என் நெருங்கிய சொந்தங்களே, அற்புதங்களின் அரங்கேற்றம்

சரணாலயம் பெரியவா
என் நெருங்கிய சொந்தங்களே,
அற்புதங்களின் அரங்கேற்றம்
September 1st 2019 (Sunday)
Evening 5.30 to 8.30
R.R.Sabha-Mylapore- Chennai
Admission Free
கடந்த சில நாட்களாக என்னுடைய பதிவுகள் எதுவும் வெளி வரவில்லை.. இதன் காரணமாக பலரும் என்னை தொலைபேசியில் அழைத்தும் நேரில் வந்து விசாரித்தும் என் உடல் நிலையை பற்றி விசாரித்தார்கள்.
நான் உங்கள் ஆசிர்வாதத்தாலும் பிரார்த்தனைகளாலும் நன்றாகவே உள்ளேன். பதிவுகள் வராததற்கு காரணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஞாயிற்று கிழமை சென்னையில் மைலாப்பூரில் உள்ள R.R சபாவில் மாலை சுமார் 5 .30 மணிக்கு “சர்வம் ஸ்ரீ சந்தரசேகரம்” என்னும் அற்புதம் அரங்கேறப்போகிறது..
இதன் தொடக்கமாக இன்று முதல் நம்முடைய இணைய தளத்தில் திருமதி சௌம்யா பேசும் காணொளி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை வெளி வரும்.. அந்த காணொளிகளில் நிகழப்போகும் விழாவை பற்றி விவரங்கள் கொடுக்கப்படும்.. நீங்களும் அந்த விழாவில் பங்கேற்க முன் பதிவு செய்யலாம்.
இந்த விழாவில் என்னுடைய "என் வாழ்வில் மஹாபெரியவா” புத்தகம் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இத்த புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கம் “Showers of Miracles in my life by Mahaperiyava” என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த மொழியாக்கத்தை செய்தவர் திரு விஸ்வாஸ் கோவிந்தராஜன் என்பவர். இவரும் ஒரு வைஷ்ணவர்.. கடந்த சில மாதங்களாக மஹாபெரியவா இவரையும் ஆட்கொண்டு என்னுடைய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ஆசிர்வதித்து விட்டார்.
மேலும் கோவையை சேர்ந்த விசாலாக்ஷி மாமி எழுதி இசை வல்லுநர்கள் இசை அமைத்த மஹாபெரியவா பாடல்கள் குறுந்தகடாக வெளிவருகிறது. பல முன்னணி இசை வல்லுனர்களும் மஹாபெரியவா என்னும் ஒரு குடையில் கீழ் கைங்கயத்தில் ஈடுபட்டிருக்கும் புனித ஆத்மாக்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
முன்னணி இசை வல்லுநர்கள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க போகிறார்கள். இதன் காரணமாக நான் இந்த விழாவிற்கு நிறைய எழுத வேண்டி இருப்பதால் என்னால் வழக்கமான பதிவுகளை எழுத முடியவில்லை.
இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். நான் என் வழக்கமான பதிவுகளை வெளியிட ஆரம்பித்து விடுவேன்.. வழக்கம் போல் உங்களுடைய அன்பயும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன், என்னுடைய பலமே நீங்கள் தான்.
இந்த விழாவிற்கு நீங்கள் மறக்காமல் முன் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த விழாவிற்கு நுழைவு கட்டணம் கிடையாது. அனுமதி இ;லவசம். இருந்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.
இந்த விழாவில் வெளியிடப்படும் புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் இங்கு விழாவன்று.. R.R சபாவில் தற்காலிமாக அன்று மட்டும் திறக்கப்படும் விற்பனை நிலையங்களில் வாங்கிக்கொள்ளலாம்.
விரைவில் முன் பதிவு செய்ய ஏதுவாக லிங்க் வெளியிடப்படும் தவறாமல் முன் பதிவு செய்து விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் இருக்கைக்கு முந்துங்கள். இருக்கை எண் கிடையாது. முதலில் வருபவர்கள் தங்களுக்கு வசதியான இருக்கையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். . என்றும் உங்களுக்காகவே உழைக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்பும் உங்கள் G.R மாமா.