மஹாபெரியவாளின் பாதையிலே- 2 நீங்கள் நல்லவரா கெட்டவரா?

மஹாபெரியவாளின் பாதையிலே- 2
நீங்கள் நல்லவரா கெட்டவரா?
உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.அடுத்தவரை கெட்டவர் என்று,மிகவும் எளிதாக முத்திரை குத்தி விடுகிறோம். அடுத்தவரை கெட்டவர் என்று நீங்கள் முத்திரை குத்தவேண்டுமானால்,
நீங்கள் எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும்..கெட்டவர் என்று அடுத்தவரை சொல்வதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.,மற்றவர்களை கெட்டவர் என்று வகை படுத்தும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு நல்லவரா ?
ஒருவர் உங்கள் எதிரில் இல்லாதபோது அவர்களை கெட்டவர் என்று நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் என்ன செய்ய முடியும்.? தங்களை எப்படி காத்துக்கொள்ள முடியும்.ஒரு நிராயுத பணியாயை தாக்கிய பாவத்திற்கு நீங்கள் உள்ளாவீர்கள். செய்த பாவம் போதாதா? இன்னும் ஏதற்கு பாவங்கள். சிந்தியுங்கள். செயல் பட்டு வாழுங்கள்.
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா