Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 11


குருவின் கடாக்க்ஷம் - உளி வலியென விழுந்தால் கற்கள் சிற்பம் ஆகாது.

ஒரு குரு உங்களை கையில் எடுத்து உங்களை சிற்பமாக செதுக்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும் வலியை வார்த்தைகளால் வடிக்க இயலாது. உளி வலியென விழுந்தால் கற்கள் சிற்பமாகுமா.

குரு உங்களை செதுக்குவது உங்களுக்கு வலியை கொடுக்க வேண்டும் என்பதற்காக இல்லை. உங்களை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றி தன்னுடைய காலத்திற்கு பிறகு உங்களை சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் விதையாக மாற்றும் முயற்சியே இது.. ஒரு உண்மையான குரு தன்னுடைய சீடர்களை தன்னை விட சில அங்குலமாவது உயரத்தில் வைத்து விட்டு தான் சித்தி அடைவார்கள்.

அதே போல் குருவின் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்த விட்டு குருவின் உயரத்தை அடைய முயற்சிக்காமல் நீங்கள் உங்கள் மனம் போனபடி வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களை அறியாமலேயே குரு தன்னுடைய கையை உங்கள் மேல் இருந்து எடுத்து விடுவார். அப்பொழுது உங்கள் இழப்பை நீங்களே தாங்க மாடீர்கள்.

ஒரு குருவின் நிழலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உலகம் பார்க்கும் பொழுது உங்களை குருவின் பிரதி பிம்பமாகவே உலகம் பார்க்கும். ஆனால் உங்கள் செயல்கள் அனைத்தும் உங்கள் குருவிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல்களாக இருந்தால் அதை குருவினால் தாங்க முடியாது.

ஆண்டவா என்ன கொடுமை இது என்று அவர் கண்ணீர் வடித்தால் இந்த பிரபஞ்சமும் இயற்கையும் உங்களை குருவிடம் அணுகவே விடாது. நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் குருவிற்கு தெரியும்.ஆனால் எதையும் வெளியில் சொல்ல மாட்டார். தனக்கு எதுவும் தெரியாதது போலவே இருப்பார். மனதளவில் மிகவும் வருத்தப்படுவர்.

இதுவும் நீங்கள் உங்களை அறியாமலேயே செய்யும் குரு துரோகம். .குரு முதலில் சொல்லி பார்ப்பார். பிறகு வாழ்ந்து காட்டுவார். அப்பவும் உங்களுக்கு ஞானம் பிறக்கவில்லை என்றால் தன்னுடைய சக்தியை உங்களுக்காக செலவழிப்பதை நிறுத்தி விடுவார்.

அந்த சமயத்தில் வேறொரு நல்ல ஆத்மாவை குரு தேட ஆரம்பித்து விடுவார். பிறகு குருவின் பார்வை உங்கள் மேல் விழவே விழாது. அப்பொழுது உங்களுக்குள் ஏற்படும் வலியை உங்களால் தாங்க முடியாது.

குரு உங்களை எப்படி தேர்ந்தேடுத்தார்? ஏன் தேர்ந்தேடுத்தார் என்பது குருவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது புரியாமல், தான் ஒரு பரிசுத்தமான ஆத்மா.என்று மார்தட்டிக்கொண்டு பெருமையுடன் உலா வந்தாலோ அல்லது குரு ஒரு கொடுமைக்காரர் என்று அழுது ஆர்ப்பரித்து குருவின் மேல் கோபம் கொண்டீர்களேயானால் நஷ்டம் குருவிற்கு அல்ல உங்களுக்கு தான். . .

உங்களை ஒரு குரு செதுக்கும் பொழுது பல விஷயங்களை சொல்லிக்கொடுப்பார். மனித நேயம், நான் என்ற அகம்பாவத்தை அறுத்து எரியும் வழி முறைகள், தற்பெருமைகளை பேசிக்கொண்டு காலத்தை வீண்சக்காமல் எப்படி உபயோகமாக செலவழிப்பது சரீர சுத்தி ஆத்ம சுத்தி இன்னும் பல குருகுல படங்கள் இதில் அடங்கும். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

குருவின் கடாக்க்ஷம் அடுத்த பதிவிலும் தொடரும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square