Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 3


வாழ்கை அறிவு பூர்வமானதா? உணர்வு பூர்வமானதா?

மனிதன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான்.

இந்த பூமியில் இருக்கும் உயிரினங்களில் மிகவும் உயர்வான உயிரினம் மனிதன்.. மனிதனின் உயர்வு இரண்டு விஷயங்களில் வெளிப்படுகின்றன. ஒன்று உணர்வு மற்றொன்று அறிவு.. மனிதன் உணர்வு பூர்வமாக வாழ்ந்தால் வாழ்க்கையில் அமைதி இருக்கும். எப்பொழுதுமே உணர்வும் ஆத்மாவும் இணைந்து செயல் படும்.

அறிவு பூர்வமான வாழ்கை காரண காரியங்களை தேடும்.. உணர்வு அறிவுக்கு புரியாது.. அறிவும் மனமும் ஒன்றிணைந்து செயல் படும்.. எப்பொழுதுமே அறிவுக்கும் மூளைக்கும் தொடர்பு.

அறிவு அதர்மத்திற்கு துணை போகும். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற துடிப்பால் இலக்கை அடைய முயற்சிக்கும். பாவம் செய்யக்கூட தூண்டும்.

உணர்வு உங்களை பாவம் செய்ய விடாது. உணர்வுக்கும் இதயத்திற்கும் தொடர்பு.. நீங்கள் எடுக்கும் முடிவுகள் மனிதத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எப்பொழுதுமே உணர்ந்து வாழுங்கள்.

உங்களை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் மூளையை கேளுங்கள். மற்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் இதயத்தை கேளுங்கள். உங்கள் வாழ்க்கை சலனமற்றதாக இருக்கும்..

உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts