நீ கேட்டமாதிரி சரணாலயத்திற்கு வரும் பக்தர்கள் கேட்டதும் கிடைக்கும். கேட்க ,மறந்ததும் கிடைக்கும். உனக்கு சந்தோஷமா?

நான் ரொம்ப சந்தோஷம் பெரியவா. நீங்கள் எப்பொழுதும் சரணாலயத்தில் வாசம் செய்யணும். உங்களை தேடிண்டு வர பக்தாளுக்கு அவர்கள் கேட்கும் நியாயமான வரங்களை நீங்கள் .அளிக்க வேண்டும்.

இத்தனை ஆசைகளை மனதிலும் இதயத்திலும் சுமந்து கொண்டு இரவு உறங்க சென்றேன். இரவில் ஒரு சொப்பனம். மஹாபெரியவா எனக்கு அமைத்து கொடுக்க, போகும் வீட்டின் அமைப்பு என் கனவில் வந்தது.

அதில் இருக்கப்போகும் பார்வதி பரமேஸ்வரன் பெருமாள் மஹாலக்ஷ்மி விநாயகர் முருகன் விகாரங்கள் அமையப்போகும் கோபுர கலசத்துடன் கூடிய சன்னதி அனுஷ பூஜைக்கு செய்யும் கச்சேரி இடத்தின் அமைப்பு எல்லாமே என் கனவில் சினிமாமாவில் பார்ப்பது போல அச்சடித்தாற்போல் பார்த்தேன்.

இரவு ஒரு மாதிரி தூங்கி விட்டு அதிகாலை பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன். மஹாபெரியவா முன் நின்றேன்.

பெரியவா: என்னடா? நன்னா தூங்கினாயா?

நான் : தூங்கினேன் பெரியவா. இன்னும் விடியரத்துக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கு. எனக்குள் ஒரே பரவசமா இருக்கு பெரியவா. நீங்கள் பிரபஞ்ச தெய்வம் பரமேஸ்வரன்.. நான் ஒரு சாதாரண மனுஷன். நான் ஆசைப்பட்டு கேட்டேன். அப்படிங்கறதுக்காக இவ்வளவு மெனக்கெடறேளே பெரியவா. யார் செய்த புண்ணியமோ.