சார்வரி வருஷ நல் வாழ்த்துக்கள்
சரணாலய பெரியவா

சார்வரி வருஷ நல் வாழ்த்துக்கள்
GR மாமாவின் சார்வரி வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள்
மஹாபெரியவா அருளாலும் ஆசிகளாலும் இந்த ஆண்டின் துவக்கமே ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. உலகமே ஒரு புறம் கொரோன தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதே சமயத்தில் மக்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து வேற்றுமையில் ஒற்றுமையாக கை கோர்த்து நாங்கள் ஓரினம் என்பதை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள்.
ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை தாண்டி நிறங்களை கடந்து நாடுகளை கடந்து படிப்பறிவை கடந்து மனித குலமே இன்று ஒன்று பட்டு நிற்கிறது.இந்த சார்வரி வருடம் நமக்கு எல்லாமே ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது. உழைப்பு. ஒன்றையே அடிப்படை விஷயமாக கொண்டு மனித குலமே ஒன்று பட்டு நிற்கும் நாள் இதோ வந்துவிட்டது
செழுமை ஆரோக்கியம் நல்ல சீர்பட்ட சமுதாயம் ஆரோக்கியமான சிந்தனைகள் நல்ல செயல்கள் எங்கும் இறை நம்பிக்கை எதிலும் இறைவன் இவைகளை உள்ளடக்கிய சிறப்பான எதிர்காலம் இன்று இந்த தமிழ் புது வருஷத்தில் உதயமாகி விட்டது.
நாளைய சமுதாயத்திற்கு இந்த உலகை ஒரு நல்ல வாழும் இடமாக மாற்றி அமைத்து கொடுப்போம். நம்முடைய கவலைகள் பொருளாதார நெருக்கடி உறவில் விரிசல் நம்மை ஆட்கொண்டுள்ள நோய் இன்னும் சொல்ல முடியாத கவலைகள் இவைகள் அனைத்தும் காற்றில் கரைந்து போகட்டும்.
ஆரோக்கியமான சமுதாயம் சீரடைந்த கலாச்சாரம் ஐஸ்வர்ய வளமை நல்ல உறவுகள் இவைகள் அனைத்தும் நமக்கு வாய்க்க பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா நமக்கு அருள் புரியட்டும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்
உங்கள் GR மாமா