Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028 - ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி  மாமா


சரணாலயம் பெரியவா

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028

Every Wednesday

ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி மாமா

உச்சத்தை தொடு

உயரத்தை பார்ப்பதற்காக அல்ல

உன் உயரத்தை பார்ப்பதற்காக”

இந்த காணொளியை பற்றி சில வார்த்தைகள். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்னும் முதுமொழிக்கு ஏற்ப சிரித்து சிரித்து பேசும் ஸ்ரீ ராமஸ்வாமி மாமா மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஒரு தாத்தாவிற்கும் சுட்டியான பேரனுக்கும் உள்ள உறவை அனுபவிக்க வேண்டுமா. இந்த காணொளியை காணுங்கள்.

மஹாபெரியவாளுக்கும் மாமாவிற்கும் நடக்கும் சம்பாஷணை

ஞானத்திற்கும் ஞானத்தின் குழந்தைக்கும் நடக்கும் சம்பாஷணை

புரிதலின் உச்சத்திற்கும் புரிதலின்மைக்கும் நடக்கும் சம்பாஷணை

பரமேஸ்வரனுக்கும் பக்தனுக்கும் நடக்கும் சம்பாஷணை

மாமாவைப்பற்றி மேலும் சில விவரங்கள்:

மாமா தன்னுடைய பதினான்காவது வயதில் திருவானைக்காவலில் மஹாபெரியவாளை முதல் முதலாக தரிசித்தார். தரிசனத்தையும் தாண்டி மாமாவை ஈர்த்தது மஹாபெரியவா முகாமில் இருக்கும் பல விஷயங்கள். அவைகளில் ஒரு சிலது உங்களுக்காக :

  • யானை குதிரை மற்ற விலங்குகளை காண ஆசை.

  • இவைகளோடு மஹாபெரியவா செய்யும் சந்திரமௌலீஸ்வரர் பூஜையின் அழகை காண.

  • மேலும் மஹாபெரியவாளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷணைகளை கேட்பதில் ஆர்வம்.

  • மஹாபெரியவா முகாமில் பரிமாறும் வாய்க்கு ருசியான சாப்பாடு.

  • தினமும் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு விடலாம் .

  • இன்னும் நிறைய காரணம் இருக்கிறது மாமாவிற்கு. காணொளியை பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

மாமாவின் அற்புத அனுபவங்கள் ஏராளமாக இருந்தாலும் நான் அவற்றில் ஒரே ஒரு அற்புதத்தை மட்டும் இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.. இது சாகரத்தில் ஒரு துளி தான்.. சாகரத்தையே அனுபவிக்க காணொளியை முழுவதுமாக காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.

அற்புதம் :

ராமஸ்வாமி மாமா ரயில்வே துறையில் தொழிலார் நல துறை அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது மாமாவின் நண்பரொருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தார். அவரும் மஹாபெரியவா பக்தர். நண்பர் மஹாபெரியவாளுக்கு பரிசாக கொடுப்பதற்காக ஒரு புலித்தோலை தலையுடன் கொண்டு வந்திருந்தார். அந்த புலித்தோலை தூக்க முடியாமல் நான்கு பேர் தூக்கி கொண்டு வந்தனர்.

அதுவும் ஒரு திறந்த ஜீப்பில் போட்டுகொண்டு வந்தனர். நான்கு பேரும் தவித்து போய் விட்டார்கள். அவ்வளவு கனம். மாமாவும் நண்பரும் புலித்தோலுடன் மஹாபெரியவாளை பார்க்க சென்றனர். அப்பொழுது கூட நான்கு பேராக சேர்ந்துதான் தூக்கி கொண்டு வந்தனர்.

மஹாபெரியவா இவர்களிடம் கேட்டார். இது என்ன என்று?

நண்பரும் சொன்னார். " இது புலித்தோல் பெரியவா. உங்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார். மஹாபெரியவா உடனே கேட்டார்.

இத சட்டப்படி தான் கொண்டு வந்தாயா என்று கேட்கவும் நண்பர் சொன்னார்.

ஆமாம் பெரியவா உங்களுக்கு கொடுப்பதற்கென்றே எல்லாம் சட்டப்படி சரியாக முடித்துதான் கொண்டு வந்திருக்கிறேன். என்றார்.

சரியென்று மஹாபெரியவா உட்கார்ந்து கொண்டே அந்த புலித்தோலின் மேல் கை வைத்து ஏற்றுக்கொண்டேன் என்றார். ஆனால் நண்பர் பிடிவாதமாக இதை உங்கள் தோளில் போட்டுக்காண்பிக்க வேண்டும். நான் உங்களை சேவிக்க வேண்டும் என்று சொன்னவுடன்

மஹாபெரியவா எழுந்து நின்றுகொண்டு நான்கு பேர் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்த புலித்தோலை ஒரே கையால் தூக்கி தன்னுடைய தோளில் போட்டுகொண்டு அங்கே சிவ பெருமானாக காட்சி கொடுத்தார். அங்கே இருந்தவர்கள் எல்லாம் ஆடிப்போய் விட்டார்கள். இது எப்படி சாத்தியம்.

நான்கு பேர் மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி கொண்டு வந்த புலித்தோலை ஒரு கையால் அந்த தள்ளாத வயதில் எப்படி தூக்கி தன்னுடைய தோளில் போட்டுக்கொள்ள முடியும். இதிலிருந்தே தெரியவில்லையா. பரமேஸ்வரன் மஹாபெரியவா உருவில் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று

.

மஹாபெரியவா பரமேஸ்வர அவதாரமாக இருந்தாலும் தன்னை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. ஆனாலும் பலசமயங்களில் அவரையும் அறியாமல் தன்னுடைய இறைத்தன்மை வெளிப்பட்டு விடும் அப்படி பட்ட ஒரு நிகழ்வுதான் இந்த புலித்தோல் அற்புதமும். காலம் தாழ்த்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காணுங்கள். பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா தரிசனம் காணுங்கள்

நினைத்துப்பாருங்கள்

நாம் வாழ்வது கலிகாலம்

கலியிலும் நான் இருக்கிறேன்

என்று அபயகரம் நீட்டும்

பரமேஸ்வரன் தான்

மஹாபெரியவா

https://www.youtube.com/watch?v=Pj7cPnVEdLg

Play duration: 1 hour 3 minutes 14 seconds

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square