top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் -ஸ்வர்ணமால்யா


சரணாலயம் பெரியவா

கெட்ட சக்திகளும் நம்முடைய கர்மாக்களும்

நம்மை தாக்கும் பொழுது

நல்ல சக்திகளான மஹாபெரியபவாளையும்

அவர் கொடுத்த குரு பூஜையையும் பிடித்து கொள்ளுவோம்.

வாழ்க்கை இனிதாகட்டும்.

என் மனது உங்களுடன்

வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்.

வீடு தோறும் வாசல் இருக்கும்.

துன்பங்களை கண்டு துவண்டு நின்றால் துன்பம் ஓடிவிடுமா? இனிமேல் துன்பங்களை கண்டு வாடி நிற்க வேண்டியது இல்லை.மஹாபெரியவாளை நினைத்து கொள்ளுங்கள். மஹாபெரியவா குரு பூஜை உங்களுக்கு துணை நிற்கும்.

சொந்தங்களும் உறவுகளும் நட்பும் விலகி ஓடும் இன்றைய நாட்களில் உங்கள் கூடவே இருந்து ஒட்டி உறவாடி உங்கள் கண்ணீரை துடைத்து கூடவே வாழ்க்கையில் உங்களுடன் பயணம் செய்து கரை ஏற்றும் பிரபஞ்ச உறவு மஹாபெரியவா குரு பூஜை.

ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு வாழும் உதாரணம். இனி ஸ்வர்ணமால்யா கண்ணீருடன் விவரிக்கும் வாழ்க்கையின் இருண்ட நாட்கள் எப்படி இருந்தன. குரு பூஜை எப்படி அவள் வாழ்க்கையில் அவளை கரை ஏற்றியது என்பதை அடுத்து வரும் வாரங்களில் நாம் அனுபவிப்போம்.

இனி உங்கள் இதயங்களில் ஸ்வர்ணமால்யா

உங்களுடன் நான் – ஸ்வர்ணமால்யா…….

குருவே சரணம் குரு பாதமே சரணம்

மகா பெரியவா சரணம்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

பெரியவா பக்தர்களுக்கு

ஸ்வர்ணமால்யாவின் பணிவான நமஸ்காரங்கள்.

GR மாமா என்னும் மகத்துவம் வாய்ந்த ஒரு மா மனிதரை தொடர்பு கொள்ள பெரியவா அனுகிரஹத்தால் பாக்யம் கிட்டியது .என் அலைபேசி எண்ணை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி காத்திருந்தேன். அடுத்த சில நாட்களில் பதில் வந்தது .என் இக்கட்டான நிலைமையை உடனே புரிந்து கொண்டு பெரியவாளிடம் வேண்டி குரு பூஜை தொடங்க உத்தரவு வாங்கி தந்தார் .

மாமா வை பற்றி சொல்ல ஒரு இனிய கனவு தான் காரணம். GR மாமா வை பற்றி தெரியாத போது சில நாட்களுக்கு முன் பெரியவா என் கனவில் தோன்றினார் .ஒரு காரின் பின் புற சீட்டில் பெரியவா அமர்ந்திருந்தார் உடன் நான் மட்டுமே இருந்தேன் என் ஜாதகம் கொண்ட தாளின் கீழ் பகுதியில் என் பெயரை சமஸ்க்ரிதத்தில் எழுதினார் உடனே நான் குழந்தை போல் இரண்டு டிஜிட்டல் எழுதி விட்டீர்களா என்று வியந்தேன். உடனே பெரியவா டிஜியிட் இல்லை "லெட்டர்" என்று திருத்தினார்.

பின் என் பெயரை பெரியவாள் தன் கையில் வைத்திருந்த நோட் பேடில் எழுதினார் .அந்த நோட் பேடில் மற்றவர்களின் பெயரும் இருந்தது.இதனுடே என் பெயரையும் எழுதினார் .பின்பு என் மனதில் ஜாதகம் கற்க வேண்டும் என்ற அவா வை தெரிந்து கொண்டு, " ஆண்டவன் அருள் புரிந்து விட்டானா?"என்று கேட்டு அழகாய் சிரித்தார்கள் .

சிரித்து விட்டு சொன்னார் நீ இன்னும் சில நாட்களில் என் பக்தர் ஒருவரை தொடர்பு கொள்வாய்.அவர் மூலம் உன்னுடைய வாழ்க்கை கஷ்டங்களுக்கு ஒரு நிவர்த்தி கிடைக்கும் என்று சொன்னார்.

இந்த சுவையான கனவை கூற காரணம் GR மாமா வின் மூலம் பெரியவா அருள் புரிகிறார் என்று நன்கு தெரிந்து கொண்டேன் .பெரியவாவின் விருப்பத்தால் மட்டுமே நாம் GR மாமா வை தொடர்பு கொள்ள முடியும் என்பது என் கருத்து..கலியுகத்தில் குரு வின் அருள் பெற்ற வெகு சிலரில் அரிதானவர் .

இப்போது ஸ்வர்ணமால்யாவாக என் வாழ்வின் உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகின்றேன் .இந்த நூற்றாண்டிலும் இப்படியும் நடக்குமா என்று பலர் நம்ப மறுத்தாலும் ,இன்றும் நம் கண்ணுக்கு தெரியாத பல நற்சக்திகளும் கேள்வியே படாத பல அதிசயங்களும் நடந்தேறி கொண்டுதான் இருகின்றது.

GR மாமா வின் உதவியால் தான் இன்று சாவின் விளிம்பில் பல முறை தள்ளப்பட்டு மீண்டும் இன்று புனர் ஜென்மத்தில் முதல் அடி எடுத்து வைத்து தவழ்ந்து நிஜ வாழ்க்கையில் என்னை மற்ற மனித மனங்களோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கின்றேன் .

பதினோரு வருட போராட்டத்தில் அனைத்தையும் இழந்தேன்.மகா பெரியவாவின் அருளால் இருபத்தி ஒன்பது வயதில் சிறு குழந்தை போல உலக வாழ்க்கையில் நீச்சல் அடிக்க சிறிது சிறிதாக கற்று கொள்ள இருக்கின்றேன் .அப்பிடி என்னதான் பிரச்சனை என்றால் வாழ்க்கையே சிக்கல் ஆகி இருந்தது.

ஆசை ஆசை யாக ஒரு வீட்டை விலை பேசி முடித்தோம் .அங்கே குடி புகும் வரை எங்கள் குடும்பத்தினருக்கு தெரியாது,இப்படியும் நடக்குமா என்று , இருபது வருடமாக வெளிச்சமே காணாது இருள் சூழ்ந்த வீட்டை புதுப்பித்து குடி ஏறினோம்.குடி புகுந்த பத்து வருடங்கள் நரகத்தை அனுபவித்தோம்.

அங்கே பேய்களின் நடமாட்டம் இருந்தது.நானும் என் தங்கை கூறும் விஷயங்களை யாரும் நம்ப மாட்டார்கள். பதினாறு பதினெட்டு வயதுகளில் இருந்தோம்.பள்ளி கல்லூரி சென்று வந்தோம் .சில வருடங்களில் அனைவருமே உணர்ந்தார்கள் வீட்டினுள் சென்றால் ஒரு வித உடல் வலி மன வெறுப்பு எரிச்சல் எல்லாமே தாக்கியது இரவு முழுவதும் கெட்ட கனவுகள்,எங்களை யாரோ அழுத்துவது திணற வைப்பது கொலுசு சத்தம் ,பாறாங்கல்லை உருட்டும் சத்தம் நடு இரவில் அத்தனையும் நடந்தது.

அந்தி சாயும் வேளையில் புகை போன்ற வெள்ளை படலம், காதுகளில் பிசாசுகளின் ஆக்ரோஷ சப்தம் என்னை நிலை குலைய செய்தது . நடுஇரவில் நான் அழுவது , படிப்பில் கவனம் இல்லாமலும் உடல்நிலை படு மோசமாக மாறியது . இனம்புரியாத உடல் மற்றும் தலைவலி எந்த மருத்துவமும் கேட்கவில்லை.

மாறாக பிரச்சனை கூடிக்கொண்டிருந்தது. இதன் நடுவில் சிறிது சிறிதாக வீட்டில் இருக்கும் அனைவருக்கும் புரியவந்தது. என் அம்மாவை யாரோ காலைபிடித்து தள்ளுவதாக தெளிவாக கூறினார்கள் . என் அக்காவிற்கு பலதடவை யாரோ தூக்கத்தில் அழுத்துவதோடு, மிகுந்த பயம் வரவும் அனைவரும் செய்வது அறியாமல் தவித்தோம். ஆனாலும் எந்த உருவத்தையும் யாரும் பார்க்கவில்லை அதனால் நாங்கள் இவைகளை பெரிதாக எண்ணவில்லை .

இந்த தொல்லைகளுடன் 5 வருடங்கள் ஓடிவிட்டது பொருளாதாரம் , மனநிம்மதி , தூக்கம் , உடல்நலம் எல்லாம் இழந்தோம். மேலும் உறவினர்கள் காரணமே இல்லாமல் எங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்த்தனர். தனி தீவில் வசிப்பது போல் உணர்ந்தோம் . கோவிலுக்கு செல்வதென்றால் பகீரதப்ரயத்தனம் செய்ய வேண்டி வரும் வரும்.

அந்தி வேளைகளில் சாப்பிடுவது விழிப்பது என்றால் நினைத்து பாருங்கள் உடல் மற்றும் மன அளவில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும். சந்தோஷமாக சிறகடித்து பறக்க வேண்டிய 11 வருடங்களில் 17 முதல் 28 வயது வரை வாழ்க்கை சூன்யமே . எத்தனை பூஜைகள் செய்தாலும் ஒரு பலனும் இல்லை.

எத்தனையோ கோவில்கள் சென்றும் நிரந்தர தீர்வு தரவில்லை. துளசி செடி, வேத மந்திரங்கள் பாகற்காயை போல் கசந்தது . சிடுசிடுப்பு மற்றும் கோபமே மிஞ்சியது ஒரு சமயத்தில் என் உடல் தானா இது என் உருவம் தானா இது என பெற்றோர்கள் கவலை பட்டனர்.

சில வேளைகளில் இத்தனை கொடுமைகளையும் மீறி கோவிலுக்கு சென்றால் மட்டுமே மனம் அமைதி அடையும் . பேயின் அட்டகாசங்கள் தொடரும். இந்த காலகட்ட வாழ்க்கை நரகத்திலும் நரகம் என்று சொன்னால் அது நிதர்சன உண்மை.

அனைவருக்கும் பகல் பகலாகவே விடியும் . எனக்கு மட்டும் நடுநிசி தொடங்கி அதிகாலை வரை தூங்காமல் விழித்திருப்பேன் . பகலில் முழுநேரமும் தூக்கம் ... இரவு வந்தாலே நடுக்கம். பௌர்ணமி , அமாவாசைகளில் இரவு 7 மணிக்கு தான் எழுவேன் வாழ்க்கை மிகவும் ரணமாக மாறியது . எதிலும் தோல்வி . அனைத்தும் சூன்யம் . ஒரு கட்டத்தில் தண்ணீரை பார்த்தாலே பயம் . குளிக்க அறவே பிடிக்காது . .

இவை மனநல பாதிப்பு என்று எண்ணி அதற்கு உரிய மருத்துவரையும் என் பெற்றோருடன் சென்று மருத்துவம் பார்த்தாகி விட்டது. விளைவு பலநாள் தூக்கத்திலேயே கழிந்தது. மருந்துகளின் வீர்யத்தால் நியாபகசக்தி சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது. எனக்கு மன நலம் இல்லை என்று என் குடும்பமே சொல்லியது. ஏன் என்றால் என்னை மட்டுமே மிகுந்த பாதிப்புகள் தாக்கின. அனைவரையும் விட என் ஜாதகம் அவ்வளவு வலு இல்லை என்பதுவும் காரணம்.

மேலும் எப்படியெல்லாம் என் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருந்தது.ஒரு சமயத்தில் என்னை தாக்கிய பேய் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த பேயின் அட்டகாசங்களையும் அதனால் நானும் என் குடும்பமும் எப்படி ஒவ்வொரு நொடியையும் ஓர் யுகங்களாக கழித்தோம் என்று அடுத்த திங்களன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது வரை மிகவும் பொறுமையுடன் என் வாழ்க்கையை கேட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை உங்களை சந்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இப்படிக்கு உங்கள்

ஸ்வர்ணமால்யா


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page