Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா-088

என் வாழ்வில் மஹாபெரியவா-088

பதிவு எண் 087 இன் தொடர்ச்சி


வேத பட சாலை


நான்: பெரியவா என்கிட்டே அவ்வளவு வசதி கிடையாது. மத்தவாளோட படிப்புக்கும் கலயாணத்துக்கும் கோவில் புணருதரத்துக்கும் மத்தவா கிட்டே பிச்சை எடுத்தான் செஞ்சுண்டு இருக்கேன்., நான் எங்கே போவேன்? யாரை கேட்பேன்?. எனக்கு உங்களை தவிர யாரையும் தெரியாதே பெரியவா.


பெரியவா: நீ எங்கயும் போக வேண்டாம். நாளைக்கு காத்தலே நீ குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்த ஒரு குடும்பம் வரும். அவா உனக்கு கட்டின வீட்டை இடத்தோட நன்கொடையா கொடுப்பா. அதுதான் நீ ஆரம்பிக்கப்போற வேதபாடசாலைக்கு வித்து. நாளைக்கு ராத்திரி என்னை வந்து பார்த்து பேசு.


நானும் சரியென்று சொல்லிவிட்டு சுமார் முப்பது நிமிடங்கள் தூங்கி விட்டு பிறகு எழுந்து மற்றவர்களுக்காக செய்யும் ப்ரம்ம முகூர்த்த பிராத்தனைக்கு தயாரானேன்.

மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகள் முடிந்தன. சரணாலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் இருந்ததால் நான் வழக்கத்தை விட சற்று முன்பாக கிளம்பினேன்.


காலை பத்து மணிக்கு வழக்கமாக நான் செய்யும் காயத்ரி ஜெபத்தை முடித்து விட்டு மஹாபெரியவா பக்தர்களை என்னுடைய அறையில் சந்திக்க சரம்பித்தேன்.


அன்று காலையில் இருந்தே எனக்குள் ஒரு பரபரப்பு. ஏன் தெரியுமா? மஹாபெரியவா சொல்வது சத்தியமாகி விடும். வேத பாடசாலைக்கு மஹாபெரியவா அன்று காலை விதை ஊன்றப்படும் என்று சொன்னாரே. அது எப்படி வரப்போகிறது?. யார் மூலமாக வரப்போகிறது. ஊன்றப்படுவது இடமா இல்லை கட்டிடமா? எதுவும் தெரியவில்லை.


நானும் பொறுமையாக காத்திருந்தேன். பக்தர்கள் ஒவ்வொருவராக என்னை பார்த்து பேசி சென்றார்கள். எனக்குள் ஒரு மன அவஸ்தை. இன்னும் வேதத்துக்கு விதை போடுபவர் வரவில்லையே. மஹாபெரியவா வாக்கு சத்ய வாக்காயிற்றே.காத்திருந்தேன்.


மணி சுமார் பதினொன்று இருக்கும்.ஒரு பெரிய குடும்பமே என்னை பார்க்க என் அறைக்கு வந்தது. வழக்கமாக எல்லா பக்தர்களும் சொல்வது போல அவர்கள் குரு பூஜை செய்து நடந்த அற்புதங்களை ஒவ்வொன்றாக மஹாபெரியவாளிடமும் என்னிடமும் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தோம். வந்தவர்கள் செல்லும் தருணமும் வந்தது. எனக்குள் ஒரு மனப்போராட்டமே வந்து கொண்டிருந்தது.


நொடிப்பொழுதில் நிகழ்ந்த அற்புதம்


வந்தவர்களில் ஒருவர் கர்ணன் என்று பெயர். இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவருடைய பெயர் வேறு, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் கர்ணன் என்றே அவரை அழைக்கிறேன்.


கர்ணனுக்கு பெயர் காரணம். கர்ணன் வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எல்லோரும் கைகளை ஏந்தி தாழ்த்தி வாங்கிக்கொண்டுதான் பழக்கம். ஆனால் கர்ணன் தன கையை தாழ்த்தி கொடுக்கும் கொடைகளை தங்க தட்டில் வைத்திருப்பான். கொடை வாங்குபவர்கள் தானே இரண்டு கைகளாலும் எடுத்து செல்வர்.


மஹாபெரியவா சொன்ன வேதத்துக்கு விதை ஊன்றியவர் என்னிடம் இட்ட அன்பு கட்டளை தன்னுடைய பெயர் எங்கும் எதிலும் வரக்கூடாது. மேலும் கர்ணனை போன்றே வேதத்துக்காக கொடுத்த கொடை பல கோடிகளை தாண்டும்.


த்யான மண்டபம்

வெறும் காலி இடம் இல்லை. வேதத்துக்காகவே கட்டியது போல ஒரு அழகிய கட்டிடம். த்யான மண்டபம்..சமையல் செய்வதற்காக பெரிய சமையல் .அறை. கட்டிடத்தின் சதுர அடி சுமார் ஐயாயிரம் சதுர அடி இருக்கும். இன்னும் அந்த இடத்தை பார்க்கவில்லை என்றாலும் என் மனக்கண்ணில் அந்த இடத்தின் அமைப்பு படமாக தெரிந்தது.


நான் யாருக்கும் தெரியாமல் என் கண்களில் பூத்த கண்ணீரை துடைத்து கொண்டு நன்றி சொன்னேன். அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் என்னை அந்த இடத்திற்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள். நானும் சரியென்று அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மற்ற பக்தர்களை சந்தித்தேன்.
Krishna Radha

அடுத்தடுத்து வந்த பக்தர்கள் தங்களுடைய குரு பூஜை அற்புத அனுபவங்களை என்னிடம் சொன்னார்கள்.. என்னுடைய அழுகையும் ஆனந்த கண்ணீரும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இவ்வளவு நாளும் நான் மஹாபெரியவா அற்புதங்களை அனுபவித்திருந்தாலும் இன்று அனுபவித்த அற்புதம் என் பக்தியை மஹாபெரியவா காதலாக மாற்றியது. கிருஷ்ணர் ராதை காதலைப்போல.


வைஷ்ணவத்தில் பக்தியின் வெளிப்பாடு பல விதங்களில் இருக்கும். பெருமாளையும் தாயாரையும் நண்பர்களாக பார்க்கலாம். காதலியாக பார்க்கலாம்.தாயக பார்க்கலாம் தந்தையாகவும் பார்க்கலாம்.நான் மஹாபெரியவாளை என் காதலியாக பாவிக்க ஆரம்பித்தேன்..காதலியாகவும் பார்த்தேன்.


அன்று இரவு மஹாபெரியவா உத்தரவுப்படி மஹாபெரியவா முன் நின்றேன்.பேச வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக நின்று கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து வந்த கண்ணீர் பேசின. இனி எனக்கும் மஹாபெரியவாளுக்கும் இடையே நடந்த சம்பாஷணையையை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்.


பெரியவா: என்னடா பேசாமயே நின்னுண்டு இருக்கே.,


நான்: என்ன பேசறதுன்னு தெரியலை பெரியவா. நீங்கள் பேசறது சத்யமாயிடறதா. இல்லை நீங்கள் சத்தியதைத்தான் பேசறேலான்னு தெரியலை. பெரியவா.


பெரியவா: என்னடா ஆச்சு சொல்லு.


நான்: நீங்கள் சொன்னமாதிரியே பதினோரு மணி சுமாருக்கு ஒரு குடும்பம் வந்தது பெரியவா. அவா கடைசி வரைக்கும் ஒண்ணுமே சொல்லாமல் அவர்கள் குரு பூஜை அனுபவங்களை மட்டும் சொல்லிண்டு இருந்தா.


போகும்போது என்னிடம் எல்லா விவரங்களையும் சொல்லிட்டு போனா. .பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள கட்டடத்தை வேதத்துக்கு எழுதி தறதா சொன்னா. நானும் என்ன பேசறதுன்னு தெரியாமல் தடுமாறினேன்.உங்கள் வார்த்தை எப்படி சத்யமானது.


பெரியவா : சரி அவா மேலும் என்ன சொன்னா?


நான்: அவா சொன்னா . யார்யாருக்கெல்லாமோ வேதத்துக்காக எழுதி கேட்டா. ஆனா எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒரே மனதாக G.R மாமா வழி நடத்தும் டிரஸ்ட் க்கு எழுதி கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள்.


ஏனென்றால் மஹாபெரியவா உங்களுக்குள் குடி கொண்டு உங்களை வழி நடத்துகிறார். மஹாபெரியவாளும் நீங்களும் கனவு கண்ட வேத விருட்க்ஷம் எங்கள் இடத்தில தழைக்கட்டுமே. அதனால் உங்களுக்குத்தான் இந்த இடம்.என்று முடிவு செய்தோம்.


இன்னும் ஒரு சில நாட்களில் அந்த இடத்தை பார்க்க உங்களை அழைத்து போகிறோம்.நீங்கள் பார்த்து விட்டு மஹாபெரியவாளிடம் சொல்லுங்கள்., எங்கள் இடத்தை நீங்களும் மஹாபெரியவாளும் ஏற்றுக்கொண்டால் அது எங்கள் பாக்கியம். என்று சொன்னார்கள் பெரியவா.


இன்னும் ஓரிரு நாட்களில் என்னை அந்த இடத்துக்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள்.


பெரியவா: சரி நீ வேலையை கவனி.இன்னிக்கு ராத்திரி உனக்கு அந்த இடத்தோட அமைப்பை கனவிலே காட்டறேன். நீ நேரிலே போய் அந்த இடத்தை பார்க்கும் பொழுது கனவிலே பார்த்த இடம் மாதிரியே இருக்கான்னு வந்து என்கிட்டே சொல்லு.

நான்: சரி பெரியவா. இன்னிக்கு நிறைய பேர் சரணாலயத்திற்கு வருவா. எல்லாருடைய கஷ்டங்களையும் கேட்டு நான் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.நீங்கள் அவாளுக்கு அ