என் வாழ்வில் மஹாபெரியவா-090
என் வாழ்வில் மஹாபெரியவா-090
ஒரு நொடி வாழ்ந்து பாருங்கள்
“அடுத்தவர் பணத்திற்கு ஆசை படாமல் வாழ்ந்து பாருங்கள்
மற்றவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள்
அடுத்தவரை கெட்டவர்கள் என்று முத்திரை குத்தாமல் வாழ்ந்து பாருங்கள்
தகுதியற்ற புகழுக்கு ஆசை படாமல் வாழ்ந்து பாருங்கள்
மற்றவர்களை போல் வாழாமல் நீங்கள் நீங்களாக
ஒரு நொடி வாழ்ந்து பாருங்கள்
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையை பேசி வாழ்ந்து பாருங்கள்
உங்கள் யோகித்தம்சத்தை நிலை நாட்ட மற்றவர்களை
அயோக்கியர்களாக மாற்ற முயற்சிக்காதீர்கள்
ஒரு நொடி இப்படி வாழ்ந்து பாருங்கள்
பிரபஞ்சம் உங்களுடன் பேசும் அதிசயத்தை அனுபவிப்பீர்கள்”
GR மாமா

பிரபஞ்சம் உங்களுடன் பேசும் அதிசயம்
சென்ற பதிவில் நான் மஹாபெரியவாளிடம் கேட்டேன். அடுத்து இந்த வேத பாடசாலையை எப்படி எடுத்துண்டு போறது பெரியவா.அதற்கு மஹாபெரியவா சொன்ன பதிலும் நான் பதிலுக்கு என்ன கேட்டேன் என்பதை எல்லாம் சம்பாஷணை வடிவில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மஹாபெரியவா தன்னுடைய தேர்வு சரியானதுதான் என்பதை உலகிற்கு எடுத்து காட்ட சில பல கேள்விகளை என்னிடம் கேட்பேன் என்றார்., நானும் சரியென்று மஹாபெரியவா நடத்தப்போகும் அக்னி பரீச்சைக்கு தயாரானேன். இனி சம்பாஷணை உங்களுக்காக இதோ.
அக்னி பரீச்சை:
மஹாபெரியவா கேள்விகளும் என்னுடைய பதில்களும்

சீதையின் அக்னி பரீச்சை
நான்: சரி பெரியவா சொல்லறேன். நான் ஒவ்வொரு நொடியும் உங்கள் தேர்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு பொறுமையாக மற்றவர்கள் கஷ்டங்களை கேட்டு ஒரு தீர்வு கொடுத்தீர்களா அவ்வளவு பொறுமையாக நானும் மனுஷாளோட கஷ்டங்களை கேட்டு உங்களிடம் தீர்வுக்கு வருகிறேன்.
பெரியவா, எவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துளீர்கள்.ஒரு பக்கம் பெருமையாகவும் இருக்கு. இன்னொரு புறம் பயமாகவும் இருக்கு. கரணம் தப்பினால் மரணம் என்னும் கம்பி மேல் நடக்கும் மிகப்பெரிய பொறுப்பு பெரியவா .
பெரியவா: உன்னோட பலமும் பலவீனமும் உலகத்துக்கு தெரியணும் நான் உன்கிட்டே சில பல கேள்விகளை கேட்கப்போறேன். நிதானமா யோசிச்சு பதில் சொல்லு. பதில் தெரியல்லைனா சொல்லு. நான் சொல்லித்தரேன்
நான்: சரி பெரியவா கேளுங்கோ. நான் பதில் சொல்ல எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கோ.
பெரியவா என்னிடம் கேட்டார். ஏண்டா நீ இந்து மதத்தின் சிறப்பு என்ன என்று கேட்டால் நீ என்ன சொல்லுவாய்.?
நான்: என்ன பெரியவா இது? உங்களுக்கு முன்னால் நான் என்ன சொல்லறது. இந்து மத தர்மமும் நீங்கள். வேதமும் நீங்கள். உங்கள் முன்னால் நான் பிரஸ்தாபித்து பேசறது அந்த சூரியனுக்கே வெளிச்சம் கட்டறது போல ஆயிடும். வேண்டாம் பெரியவா இந்த விஷ பரீச்சை.
பெரியவா: இது விஷ பரீச்சை இல்லடா. நீ என்னோட குழந்தை நீ. என்ன சொன்னாலும் அது எனக்கு பெருமை. நீ என்ன ஒளறினாலும் பரவாயில்லை. நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு. உனக்கு தெரியல்லைனா நான் சொல்லித்தரேன். என்னோட அஸ்திவாரம் எவ்வளவு பலமா இருக்குன்னு தெரிஞ்சிக்கறேன்.சொல்லு இந்து மதத்தின் சிறப்பு என்ன.?
நான்: பெரியவா உலலகத்துல இருக்கற எல்லா மதத்துக்கும் தோற்றுவித்தவர்கள் யாருன்னு தெரியும்.ஆனால் நம்மோட இந்து மதத்துக்கு மட்டும் யார் தோற்றுவித்தார்கள் என்பதே தெரியாது. உலகம் தோன்றிய காலத்தில் இந்து மதமும் தோன்றியது. அப்படி பார்த்தால் இந்த உலகை படைத்த பரந்தாமன் தான் இந்து மதத்தையும் தோற்று வித்தார் என்று சொல்லலாம்.
பெரியவா: பரவாயில்லையே. நன்னா சொன்னே. இன்னும் என்னென்ன உனக்கு தெரியும் சொல்லு. நானும் கேட்கறேன். உன்னோட எழுத்துக்களை படிக்கறவாலும் தெரிஞ்சுக்கட்டும்..
நான்: பெரியவா இந்து மதத்துக்கு சகிப்பு தன்மையும் பிற மதங்களை மதிக்கிற பண்பும் பாங்கும் இருக்கு.
பெரியவா: கொஞ்சம் விளக்கமா சொல்லுடா.
நம் இந்து மதம் ஒரு விஷயத்தை ஒளிவு மறைவில்லாமே ஒத்துக்கறது. அவா அவா மத வழிபாட்டின் படியே வழிபட்டு பிரம்மத்தை அடையலாம். பிற மதத்தினர் இந்து மதத்துக்கு மாற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற மதத்தையும் இந்து மதம் மதித்து. யாரையும் என் மதத்துக்கு வா என்று கையை பிடிச்சு அழைச்சது இல்லை.
நீங்களே உங்களோட வாழ்க்கையில் எவ்வளவு இஸ்லாமிய சகோதரருக்கு அருள் பாலித்தீர்கள். கிறிஸ்துவ மத குழந்தை எவ்வளவு பேர் பள்ளிகளில் இருந்து நேராக உங்களை பார்த்து நமஸ்காரம் செய்து உங்கள் கைகளால் பிரசாதம் வாங்கி கொண்டார்கள்.நீங்களே இஸ்லாமியத்தில் வழிபாடு முறையை பற்றி குரானில் சொல்லி இருப்பதை இஸ்லாமியருக்கு சொல்லிகொடுத்தீர்கள்.
இந்து மதம் தான் மனித நாகரீக வாழ்க்கைக்கு வழி முறைகளை சொல்லிக்கொடுத்தது. எல்லா மதங்களும் இந்து மதித்தின் ஒரு பிரிவை எடுத்துக்கொண்டு வளர்ந்திருக்கிறது. கொல்லாமை என்ற பிரிவை எடுத்துக்கொண்டு பௌத்த மதம் தோன்றியது. அன்பு என்ற பிரிவை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவ மதம் தோன்றியது.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா " எத்தனயோ நதிகள் கிளை நதிகள் உற்பத்தியாகி சளைக்காமல் ஓடிக்கொண்டே இறுதியில் ஈஸ்வரன் என்ற மஹாநதியில் கலப்பது போல ஒவ்வொரு மதமும் தோன்றி வளர்ந்து கடைசியாக இந்து மதம் என்னும் மகா நதியில் கலந்து விடுகிறது.
இந்து மதம் ஒன்று தான்அவ்வளவு விமர்சங்களையும் தாங்கிக்கொண்டு கொண்டு மேலும் மேலும் வளர்ந்திருக்கிறது. பெரியவா. இவைகளை எல்லாம் நான் உங்களிடம் சொல்லும் பொழுது நீங்கள் எந்த விதத்திலும் "நான் ஏதோ இந்து மதத்தை தாங்கி பிடிக்க முயற்சி செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.. எனக்கு தெரிந்த உண்மைகளை நான் படித்து கேட்டு உணர்ந்த உணர்வுகளையும் உண்மைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்து மதம் மட்டும் தான் மறு பிறவியை பற்றி பேசுகிறது.மோக்ஷம் பற்றியும் சிலாகித்து பேசுகிறது.
பெரியவா: பரவாயில்லையே. எவ்வளவு தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கே.இன்னும் கொஞ்சம் சொல்லேன். இந்த உலகமும் நீ சொல்லறதை தெரிஞ்சுக்கட்டும்.
நான்: பெரியவா நீங்கள் கேலி பன்னறேள்.
பெரியவா: இது கேலி இல்லைடா அசடே.. இத்தனை கோடி பேரில் உன்னை தெரிவு செஞ்சு என்னோட பயணத்தில் உன்னையும் அழைச்சிண்டு போகும் போது எப்படி பட்ட ஆத்மாவை நான் தெரிவு செஞ்சிருக்கேன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குதான் உன்னை இவ்வளவு சொல்ல வைக்கிறேன்.சொல்லுடா இன்னும் உனக்கு என்ன தெரியும்.
நான்: சரி பெரியவா சொல்லறேன்.நன் ஒவ்வொரு நொடியும் உங்கள் தேர்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.நீங்கள் எவ்வளவு பொறுமையாக மற்றவர்கள் கஷ்டங்களை கேட்டு ஒரு தீர்வு கொடுத்தீர்களா அவ்வளவு பொறுமையாக நானும் மனுஷாளோட கஷ்டங்களை கேட்டு உங்களிடம் தீர்வுக்கு வருகிறேன்.
பெரியவா: உயிர் உடல் மனசு இந்த மூன்றை பற்றியும் அதன் சிறப்புகளையும் கொஞ்சம் சொல்லு.
நான்: கொஞ்சம் சிந்தித்து அமைதியான பிறகு மெதுவாக ஆரம்பித்தேன். பெரியவா உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது. மனித உடலில் மட்டும் தான் மனம் பிரகாசிக்கும்.. மற்ற உயிரினங்களில் பிரகாசிக்காது. மனித உடலில் மட்டும் தான் ஐம்புலன்களும் ஆத்மாவுடன் இணைந்து செயல் படுகிறது.
பெரியவா: புள் பூண்டு மரம் போன்ற தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா?
நான்: இருக்கு பெரியவா. ஓருயிர் ஈருயிர் என்று உயிர்கள் அவைகளுக்கும் இருக்கு. ஆனால் ஒரு முழுமை பெற்ற உயிர் என்று சொல்வது விலங்குகளிடத்தும் மனிதனிடம் மட்டும் தான்.
பெரியவா: அது எப்படிடா ?
நான் பெரியவா ஒரு உயிர் எப்பொழுது உண்டு ஜெரித்து மலம் கழித்து இனப்பெருக்கம் செய்கிறதோ அதுவே ஒரு முழுமை பெற்ற உயிர்.
பெரியவா: அப்பொழுது பசுமாட்டின் உயிர் மனித உயிருக்கு இணையானது என்று ஏன் சொல்லறோம். மேலே சொன்ன அத்தனை உயிருக்கு உண்டான இலக்கணங்களையும் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் பசுவுக்கு இருக்கு. அது என்ன?
நான்: பெரியவா மனிதனுக்கு மட்டும்தான் துக்கத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்தும் தன்மை இருக்கு. வீட்டில் எஜமானருக்கு ஒரு துன்பம் என்றால் பசு கண்ணீர் வடிக்கிறது. அழுகிறது.
இதனால் தான் ஒரு பசுவை கொன்று மனிதன் உட்கொள்வது மனிதனை மனிதன் அடித்து சாப்பிடும் மிகவும் பாவமான செயல் என்று இந்து தர்மம் சொல்கிறது.
பெரியவா: மிகவும் அழகா சொன்னாய். நீ கூட சிந்திச்சு இவ்வளவு அழகா பேசறே.
நான்: நான் சிந்திச்சு எல்லாம் பேசலை பெரியவா. நான் படிச்சது கேட்டது பார்த்தது என்று எல்லாவற்றையும் தொகுத்து உங்கள் கிட்டே சொல்லறேன். நான் ஒரு அசடு என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
பெரியவா: இதுதாண்டா உன்கிட்டே எனக்கு பிடிச்சதே. பாராட்டுதல்களை ஏற்றுக்கொள்ளும் அருகதை உனக்கு இருந்தும் அந்த பாராட்டுதல்களை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுகிறாயே. இதுவும் சன்யாசத்தின் ஒரு இலக்கணம் தான்.
நான்: பெரியவா நான் சன்யாசி ஆகிறேனோ இல்லையோ. எனக்கு தெரியாது ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையில் இருந்து நான் விடுபட விடுபட விவரிக்க முடியாத ஒரு இன்பத்தை அனுபவிக்கிறேன்.என்னை பிடித்த பிறப்பு இறப்பு சக்கரத்தில் இருந்து நான் விடுபடுவது போல இருக்கு பெரியவா.
பெரியவா: ஆன்ம நேயம் மனித நேயம் இதைப்பற்றி கொஞ்சம் சொல்லேன்.
நான்: ஆன்மீகத்தின் உச்சமே சக மனிதர்களை சக ஆத்மாவாக பார்ப்பதுதான் பெரியவா,. ஆன்மிகம் என்றாலே ஆன்மாவை பற்றி பேசுவதுதானே பெரியவா. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதை விடுத்து ஒரு ஆத்மாவாக பார்க்க வேண்டும்.
மனித உடலில் இருந்து ஒரு ஆத்மா பிரிந்து விட்டால் அந்த ஆத்மாவிற்கு நிறம் கிடையாது இன வேறுபாடு கிடையாது.குணம் கிடையாது. உடலை விட்டு பிரிந்த ஆத்மா இறைவனுக்கு சமமாகி விடுகிறது. எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான் பெரியவா.
பெரியவா: பரவாயில்லையேடா மழுப்பாம கொள்ளாம நறுக்கு தெறிச்சார்போல பதில் சொல்ராயே. இன்னும் கொஞ்சம் அங்கங்கே இன்னும் தெரிஞ்சுண்டு பேசலாம். நான் உனக்கு அதையெல்லாம் சொல்லித்தரேன்.
இன்னும் இந்த பதிவிலேயே நிறைய எழுத வேண்டும் போலெ இருக்கிறது.
ஆனால் என் விரல் வலியின் காரணமாகவும் பக்தர்களின் கர்மாக்களுக்கு மஹாபெரியவாளிடம் இருந்து ஒரு தீர்வு வாங்கி அவர்களுடைய கனத்த இதயத்தை லேசாக்கும் பணி நிறைய இருப்பதால் மீதியை அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னும் வேதத்தை பற்றியும் இந்து தர்மத்தை பற்றியும் ஒரு மனிதனின் வாழும் முறை பற்றியும் இன்னும் எவ்வளவோ கேள்விகளும் பதில்களும் வரும் பதிவுகளில் இடம் பெறப்போகின்றன. சற்றே காத்திருப்போம்.

இதயத்தில் தூய்மை இயற்கைக்கு இணையாகும்
எனக்கு வாழ்கை அனுபவ ஞானம் அதிகம்
இப்படித்தான் வாழவேண்டும் என்று
சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது
ஏன் தெரியுமா ? நான் வாழ்க்கையில் தோற்றே வாழ்ந்தேன்
எவன் மனதில் உள்ளது உள்ளபடி
வார்த்தைகள் பொங்கி வருகிறதோ
அவனே ஒரு நேர்மையாளன்
இயற்கைக்கு சமமானவன்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் இதயத்தில் வாழும்
GR Mama