Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா-089

என் வாழ்வில் மஹாபெரியவா-089

பதிவு எண் 088 இன் தொடர்ச்சி
மஹாபெரியவா என்னிடம் சொன்னது


“அன்று கோடிக்கணக்கான பக்தர்களை சுமப்பதற்கு

என் இதயத்தையே கர்பப்பையாக மாற்றி சுமந்தேன்.

இன்னிக்கு உன்னையும் என்னை மாதிரியே சுமக்க வெச்சிருக்கேன்.

உன் இதயத்தை கர்பப்பையாக மாத்தி உன் சக ஆத்மாக்களின் சரணாலயமாக மாத்தி சுமக்க வெச்சிருக்கேன்.

அவாளையும் கரையேத்தி நீயும் ஜென்மாவை கழிச்சிட்டு

என்கிட்டே வந்து சேறு”.

மனிதனின் வாழ்க்கை மண்ணில்

இயக்கப்படுவது விண்ணில்

இயங்குவது மனிதன்

இத்தனை நேரம் கனவில் பார்த்த வீடு இப்பொழுது என் கண் முன்னே நின்றது. வீடு முதல் தளத்தில் இருந்தது. லிப்ட் இன்னும் அமைக்கவில்லை. ஆனால் அதற்கு உண்டான இடம் மின்சாரம் போன்றவைகள் தயாராக இருந்தன.


என்னால் இரண்டு பேரின் உதவி இல்லாமல் படி ஏறி முதல் தளத்திற்கு செல்வது கடினம். எங்களுடன் வந்த திரு நாராயணன் என்பவரும் சிரஞ்சீவி என்பவரும் எனக்கு உதவினார்கள்.இரண்டு பேரின் கழுத்திலும் கை போட்டுகொண்டு மெதுவாக ஏறினேன். சிறிது ஆசுவாச படுத்திகொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.


என்ன ஆச்சரியம்? நான் கனவில் பார்த்தது போலவே வீட்டின் உள்ளமைப்பு இருந்தது. நீங்கள் நினைக்கலாம் இந்த GR மாமாவிற்கு பேராசை என்று. நிச்சயமாக எனக்கு பேராசையல்ல. ஆனால் நிச்சயம் ஒரு பெரிய ஆசை. பெரிய ஆசைக்கு பின்னல் ஒரு நியாயம் இருக்கும்.


ஆமாம். அன்று எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இல்லை.வேதம் சொல்லுபவர் என்றால் அழுக்கு வேஷ்டியும் தூண்டுமாக மட்டுமே சமுதாயத்தில் வலம் வர வேண்டும். உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தன.


அன்று வருமானம் குறைவாக இருந்த காலம்.மற்றவர்கள் கர்மாக்களை கழிக்க வேதம் படித்தவர்கள் நெருப்பு புகையில் மணிக்கணக்கில் அமர்ந்து கொண்டு தன்னுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்கவிட்டு பிறர் குடும்பத்தை வாழ வைத்த காலம் அது.


அன்று வேதம் என்பது அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அந்த வேதத்தை சொல்லுபவர்கள் மிகவும் கீழான இடத்தில் இருந்தார்கள். இரண்டு விஷயங்கள் இதற்கு காரணம். ஒன்று சமுதாயத்தில் கொடுப்பதற்கு பணம் இருந்தும் மனம் இல்லை. வேதத்தை உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லுவதற்கு குரல் கொடுக்க யாரும் இல்லை. குரல் கொடுத்த ஒரே ஆத்மா பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா.


ஆனால் இன்று வசதி வாய்ப்புகள் அதிகம். வேதம் என்பது வாழ்க்கை என்பதையும் தாண்டி இன்று ஒரு கல்வியாக உருவெடுக்க வேண்டும். ஒளி ஒலி வேகத்தில் இன்று சமுதாயத்தில் எல்லாமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்று ஒருவர் வேலையில் இருந்து ஓய்வு பெறும் காலத்தில் கிடைத்த வருமானத்தை இன்று வேலையில் சேர்ந்தவுடனேயே ஒரு இளைஞன் இன்று முதல் சம்பளமாக வாங்கி விடுகிறான்.


ஒட்டு மொத்த சமுதாயமே ஒரு உயரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் சமுதாய நலனுக்கு பாடுபடும் வேதம் மட்டும் அதர பாதாளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது எந்த சட்டத்தில் இருக்கிறது. இந்த கூற்றில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா?. வேதம் மதிக்க பட வேண்டும். வேதம் போற்றப்பட வேண்டும்.


அப்பொழுது தான் சமுதாயத்தில் நியாயம் தர்மம் நீதி நேர்மை நிலைத்து நிற்கும்.சமுதாயம் ஒழுக்கமாக இருக்கும். இல்லையென்றால் சமுதாயம் தறிகெட்டு போய்விடும்.


தனி மனிதனாக வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்த கூற்றை ஏற்று கொள்ளுவான். ஆனால் கூட்டமாக சமுதாயம் என்று வரும் பொழுது காட்டில் வாழும் விலங்குகளுக்கு இணையாக யோசிப்பான். செயல் படுவான்.


காட்டில் வாழும் ஒவ்வொரு விலங்கும் என்ன செய்யும் என்று நமக்கு தெரியும். அன்றில் இருந்து இன்று வரை ஒரு மாற்றமும் இல்லாமல் தனது இயற்கையான சுபாவத்துடன் வாழ்ந்து கொண்டு வருகின்றன விலங்குகள்..


பாம்பு கொத்தும். புலி பாயும். யானை பிளிறும். நாய் கடிக்கும். ஆனால் மனிதன் எப்பொழுது என்ன செய்வான் என்று யாருக்கு தெரியும்.அன்றில் இருந்து இன்று வரை மனிதன் மட்டும்தான் மாறிக்கொண்டே இருக்கிறான்.எப்பொழுது என்ன செய்வான் என்பது யாருக்கும் புரியாத புதிர்.


நான் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சொல்ல வில்லை. இன்னும் பல மனிதர்கள் மனிதம் என்னும் மனித நேயத்தோடு இன்னல்களுக்கு இடையே தன சுபாவத்தை இழக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


வேதத்திற்கு எல்லா கட்டுப்பாடுகளும் தேவை தான். உணவுக்கட்டுப்பாடுகள் சுத்தம் சுகாதாரம் ஆகம கட்டுப்பாடுகள் இவைகள் எல்லாமே தேவைதான். இந்த கட்டுப்பாடுகளை மீறாமல் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்கை தரத்தை உயர்த்தி கொள்வதில் தப்பிலேயே.


வேதத்தை வாய் மொழியாக கற்கலாம். கற்ற வேதத்தை குறுந்தகட்டில் பதிவு செய்து திரும்ப திரும்ப கேட்டு வேதத்தை காற்றில் கலந்து செவியில் நுழையும் வண்ணம் செய்யலாம்.


இனி நான் உங்களை உருவெடுக்கும் வேத பட சாலையின் உள்ளே அழைத்து செல்கிறேன்.
காஞ்சி ஆளும் காமாட்சி

நுழைந்தவுடன் பெரிய தியான மண்டபம். அந்த ஹால் நீட்ட வடிவில் இருந்தது. அங்கே. என் மனக்கண்ணில் தோன்றியது. கிழக்கே பார்த்து அம்பாள் காமாட்சி பிரமாண்ட உருவில் கையில் கரும்புடன் ஆசனம் போட்டு அமர்ந்திருந்தாள்.அம்பாளுக்கு எதிர்புறம் மஹாபெரியவா தன்னுடைய வழக்கமான தோற்றத்தில் குந்த வைத்து அமர்ந்திருந்தார்.மஹாபெரியவா வழக்கமான அமர்ந்திருக்கும் கோலம் வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு விஸ்தாரமாக சமைக்க பெரிய காற்றோட்டமான சமையல் அறை.
விஸ்தாரமான சமையல் அறை

ஹாலை தாண்டி இருபுறமும் மிகப்பெரிய இரண்டு அறைகள்.இரண்டு அறையிலும் குளிக்கும் வசதி கொண்ட கழிவறைகள்.ஒரு அறை வேதம் பற்றிய காணொளிகள் அடங்கிய லைப்ரரி.இன்னொரு அறையில் வேதம் இந்து தர்மம் வர்ணாஸ்ரம தர்மங்கள் வாழும் முறைகள் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய புத்தகங்கள் அடங்கிய நூலகம்.காணொளி நூலகம்

புத்தகங