Featured Posts

கொரோனா வைரஸ் - சரணாலய கட்டுப்பாடுகள்



சரணாலய பெரியவா

எங்களுக்கு அபயமளியுங்கள்

நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.



கொரோனா வைரஸ் ஒரு உலகத்தின் பேரிடர்

ஒவ்வொரு யுகத்திலும் இயற்கை மனிதகுலத்துக்கு ஒவ்வொரு சவாலை எடுத்து வீசும்.. வளர்ந்துவரும் விஞ்ஞானமும் மனிதனுக்கு துணை நின்று ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ளும்.. இயற்கையையும் இறைவனையும் மனிதன் புரிந்து கொள்ளாதவரை இறைவன் நமக்கு சவால்களை கொடுத்துக்கொண்டே இருப்பான்.. இது ஒரு அனுபவ உண்மை.


நம்முடைய இந்து தர்மம் அன்றில் இருந்து இன்று வரை சொல்லிவருவது தர்மம் நீதி நியாயம் அஹிம்சை மடி ஆச்சாரம் காமதேனு தெய்வமாக போற்றப்படும் பசுவை பாதுகாப்பது. இப்படி எவ்வளவோ நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை போதித்து வந்தது.


இன்றைய உண்மை நிலைமைகளை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இப்படி இறைவனையும் இயற்கையையும் பகைத்து கொண்டு வாழ்ந்தால் என்னவாகும் என்பதை பல விதங்களில் இறைவன் காட்டிக்கொண்டே இருக்கிறான். எந்த சவால்களையும் மனித குலம் சந்தித்து சமாளித்து வந்தது.


ஆனால் இன்று உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் என்பது இறைவன் நமக்கு சொல்லும் செய்தி என்ன?. தர்மப்படி வாழ்ந்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லாமல் நமக்கு இறைவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.


இன்னும் எவ்வளவோ எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த நொடியின் தேவை என்ன என்பதை பார்ப்போம்.


1 நம்முடைய ஆச்சாரப்படி இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லுங்கள். உலகமும் இன்று அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறது..


2 நம்முடைய ஆச்சாரப்படி மற்றவர்களை தொட்டு பேசாதீர்கள். எட்ட இருந்தே பேசுங்கள். இன்று இதைத்தான் உலகம் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது.


3 விலங்குகளை கொன்று வதம் செய்து உணவு உட்கொள்ளாதீர்கள். முக்கியமாக நம்முடைய தர்மப்படி நாம் தெய்வமாக வணங்கும் பசுக்களை கொன்று உணவாக உட்கொள்ளாதீர்கள். விளங்களிலேயே பசுக்களுக்கு மட்டும் தான் துக்கத்தை வெளிப்படுத்தும் உணர்வு இருக்கிறது. பசுவை கொன்று சாப்பிடுவது மனிதனை மனிதன் கொன்று சாப்பிடுவதற்கு சமமாகும்.


இன்று இந்த ஆட்கொல்லி வைரஸ் மனித குலத்தை தாக்கி அழிக்காமல் இருக்க அரசாங்கம் பல அறிவுரைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.


அரசாங்கத்துடன் கை கோர்த்து போராட வேண்டிய நேரம் இது.. இதன் தொடக்கமாக இன்று நள்ளிரவு முதல் சரணாலயத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதோ அந்த கட்டுப்பாடுகள் உங்களுக்காக.

சரணாலய கட்டுப்பாடுகள்: முன் பதிவு செய்தவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.


இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் இந்த மார்ச் மாதம் 31 ம் தேதி வரை அமலில் இருக்கும். தேவை பட்டால் இந்த கட்டுப்பாடுகளை நீடிக்கவும் செய்யலாம்.

என்னால் சரணாலயத்தில் பக்தர்களை நேரில் சந்திக்க வர இயலாது. என்னாலும் மற்றவர்களுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது. மற்றவர்களாலும் எனக்கு வந்து விடக்கூடாது.


பக்தர்களும் என் வீட்டிற்கு வருவதை நம் இருவரின் நலன் கருதி தவிர்க்கவும்.


பக்தர்கள் என்னை தாராளமாக கைபேசியில் அழைத்து பேசலாம். உங்களுக்கு தோன்றும்.. சாதாரணமாக அழைத்தாலே என்னுடன் பேசுவது என்பது மிகவும் கஷ்டம் என்று. உண்மை தான் ஆனால் உங்கள் நலன் கருதி காலை 10 .30 மணி முதல் மதியம் 12 .30 மணி வரை என்னை என் கைபேசியில் அழைக்கலாம். என் கைபேசி எண் 9092260103. நான் உங்களுடன் பேசுவேன்.


இதே போல் மாலை 5 .30 மணி முதல் இரவு 7 .30 மணி வரை என்னை தொடர்பு கொண்டு பேசலாம்.


ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் என்னை அழைக்கலாம். அப்பொழுது உங்களில் பலருக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நான் உங்களுடன் பேச முடியும். என்னிடம் பேசுபவர்கள் ஒரு நிமிட கால வரையறைக்குள் பேசவும். அப்பொழுதான் உங்கள் எல்லோருக்குமே என்னை தொடர்பு கொண்டு பேச முடியும்.

பக்தர்கள் எல்லோருமே சரணாலயத்தில் மஹாபெரியவாளை நமஸ்கரிக்க வழக்கம் போல் காலையிலும் மாலையிலும் வரலாம். சரணாலயத்தில் ஒரே சமயத்தில் கூட்டம் கூடாமல் அவ்வப்பொழுது கலைந்து சென்று விடவும். இந்த கட்டுப்பாடு கூட கூட உங்கள் நலன் கருதியே.


உங்களுக்கு என் அறிவுரைகள்



வெளியில் சாப்பிடாதீர்கள்.


பிரயாணங்களை தவிர்க்கவும்.


உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.


அசைவ உணவுகளை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். உங்கள் நாக்கில் இருக்க போகும் ருசி சில நொடிகள் மட்டுமே. ஆனால் உங்கள் வாழ்க்கை என்பது பல தலைமுறைகள்.


கைகளை அவ்வப்பொழுது கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக்கொடுங்கள்.


குளிர் பானங்களை தவிர்க்கவும்.


அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு நாம் கட்டுப்பாடுகளுடன் இருந்தால் இந்த வைரஸை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.


நம் எல்லோருடைய நலன் கருதி இந்த கட்டுப்பாடுகளையும் அறிவுரைகளையும் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் ஒத்துழைப்பை இரு கரம் கூப்பி நாடுகிறேன்.

மிகவும் அவசர அவசரமாக இந்த பதிவை வெளியிடுகிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள். இந்த தவறுகள் நம்மை ஒன்றும் செய்யாது. மற்ற செய்யக்கூடாத தவறுகள் நம் வாழ்க்கையையே விலையாக கேட்கும்.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்


உங்கள் GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square