Featured Posts

நம் இருவரின் புனிதத்தில் விளையும் உறவு நம் உறவு

நம் இருவரின் புனிதத்தில் விளையும் உறவு நம் உறவு

என் இதயத்தில் என்றும் குடி கொண்டிருக்கும் சொந்தங்களே,

நம் இருவரின் புனிதத்தில் விளையும் உறவு நம் உறவு

என் இதயத்தில் என்றும் குடி கொண்டிருக்கும் சொந்தங்களே,

உங்கள் குறைகளை நான் கேட்டு

உங்கள் தலையை வருடி நான் சொல்லும்

சமாதான வார்த்தைகளை கேட்டு உங்கள் கண்கள்

சிந்தும் கண்ணீரின் ஈரத்திலும் என் விரல்களின்

ஸ்பரிசத்திலும் மலரும் புனிதத்தின் உறவு தான்

நம் இருவரின் உறவு

எப்படி உங்களுக்கு என்னை பார்க்காமல் ஒரு ஏக்கமோ அதே போல எனக்கும் உங்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஏமாற்றமும் கூட... என்ன செய்வது இன்றைய நிலைமை அப்படி.. நாம் இருவருமே நன்றாக இருந்தால் தான் நாம் இருவருமே ஒருவரை ஒருவர் நாளையாவது பார்த்துக்கொள்ள முடியும்.


நேற்று நம் இணையத்தளத்தில் வெளியான கொரோன பற்றிய பதிவை பார்த்திருப்பீர்கள். மஹாபெரியவா என்னிடம் "ஒரு மனிதனை பார்த்து சக மனிதன் பதறுவான். நடுங்குவான்.என்று சொன்னார். இதே வார்த்தைகளை என்னுடைய பதிவிலும் எழுதி இருந்தேன்.


மஹாபெரியவா என்னிடம் இதை சொல்லும் பொழுது நான் கூட சற்று பதறினேன். ஒரு மனிதனை பார்த்து இன்னொரு மனிதன் பதறுவான் என்றால் நிலைமை அவ்வளவு மோசமாகி விட்டதா.? என்று யோசித்தேன். மஹாபெரியவா இல்லாத ஒன்றை சொல்லமாட்டாரே. இருந்தும் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்தேன்.

இன்று நமது பிரதமர் பாரத நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கேட்கும் பொழுது நான் பதறி விட்டேன். உலக வரலாற்றில் இரண்டு உலக யுத்தங்களிலும் கூட இப்படி மொத்தமாக லாக்கவுட் இருந்ததில்லை. முதல் முறையாக நம்முடைய பிரதமர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.


நமது பிரதமரின் பேச்சு தயாரித்து கொடுத்து பேசிய பேக்கல்ல. அவருடைய உள்ளத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகள். அவர் பேசும்பொழுதே சொன்னது. நான் பாரத பிரதமராக உங்களிடம் பேசவில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக பேசுகிறேன் என்று ஆரம்பித்தார்.


தன்னுடைய தெளிவான சிந்தனை நாட்டு மக்கள் மேல் கொண்ட அக்கறை துணிச்சலான முடிவு அத்தனையும் வெளிப்படுத்தின அவர் பேச்சு. ஒரு யானைக்கு உண்டான பலமும் சிங்கத்திற்கு உண்டான துணிச்சலும் அவர் சொல்லிலும் செயலிலும் தெரிந்தது.


உங்களில் பலருக்கு பல அபிப்ராயங்கள் இருக்கலாம்.ஆனால் இந்த ஆட்கொல்லி வைரஸ் கொரோனவை கையாள்வதில் தனக்கு நிகர் தானே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார் நமது பிரதமர்.


உலக நாடுகளே வியக்கும் வண்ணம் இருக்கிறது நமது பிரதமரின் சொல்லும் செயலும். பாரதபிரதமர் பேசும் பொழுது அடுத்த 21 நாட்களுக்கு பாரத தேசம் மூடப்படுகிறது என்றார். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருக்க வேண்டும்.


சுய கட்டுப்பாடுகளுடன் உங்கள் வீட்டை சுற்றி லக்ஷ்மணன் சீதைக்கு கிழித்த கோடு போல ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று முடிவு செய்து கொள்ளுங்கள். என்றும் அறிவுரை சொன்னார்.


இந்த நொடி நாம் அனைவருமே நமது பிரதமரின் கரங்களை பலப்படுத்த வேண்டிய நேரம்..யாரும் வீட்டை விட்டு அடுத்த 21 நாட்களுக்கு வீ வெளியே வர வேண்டாம். நீங்கள் வெளியே வந்தால் உங்களுக்கு மட்டும் அது ஆபத்து இல்லை. உங்களால் பலருக்கும் ஆபத்து.


அரசின் ஆணைகளை மதிப்போம். செயல் படுவோம்.


இனி உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கும் மஹாபெரியவா குரு பூஜைக்கும் வருவோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படியுங்கள்.

நாளையில் இருந்து சரணாலயத்திற்கு தரிசனத்திற்காகவும் என்னை பார்க்கவும் வர வேண்டாம்.


என்னை காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இரவு ஏழு மணியில் இருந்து 8 .30 மணி வரையிலும் கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


என்னுடைய கைபேசி மிகவும் பிசியாக இருந்தால் தொடர்ந்து அழையுங்கள். ஒரு பக்தரிடம் பேசி முடித்தவுடன் நான் உங்களுடன் பேசுவேன்.


என்னுடைய கைபேசி எண் 9092260103 .

எண் கைபேசி கிடைக்கவில்லை என்றால் சவிதா அல்லது சௌம்யா அவர்களின் கைபேசியில் அழைக்கலாம் அவர்களின் எண்கள்” சௌம்யா 9677238786 . சவிதா கைபேசி எண் 9841633261 . நான் ஓய்வின்றி உங்கள் பிரச்சனைகளை கேட்டு மஹாபெரியவாளிடம் மன்றாடி உங்களுக்கு குரு பூஜை உத்தரவு வாங்கிக்கொடுக்கிறேன்.


சவிதா சௌம்யாவிடம் நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் அனைத்தும் இரவில் என்னிடம் வந்து விடும். நானும் மஹாபெரியவாளிடம் உத்தரவு வேண்டி உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்க முடியும்


நீங்கள் மஹாபெரியவளிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் பக்தியும் உங்களை நிச்சயம் காப்பாற்றும். என்னுடைய பிரார்த்தனையும் கூடவே இருக்கிறது. உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வும் மன சாந்தியும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


ஏற்கனவே மஹாபெரியவா குரு பூஜை செய்து பலன் அடைந்தவர்கள் தவறாமல் காலம் தாழ்த்தாமல் உங்கள் குரு பூஜை அனுபவங்களை ஒரு காணொளியாக தயாரித்து என்னுடைய வாட்ஸாப்ப் எண்ணுக்கோ அல்லது கீழ்கண்ட மின்னஞ்சலுக்கோ அனுப்பவும்.


gurumahimai@hotmail.com

Mahaperiyavamiracles@gmail.com

உங்கள் அனுபத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது நீங்கள் எவ்வளவு பேரின் மன இருளை விரட்டி அவர்கள் வீட்டில் அடுப்பு எரிய உதவுகிறீர்கள் என்பது ஒரு மகத்தான பணி. இந்த சோதனை நேரத்தில் உங்கள் அனுபவம் மற்றவர்கள் வீட்டில் அடுப்பு எரிய உதவட்டும். இது ஒன்று தான் மஹாபெரியவாளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு.


எனது எப்படியோ கைபேசியில் நம் தொடர்பு எப்பொழுதுமே இருக்கும்.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்


GR மாமா