Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 10


குரு கடாக்க்ஷம்.

உங்களுக்கு இறைவனை அடைவதே வாழ்க்கையின் லக்க்ஷியம் இறைவனுக்கு உங்களை அடைவதே தன்னுடைய லக்க்ஷியம்

வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எல்லோருக்குமே கிடைக்கும் ஒரு பாக்கியம்..

ஒருவன் வாழ்க்கையில் ஐம்பது வயது வரை வாழ்கிறேன் என்ற பெயரில் அடிபட்டு அவமானப்பட்டு பொருட்களை இழந்து வாழ்க்கையே முடிந்து விட்டது என்ன எண்ணி தற்கொலைக்கு முயலும் தருணத்தில் ஒரு ஞானம் வெளிப்படும்.

இத்தனை நாட்கள் வாழ்கை என்ற பெயரில் வாழ்ந்த வாழ்கை வாழ்க்கையே இல்லை என்பதை உணர்ந்து தன்னுடைய வாழ்கை பயணத்தை இறைவனை நோக்கி செலுத்தினால் நீங்கள் நிச்சயம் கரையேறி விடுவீர்கள்.

எப்பொழுது உங்கள் தவறுகளை தவறு என்பதை உணர்ந்து இறைவன் தான் உங்கள் வாழ்க்கையின் லக்க்ஷியம் என்பதை உணர்ந்து உங்கள் வாழ்கை பயணத்தை இறைவனை நோக்கி செலுத்துகிறீர்களோ அப்பொழுதே உங்கள் மனது புனித வெண்மையாக மாறிவிடும்.உங்கள் மனது வெண்மையாகி விட்டால் அந்த வெண்மை இறைவனுக்கு தெரிந்து விடும்.

ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனின் சொத்து. இறைவன் உடனே உங்கள் மனதை திருடி உங்களை தன்னுடன் இணைத்துக்கொள்வான்.

கிருஷ்ணர் வெண்ணை திருடுவது தனக்கு வெண்ணை பிடிக்கும் என்பதற்காகவா? நிச்சயம் இல்லை. வெள்ளை மனது கிருஷ்ணருக்கு பிடிக்கும். திருடி விடுகிறான். இந்த தாத்பர்யத்தை உணருங்கள்.மனதை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருங்கள்.

மனிதனின் லட்சியமும் அதுதானே. இறைவன் எப்பொழுதும் தன் லக்க்ஷியத்தில் இருந்து மாறுவதே இல்லை. ஆனால் மனிதன் தான் ஒவ்வொரு பிறவியிலும் லக்க்ஷியத்தை மறந்து தன்னையும் ஏமாற்றிக்கொண்டு இறைவனையும் ஏமாற்றி விடுகிறான்.

இதனால் தான் இறைவன் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஹார்த்த ரூபத்தில் ஏதாவது ஒரு ஜென்மத்தில் தன் லக்க்ஷியத்தை உணர்ந்து இவன் திருந்தி தன்னிடம் வந்து விட மாட்டானா என்று ஏக்கத்துடன் காத்துக்கொண்டே இருக்கிறான்.

இப்பொழுது வாழ்க்கையின் யதார்த்தத்துக்கு வருவோம்.. நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்திலேயே இருக்கிறீர்கள் என்றால் இறைவன் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை கொடுக்கப்போகிறான் என்று அர்த்தம்.

இந்த ஞானம் எல்லோருக்குமே கிடைக்கும் ஒரு பாக்கியம். பிராப்தம் உள்ளவர்கள் இந்த ஞானத்தை அங்கீகரித்து வாழ்கை பயணத்தை மாற்றிக்கொள்வார்கள். பிராப்தம் இல்லாதவர்கள் வழக்கம் போல் வாழ்ந்து விட்டு அடுத்த பிறவிக்கு ஒரு கர்பத்தை தேடி அலைவார்கள்.

இறைவனை அடையும் உங்கள் லக்க்ஷியத்தில் குருவின் பங்கு மிகவும் அவசியம்.உங்களை லௌகீக வாழ்க்கையில் வாழவைக்கும் அதே நேரத்தில் உங்களுடைய இறை லக்க்ஷியத்தை நினைவு படுத்திக்கொண்டே இருப்பார் குரு..

உங்களை எப்பொழுதும் சத் சங்க சம்பந்தம் இருக்கும் படி பார்த்துக்கொள்வார். ஒரு நல்ல குருவை கண்டுபிடித்து அவரை உங்கள் வாழ்கை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள்.இறைவனை அடையும் உங்கள் லக்க்ஷியம் நிச்சயம் நிறைவேறும்.

உங்களுக்கான குருவை எப்படி காண்பது?

எவர் ஒருவரின் சன்னிதானத்தில் உங்கள் மனது அமைதி அடைந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறதோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவரை பார்த்தவுடன் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நம்பிக்கை பிறக்கிறதோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவர் சன்னிதானத்தில் உங்கள் தேடுதலும் மன சஞ்சலமும் அடங்குகிறதோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவர் சன்னிதானத்தில் உங்கள் ஆத்மா மேம்பட்டு மனசு அடங்குகிறதோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவர் சன்னிதானத்தில் உங்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறதோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவர் தனக்கு கிடைக்கின்ற பெருமைகளையும் பரிசுப்பொருள்களையும் உதறுகிறாரோ அவரே உங்கள் குரு.

எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கவலை படாமல் பிறருடைய வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொள்கிறாரோ அவரே உங்கள் குரு.

இன்னும் எத்தனையோ விஷயங்களை நீங்கள் உணரலாம். ஒரு குருவின் பங்கு உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. எந்த நொடியிலும் தடம் புரண்டு விடும் வாழ்க்கை காப்பாற்றப்படும்.என்றும் தர்மப்படி வாழ்வீர்கள். குருவுண்டு பயமில்லை. இதை மறந்து விடாதீர்கள்.மஹாபெரியவாளை குரு ஸ்தானத்தில் இருந்து அனுபவித்த அனுபவத்தையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குரு இல்லாதவன் வாழ்க்கை எங்கே தொடங்கும்? எங்கே எவ்விதம் முடியும் என்பது தெரியாது.

குரு கடாக்க்ஷம் நாளையும் தொடரும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square