Featured Posts

கொரோன- நம்மால் செய்ய முடிந்தது

என் வாழ்வில் மஹாபெரியவா-095


ஆயிரம் முறை அச்சப்பட்டு வாழ்வதை விட

ஒரே ஒரு முறை அச்சத்தை சந்தித்து விடுகிறோம்

உன் துணையுடன்.கொரோன- நம்மால் செய்ய முடிந்தது


நேற்று இரவு முழுவதும் மஹாபெரியவா என்னை தூங்க விடாமல் செய்து

இந்த ஆட்கொல்லி கொரோனவை சமாளிக்க என் மூலம் உங்களுக்கு சொல்லிய அறிவுரைகள்.மற்றவர்களின் நலன் காக்க

நொடிப்பொழுது வாழ்ந்து பாருங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் உங்களுக்கு புரியும்

இறைவனும் மனம் குளிர்ந்து போவான்


இந்த கொடுரூரமான ஆட்கொல்லி கிருமிகளுக்கு நான் காரணம் தேட முயற்சிக்கவில்லை. அதற்கு இது தருணமும் இல்லை. இத்தருணத்தின் தேவை இதற்கு என்ன நிவாரணம் என்பதே.


விஞஞான பூர்வமாக அரசாங்கமும் மருத்துவர்களும் தீர்வு தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இது லௌகீக ரீதியிலான முயற்சி. இப்பொழுது ஆன்மீக ரீதியிலான முயற்சியும் தேவை. இந்த இரண்டு முயற்சிகளும் நிச்சயம் நமக்கு ஒரு தீர்வை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இந்த யோசனை என் மனதில் எழுந்த பொழுது என் நினைவுக்கு வந்தது பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா தான். நான் குழம்பிய நிலையில் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு கை கொடுத்து உதவுவது மஹாபெரியவா தான்.


நேற்று இரவு முழுவதும் தூங்காமல் இந்த கொரோன பிரச்சனை குறித்தே என் மனம் சிந்தித்து கொண்டு இருந்தது. இதற்கு நடுவில் எத்தனை பேரின் அன்றாட பிரச்சனைகள் என் இதயத்தை கசக்கி புழிந்து கொண்டு இருந்தது.


என் கண்களில் கண்ணீர் பூத்தது. யாருக்காக அழுது கண்ணீர் விடுவது. இருந்தாலும் கண்ணீர் விட்டு அழுதேன்.. மஹாபெரியவாவளை நினைத்துக்கொண்டே காலை நான்கு மணி வருவதற்காக காத்திருந்தேன். தூங்காமலேயே விழித்திருந்தேன்.


அன்று நான் அனுபவித்த உறக்கமில்லா நீண்ட இரவு என் ஆத்மாவை மேலெழும்ப செய்தது. என் தூக்கமின்மை காணாமல் போனது. என் உடல் சோர்வு எதுவுமே எனக்கு தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய ஆன்மீக யுத்தத்திற்கு தயாரானேன்.


அதிகாலை நான்கு மணி. எழுந்தேன். காலைக்கடன்களை முடித்தேன்.நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு மஹாபெரியவா முன் நின்றேன்.


எனக்கு மஹாபெரியவாளிடம் பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை. என் கண்களில் வழிந்த கண்ணீர் ஆயிரம் சோக நிகழ்வுகளை மஹாபெரியவாளிடம் சொல்லி இருக்கவேண்டும்.


மஹாபெரியவாளே என் தலையை வருடிக்கொடுத்து கேட்டார். " என்னடா உன் மனசு ரொம்ப அழறதா? உனக்கு என்ன வேணும் சொல்லு.


இதோ சம்பாஷணையின் ஆரம்பம்:


நான்: பெரியவா என்ன கொடுமை . அழிவின் ஆரம்பம் தொடங்கி விட்டது. எவ்வளவு சாவுகள். இத்தனை பேருக்கும் ஆயுள் முடிந்து விட்டதா? ஏன் இந்த இரக்கமில்லா சாவுகள்.


மனிதனை மனிதன் பார்த்து நடுங்குகிறான். கொரோன தொற்று கொண்ட ஒருவனை பார்த்தால் முகத்தை மூடிக்கொண்டு கண் பார்வையில் இருந்தே காணாமல் போகிறான். நான் உங்களிடம் காரணம் தேடி வரவில்லை.


இந்த கொடுமைக்கு நிவாரணம் தேடி வந்தகிருகிறேன். நான் இன்னும் என்ன செய்ய வேணும் பெரியவா? போன உயிர் திரும்பாது என்பது எனக்கு தெரியும்.ஆனால் மேலும் உயிர்கள் போகாமல் இருக்க நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்கள் பெரியவா.


பெரியவா: இதோ பாருடா. உன் அழுகை உனக்காக இல்லை என்பது எனக்கு தெரியும்..உலகத்துக்காக நீ அழறே. ஒன்னு புரிஞ்சுக்கோ. உனக்கு ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அதை உலகத்துக்கு நீ சொல்லுவே. அந்த விஷயம் போய் சேரும். அதுக்காக இப்போ உன்கிட்டே சில விஷயங்களை சொல்லறேன்.


பகவான் ஒவ்வொரு மனிதனையும் குழந்தையாக இந்த பூலோகத்தில் பிறக்க வைக்கிறான். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது குழந்தை உள்ளத்துடன் தான் பிறக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு இணையான அந்தஸ்தில் இருக்கிறான். இருக்கிறது, ஏன் தெரியுமா? கள்ளம் கபடமற்ற உள்ளம் இறைவனின் சன்னிதானம் போல.


குழந்தை வளர வளர கலியின் தாக்கங்களால் கள்ளம் கபடங்களோடு வளர்கிறான். வாழ்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழும் பொழுது அவனுக்கு நியாய,ம் தர்மம் நீதி எதுவுமே கண்ணுக்கு தெரியறதில்லை.


தனக்கு எது சௌகரியமோ வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ அவைகளை எல்லாம் அடைய முற்சிக்கிறான். காட்டையும் அழிக்கிறான். வீட்டையும் அநீதியின் கூடாரமாக மாற்றி விடுகிறான்.


இறைவனுக்கு பிடிக்காததெல்லாம் இவனுக்கு இவனுக்கு பிடித்து விடுகிறது. தானே மிகவும் பலம் வாய்ந்தவன் என்று நினைத்து விடுகிறான். எல்லாமே சாஸ்வதம் என்று நினைத்து விடுகிறான். கஷ்டமா வாழ்க்கையின் இறுதி வரை கஷ்டமே என்று நினைத்து விடுகிறான். சந்தோஷமா வாழ்க்கையின் இறுதி வரை சந்தோஷமே என்று நினைத்து விடுகிறான்.


மற்றவர்கள் இவன் கண்ணுக்கு மனிதர்களாக தெரிவதில்லை. இவன் மட்டுமே மனிதன், இங்கு இவன் மட்டுமே வாழப்பிறந்தவன். ஒவ்வொரு மனிதனும் இந்த நினைவுகளிலேயே வாழ்வதால் ஒருவன் கண்களுக்கு மற்றவன் சக மனிதனாகவே தெரிவதில்லை .


ஒவ்வொரு மனிதனும் என் அங்கங்களில் ஒன்று. அவன் எனக்குள் அடக்கம். அவனுடைய ஆத்மா தான் நான். மனிதன் ஒவ்வொரு அக்கிரமங்களையும் செய்து வாழும் பொழுது எனக்கு வலிக்கறதுடா.


என்னையும் அறியாமல் நன் அழுது விடுகிறேன். என் கண்களில் கண்ணீர் வடிந்தால் இந்த உலகத்திற்கு அது நல்லதில்லை. என் சோகம் இயற்கையின் சீற்றமாக வெளிப்படுகிறது. பூலோகத்தில் பிரளயம் வருகிறது.இயற்கையின் சவாலை எதிர்கொள்ள முடியாமல் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதனின் சுபாவமே அதுதானேடா. நல்ல விஷயங்களுக்கு தானே காரணம். கெட்ட விஷயங்களின் பழியை அடுத்தவர்கள் மேல் சுமத்தி விடுகிறான்.


உனக்கு இப்போ புரியாதா? ஏன் இந்த அவலம் அப்படின்னு.. மனிதன் இதே போல் காட்டில் வாழும் விலங்குகளுக்கு நிகராக வாழ்ந்தால் இவனுக்கு பிறப்பின் காரணம் வாழும் நெறிமுறைகள் எல்லாம் எங்கே புரியப்போகிறது

.

நான்: பெரியவா எனக்கு புரியறது. நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் என் நெஞ்சம் பதறுகிறது. கண் முன்னாடி நிகழும் இந்த கொடூரமான சாவுகளுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் பெரியவா.


என்னால் முடிந்தவரை மனுஷாளிடம் எடுத்துண்டு போறேன். நல்லபடியா சொல்லி அவாளுக்கும் புரிய வைக்கிறேன். எனக்கு இதுவே கடைசி ஜென்மம் என்று சொல்லி விட்டிர்கள். எப்பொழுது என் கடைசி மூச்சு நிற்குமோ தெரியவில்லை.


இதை என் கடைசி ஆசையாக வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இந்த கொடுமையான சாவுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் பெரியவா. உங்களிடம் கெஞ்சி மன்றாடி கேட்கிறேன்.


உலகத்தையே பார்க்காத பிஞ்சு குழந்தைகள் என்ன பாவத்தை கண்டது. இன்றோ நாளையோ என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வயயோதிகர்கள் நொடிப்பொழுதும் வலித்து வலித்து சாகிறார்கள். போறும் பெரியவா இந்த கொடுமை. எனக்கு ஒரு வழி சொலுங்களோ


பெரியவா: சரிடா. நான் சொல்லறதை செய்.


நான் : சொல்லுங்கோ பெரியவா


பெரியவா: பகவான் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அவன் மனதை குளிர்விக்க உலகத்தில் உள்ள ஆத்மாக்களை திருந்தி வாழச்சொல்.


நான்: பெரியவா அது எப்படி சாத்தியம். உலகத்தையே நான் எப்படி திருத்த முடியும். நான் செய்யற மாதிரி ஏதாவது சொல்லுங்கோ.


பெரியவா: சரிடா நான் இப்போ சொல்லறதை பதில் கேள்வி கேட்காமல் எழுதிக்கோ அதன்படி செய். உலகமே இந்த கொடுமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளும்.


மொத்தம் நூத்தி நாலு பேரை தேர்நடுத்தக்கோ.. அதிகமா வந்தாலும் அவாளையும் சேர்த்துக்கோ.


சேர்ந்த அத்தனை பேரும் பகவான் எதிர்பார்க்கிற மாதிரி புனித ஆத்மாக்களாக வாழவேண்டும். ஒரு ஐந்து நாட்கள் இப்படி அவர்கள் வாழ வேண்டும். ஐந்து முக விளக்கேற்றி என் முன்னே வைக்க சொல். என் முன் அமர்ந்து இந்த புதிய வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள். இதன் படி நான் வாழப்போகிறேன். இந்த கொரோன கொடுமைக்கு ஒரு தீர்வு கொடுங்கள். என்று கேளுங்கள்.


புதிய வாழ்க்கையின் துவக்கம் 28 /3 /20 சனிக்கிழமை முதல் 1/4/ /20 புதன் கிழமை வரை மொத்தம் ஐந்து நாட்கள்.


இந்த புதிய வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அவர்கள் இந்துவாக இருக்க வேண்டும். பிராமணர் அல்லாதோரும் பெண்களும் காயத்ரி ஜெபம் சொல்ல வேண்டாம். பிராமணர் அல்லாதோர் திருமூலரின் திருமந்திரம் சொல்லலாம்.


மஹாபெரியவா நூற்றி நான்கு பேர் என்று சொன்னாலும் எவ்வளவு பேர் இந்த உலகத்தின் ஷேமத்திற்காக ஒரு ஐந்து நாட்கள் புதிய வாழ்கை வாழ வருகிறீர்களோ வாருங்கள். இந்த உலகமே ஒரு புதிய வாழ்கை அனுபத்தை அனுபவிக்கட்டும். இறைவனும் மகிழ்வான். வாழும் நாட்களிலேயே இங்கு சொர்கத்தை காண்போம்.


நாம் நம் குழந்தைகளுக்காக சேர்க்கும் பொன் பொருள் கார் பங்களாக்கள் இவைகளை விட இந்த பூமியை நல்ல வாழும் இடமாக கொடுத்து விட்டு செல்வது நம் கடமை. உங்கள் குழந்தைகளை முதலில் நல்ல மனிதர்களாக நல்லதை சொல்லிக்கொடுத்து நல்லவர்களாக வளருங்கள். தேவயானவைகள் தானே தேடி வரும்.


ஐந்து நாட்கள் வாழ்க்கையில் வாழும் வழிமுறைகள்


 1. மறந்தும் பொய் சொல்லாமல் இருக்கவேண்டும்

 2. அடுத்தவர்களை கெட்டவர்கள் என்று முத்திரை குத்தாமல் வாழவேண்டும்.

 3. இந்த ஐந்து நாட்களும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

 4. காலையில் இறைவனிடம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 5. குறைந்தது ஒரு சஹஸ்ர காயத்ரி செய்ய வேண்டும்.

 6. மூன்று நதிகளின் பெயர் மூன்று மலைகளின் பெயர் மூன்று தேவியரின் பெயர் இவர்களை தியானிக்க வேண்டும்.

 7. பெற்றோரின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு இந்த ஐந்து நாட்கள் மட்டுமாவது அவர்கள் எதிர்பார்ப்பின் படி நடந்து கொள்ளுங்கள்.

 8. பெற்றோர்கள் இல்லாதவர்கள் பெற்றோர்களை மனதில் தியானித்து ஒரு சொட்டு கண்ணீராவது விடுங்கள்.

 9. வீட்டில் அவச்சொற்களோ கடும் சொற்களையோ பேசாமல் இருக்க வேண்டும்.

 10. காலையில் எழுந்தவுடன் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க வேண்டும் வேண்டும்.

 11. ருத்ரம் சமகம் மற்றும் வேதம் ஒலிக்க வேண்டும்.

 12. மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்க வேண்டும்.

 13. காலையில் இருந்து இரவு வரை ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டும். எவ்வளவு முடிகிறதோ எழுதலாம்.

 14. காபி டீ போன்ற நவீன பானங்களை தவிர்ப்பது நல்லது.

 15. பிராமணர்கள் அல்லாதவர்கள் இந்த ஐந்து நாட்களும் அசைவ உணவை தவிர்க்கவும்.

 16. இந்த ஐந்து நாட்களும் உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்க வேண்டாம்.

 17. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நான்கு ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

 18. மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது உங்கள் பிரார்த்தனைகள் கேட்காமலேயே நிறைவேறும் என்பதை அனுபவித்து பாருங்கள்

 19. தினமும் இரண்டு பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

 20. ஐந்தாவது நாள் சேர்த்த அரிசியை சர்க்கரை பொங்கலாக செய்து மஹாபெரியவாளுக்கு நெய்வேத்தியம் செய்து வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கும் பிரசாதமாக விநியோகம் செய்யலாம்.

 21. இந்த புதிய வாழ்க்கை அனுபவத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கீழே கொடுத்துள்ள URL மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு விண்ணப்பம் இல்லாமல் செய்யும் பதிவுகள் ஏற்கப்பட மாட்டாது.


இந்த புதிய வாழ்க்கையில் தங்களை இணைத்து கொள்ளும் அனைவரின் பெயரும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும். மஹாபெரியவாளிடமும் இந்த பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்


ஆன்லைனில் உங்கள் விண்ணப்பம் வரும் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலைக்குள் வந்து சேர வேண்டும்.


URL IS GIVEN BELOW

https://www.periyavaarul.com/prayers

இந்த புனித ஆத்மாவின் புதிய பயிற்சிகள் மொத்தம் ஐந்து நாட்களுக்கு நடக்க வேண்டும். இந்த ஐந்து நாட்கள் இது போல் வாழ்ந்து விட்டால் வாழ்நாள் முழுவதுமே இப்படியே வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.


அவர்கள் அப்படியே வாழட்டும். மனது வெண்மையாக மாறினால் இறைவன் எல்லா கர்மாக்களையும் கழித்து எரித்து எல்லோரையும் தன் காலடியில் சேர்த்து கொள்வான்.


இந்த புதிய வாழ்கை முடியும் ஐந்தாவது நாளில் வாழ்ந்து முடித்த ஆத்மாவிற்கு ஒரு புதிய வாழ்கை அனுபவம் ஏற்படும். இறைவன் இவர்களுக்கு அனுபவ ரீதியிலான தரிசனம் கொடுப்பான்.. சொப்பனத்திலும் தரிசனம் கொடுப்பான்.


இந்த வாழ்க்கை உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து வாழுங்கள்.வரும் தலைமுறையும் இந்த சமுதாயமும் உங்களை என்றுமே மறக்காது. இந்த புதிய வாழ்க்கை பிடிக்கவில்லையா. பரவாயில்லை ஐந்து நாட்கள் வாழ்ந்த திருப்தியோடு மீதி நாட்களை வாழுங்கள்.


நம்மால் முடிந்தது லோக ஷேமத்திற்காக இந்த புதிய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே. காசா பணமா மனம் இருந்தால் போதுமே. கை கோர்த்து வாழ்ந்து இந்த உலகத்தை காப்போம் வாருங்கள்.


என்ன சொல்லப்பட்டது என்பது மனதை தொடும்

எப்படி சொல்லப்பட்டது என்பது இதயத்தை தொடும்

உங்கள் இதயத்தை என்

வார்த்தைகள் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்


GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
 • Facebook Basic Square
 • Twitter Basic Square
 • Google+ Basic Square