மஹாபெரியவாளின் பாதையிலே -1 வெள்ளையான மனது இறைவனுக்கு பிடிக்கும்
மஹாபெரியவாளின் பாதையிலே -1
வெள்ளையான மனது இறைவனுக்கு பிடிக்கும்

மனது வெண்மையானால் இறைவனுக்கு பிடிக்கும்

மனிதனின் சிந்தனை தெளிவாக இருந்தால் செயல்களில் மனிதத்துவம் இருந்தால் பேச்சில் புனிதம் இருந்தால் அவன் மனது வெண்மையாகிவிடும். இந்த எல்லையில்லா பிரபஞ்சம் கூட அவனிடம் பேசும்.அவன் நினைத்தது நடக்கும்.
மனது வெள்ளையானால் இறைவனுக்கு அந்த மனது பிடிக்கும்.. கிருஷ்ணர் வெண்ணை திருடுகிறர் என்றால் . அவருக்கு வெண்ணை பிடிக்குமென்றா திருடுகிறார். நிச்சயம் இல்லை.
வெள்ளையான மனது அவருக்கு பிடிக்கும். இப்படிப்பட்ட மனிதன் புனிதயத்தை அடைந்து விடுகிறான். இவனுக்கு மந்திரங்கள் தேவை இல்லை. இறை வழிபாடு தேவையில்லை. ஜென்மாந்திரத்து கர்மாக்கள் எரிக்கப்படும்.இவனுக்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. நாமும் முயன்று பார்க்கலாமே.
காசா பணமா மனசு தானே வேண்டும்
அதுதான் உங்களிடம் இருக்கிறதே
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா