மஹாபெரியவாளின் பாதையிலே- 4

புகழை நீங்கள் துரத்தாதீர்கள் புகழ் உங்களை துரத்த வேண்டும்
மனிதன் வாழ்க்கையில் புகழுக்கு பின்னால் ஓடுகிறான்.புகழ் எப்படி வருகிறது.யார் கொடுக்கிறார்? ஏன் கொடுக்கிறார்? எதற்கு கொடுக்கப்படுகிறது?
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவத்தை கொடுக்கிறான். அந்த தனித்துவத்தின் மூலம் வாழ்க்கையில் மனிதன் புகழ் பெற துவங்குகிறான்.
உதாரணமாக , ஒருவனுக்கு இறைவன் அழகாக பேசும் அளவிற்கு ஞானத்தை கொடுப்பான். அவனும் நன்றாக பேசி பல இடங்களில் நல்ல பெயர் பெற்றிருப்பான். .அவனுக்கு புகழும் வந்து சேரும்.
இப்பொழுதான் இறைவன் அவனை உற்று நோக்குவான். கொடுத்த ஞானத்தை வைத்து கொண்டு புகழ் தேடுகிறான். கிடைத்த புகழை தலைக்கு கொண்டு போகிறானா? இல்லை இதயத்திற்கு கொண்டு செல்கிறானா? என்று பார்ப்பான்.
சரி இறைவன் என்ன தான் எதிர்பார்க்கிறான்? புகழ் கிடைத்தவுடன் தலை பெருத்து மற்றவர்களை உதாசீன படுத்துகிறானா?இல்லை புகழை பற்றி கவலை படாமல் மனிதாபிமானத்தோடு மற்றவர்களை நாடுகிறானா? என்று பார்ப்பான்.
புகழ் என்பது உங்களிடம் இருந்து வெளிப்படுவதல்ல.இறைவன் கொடுத்த ஞானத்தால் உங்கள் மூலம் வெளிப்படுகிறது. உங்களுக்கு கிடைக்கும் புகழ் உங்களுடையது அல்ல. அது இறைவனுக்கு சேர்ந்தது. உங்களைப்பற்றி நீங்களே பேசக்கூடாது. .உங்கள் பேச்சை அனுபவித்து உலகம் பேச வேண்டும்.
உலகம் உங்களை பற்றி சிலாகித்து பேசவேண்டும்.அப்பொழுதும் புகழை உதறித்தள்ளும் மன பக்குவம் வேண்டும். புகழ் அனைத்தையும் தலையில் சுமந்து கொண்டு மற்றவர்களை அணுகினால் நீங்கள் அரை வேக்காட்டு பைத்தியம் என்பதை நீங்களே நிலை நாட்டி விடுவீர்கள்.
நொடிப்பொழுதும் சிந்தித்து வாழுங்கள்
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா