சிவராத்திரிக்கு ஒரு சிறு விளக்கம்

சிவராத்திரிக்கு ஒரு சிறு விளக்கம்
சிவம் என்றால் ஜீவன் என்று பொருள். நம்முள் இருக்கும் சிவனை சிவனாகவே இந்த பிறவியின் இறுதியில் அழைத்து சென்று சிவ பெருமானிடம் ஒப்படைப்பதே இறைவன் நமக்கு இட்ட பணி.. இறைவனும் அதைத்தான் எதிர்பார்க்கிறான்..மரணத்தில் நம் உடலில் சிவம் இல்லையென்றால் சவம் என்று அழைக்கிறார்கள்.
சிவராத்திரியன்று சிவனை வழிபட்டால் ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஜென்மாந்திரத்து பாவங்கள் கழியும். சிவராத்திரி வழிபாடு நமக்கும் சிவனுக்கும் இருக்கும் இடை வெளியை குறைக்கும்..
சிவ பெருமான் கண்ணில் நாம் படுவோம். மோக்க்ஷம் நிச்சயம். அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போல் இறைவன் நம் எல்லோருக்கும் பொது மன்னிப்புக்காக ஒரு நாளை தேர்ந்தேடுத்து சிவனை நோக்கி முறையிட்டு வழிபட வைக்கிறான். பிறவியில்லாத நிலைக்கு ஏங்குகிறோம். இந்த சிவராத்திரியில் நம் ஏக்கம் தனியட்டும்.
பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் பிறவியில்லா மோக்க்ஷ நிலையை அடைவோம். இந்த சிவராத்திரி நம் எல்லோருக்குமே மன சாந்தியை கொடுக்கட்டும்..வாழும் நாளிலிலேயே சிவமாக வாழுவோம். சவமாக வாழ வேண்டாம். சிவமாக இருப்போம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா