top of page
Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 14


தர்மத்தை மறந்தோம்

தர்மம் நம்மை மறந்து விட்டது.

என்னுடைய இந்த தர்மம் பற்றிய பதிவுகள் பெரும்பாலான இன்றைய தர்ம நெறிமுறைகளை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற அல்லது வாழப்போகும் எதிர்கால சந்ததியினருக்கு மட்டுமே.

இன்றும் நம்முடைய தர்மங்கள் வாழ்கை நெற்றிமுறைகளின் படி வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதி விலக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் ஆசிகளும் வாழ்த்துக்களும். விதி விலக்கு எல்லாம் விதியாகி விடாதே. ஆகவே எல்லோருக்குமே பொதுவாக சமுதாய நன்மைக்காக இந்த தொடரை துவங்குகிறேன்..

கடந்த பல ஆண்டுகளாக மஹாபெரியவா காண்பித்த பாதையில் பயணித்து கொண்டிருக்கும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இந்த தொடரின் அடுத்த அடியில் கால் வைக்கிறேன். உங்கள் நன்மைக்காக இதுதான் இன்றைய வாழ்க்கை முறை

இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கையே ஒரு போராட்டமாக மாறி விட்டது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்ற முயற்சியில் பெற்றோர்களின் அனுமதியோடு திருமணத்திற்கு முன்பே ஒரு நாள் பூராவும் வெளியில் அலைந்து விட்டு மாலையில் எங்களால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வேறு ஒரு துணையை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்குள் என்ன புரிந்து கொள்ள முடியுமோ தெரியவில்லை. இன்றைய விபரீதங்களில் இதுவும் ஒன்று.

புரிந்து கொண்ட ஒரு சில தம்பதிகள் திருமணத்திற்கு சம்மதித்து கல்யாண நாளும் வந்து விடுகிறது. திருமணமும் நடந்து விடுகிறது. திருமணம் முடிந்து நலங்கு ஈரம் காய்வதற்குள் தம்பதிகள் இருவருமே விவாக ரத்துக்கு தயாராகி விடுகிறார்கள்.. பல லக்ஷம் ரூபாய் செலவழித்து திருமணம் நடத்திய பெற்றோர்களுக்கு ஏமாற்றம். .திருமண வீட்டிலேயே ஒப்பாரி ஓலம்.

அப்படியே திருமணம் ஆகி சில ஆண்டுகள் வாழ்ந்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டால் பிறகு அந்த குழந்தையயை வைத்துக்கொண்டு இருவரும் பாசத்தை விலை பேசுகிறார்கள். குடும்பமே சீரழிந்து போகிறது.

இந்த கூத்தையெல்லாம் பார்த்து வளரும் குழந்தை மனதில் விஷ விதை விதைக்கப்படுகிறது. இந்த மாதிரி மனித நேயமே இல்லாத சூழ் நிலையில் வளரும் குழந்தையிடம் இருந்து எப்படி மனித நேயத்தை எதிர்பார்க்க முடியும் சொல்லுங்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? நம்முடைய வாழ்க்கை நெறிமுறைகள் தர்மங்கள் இவைகள் எனதயுமே கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டு விட்டு மேலை நாட்டு நாகரீகத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கை நடத்துகிறோம்.. விளைவுகள் ஒன்றா இரண்டா. மேலே கேளுங்கள். நாம் என்னென்ன தொலைத்தோம் என்பது உங்களுக்கே புரியும்.

 1. இலை மறை காயாக இருக்க வேண்டிய தாம்பத்தியம் மேடை போட்டு காட்டும் காட்சி பொருளாக மாறிவிட்டது.

 2. கழுத்தில் தொங்க வேண்டிய தாலி சுவற்றில் ஆணியில் தொங்குகிறது.

 3. இறைவன் கொடுக்கும் குழந்தையை வாழ்க்கை திட்டமிடுதல் என்ற பெயரில் தள்ளிபோடுகிறோம். பிறகு பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் முடிவு செய்யும் பொழுது இறைவன் வேறு விதமாக முடிவை செய்து விடுகிறான்.

 4. உங்களுக்கு குழந்தையே இல்லை என்ற நிலையில். நீங்கள் மருத்துவரிடம் சென்று பல லக்ஷங்கள் செலவழித்து செயற்கை முறையில் முயல்கிறீர்கள். பத்தில் ஒருவருக்கோ இவருக்கோ குழந்தை பிறக்கிறது.

 5. குறை பாடுள்ள குழந்தை பிறந்து விட்டால் குறைபாடை சரி செய்து கிடைத்ததை ஏற்றுக்கொண்டு மனதில் சந்தோஷத்தை முற்றிலுமாக இழந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம்..

 6. பெரும்பாலும் குறை பாடுள்ள குழந்தை பிறந்து விட்டால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து விடுகிறது. இருவருக்குமே பொறுமை இல்லை.

 7. உங்கள் வயிற்றில் வளர வேண்டிய குழந்தை யாரோ ஒரு வாடகை தாயின் வயிற்றில் வளர்கிறது.

 8. இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? உங்களுக்கு நாள் நக்ஷ்த்ரம் பார்த்து ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் நடக்கிறது.

 9. எங்கோ பிறந்த உங்கள் இருவரையும் இணைத்து திருமணம் நடத்தி குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள். பிறகு உங்களுக்குள் உருவாக வேண்டிய குழந்தை யாரோ ஒருவரின் உதவியுடன் உருவாகி யாரோ ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து பிரசவமாகிறது.

 10. இங்கு பாசம் எப்படி இருக்கும்? பந்தம் எப்படி இருக்கும்..? குடும்பம் என்ற அமைப்பே சிதறி விடுகிறதே. இறைவனும் என்னதான் செய்வான்.? எவ்வளவுதான் பொறுப்பான?

 11. பணம் பணம் என்று அலைந்து வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து இறைவனையும் பகைத்துக்கொண்டு வாழ்கிறீர்கள். ஒரு நாள் விழித்துக்கொள்ளும் பொழுது வாழக்கையில் எல்லாமே உங்கள் கையை விட்டு சென்றிருக்கும். பணமும் கையில் இல்லாது வாழ்கை துணையையும் தொலைத்து இறுதியில் வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கிறீர்கள்.

ஏதையோ சாதிக்க வானத்தில் பறந்து ஒரு சமயத்தில் இறக்கைகள் வலுவிழந்து கீழே ரத்தமும் சதையுமாக விழுந்து விடுகிறீர்கள்.

உங்கள் பெற்றோர்கள் உங்களுடன் இருக்க மாட்டார்கள்.பெற்றோர்களை தான் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறீர்களே. அல்லது இந்த அவலங்களையும் ஏமாற்றங்களையும் தங்க முடியாமல் இறந்து போய் இருப்பார்கள் ஞானம் பெற்று வாழவேண்டிய நாற்பது வயதில் ஞானம் அற்று அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் இறைவனை சாடுவீர்கள்.

நமக்குத்தான் நம்முடைய குற்றம் குறைகள் கண்ணுக்கு தெரியாதே. அடுத்தவரை சாடுவதே நமக்கு பழக்கமாகி விட்ட ஒன்று. ஆயிற்றே

கோவிலை போல இருக்க வேண்டிய குடும்பம் மயான அமைதி கொண்ட சுடுகாடாக மாறிவிடுகிறது.

நம்முடைய நெறிமுறைகளை மறந்து வாழ்கை தர்மத்தை தொலைத்து விட்டு கடனே என்று வாழ்ந்து இறந்து போகிறோம்.. எல்லா பருவத்தையும் தொலைத்துவிட்டு அர்த்தமற்ற வாழ்கை வாழ்கிறோம்.

ஆண் தர்மம் பெண் தர்மம் என்று எவ்வளவோ உள்ளது. அவைகள் ஏதையுமே இன்று கடைப்பிக்காமல் வாழ்கிறார்கள்.

நெற்றில் குங்குமம் அழிந்து விட்டது. தாலியை கழற்றி ஆணியில் மாட்டிவிடுவது. அல்லது தலையணையின் அடியில் வைத்து விடுவது. மஞ்சள் கயிற்றில் இருக்க வேண்டிய தாலியை கழற்றி தங்கத்தால் ஆனா கொடியில் மாட்டி போட்டுக்கொள்வது.

இல்லத்தில் ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றாமல் நெய்வேத்தியம் செய்யாமல் தங்களது வயிற்றை நிரப்பி கொள்ளும் உணவு. விஷமாகும். அது மகா பாவம். பாவ உருண்டைகளை விழுங்குவது போல ஆகும்.

இது இப்படியே போனால் எதிர்காலம் இருண்ட காலமாக என் கண்ணில் தெரிகிறது. வரும் தலை முறையினரிடம் நாம் நம்முடைய கலாச்சாரங்கள் எதையுமே எதிர்பார்க்க முடியாதே!. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். பணம் காசு பெரும் அளவில் சேர்த்து வைத்து சென்றால் இழந்த தரமங்களையும் வாழ்கை நெறி முறைகளையும் திரும்ப கொண்டு வர முடியுமா?

காட்டில் வாழும் விலங்குகள் என்ன செய்யும் என்று நமக்கு தெரியும். பாம்பு கொத்தும் புலி பாயும் சிங்கம் கர்ஜிக்கும் யானை பிளிறும். கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள் மனிதன் என்ன செய்வான் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா? மனிதன் விலங்குகளுக்கும் கீழாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது இன்னுமா உங்களுக்கு தெரியவில்லை.

நாம் நம்முடைய பழம்பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை நாள் வாழ முடியும் என்று நினைக்கிறீர்கள்? பழையதை தூக்கி எரிந்து விடலாம் ஆனால் பழமையை தூக்கி எரிய முடியுமா?

இன்று நாம் விழித்து கொள்ளாமல் இருந்து விட்டால் நாளைய சமுதாயத்தை காப்பாற்ற வாய்ப்பே இல்லாமல் போய் விடும். சிந்திப்போம் செயல் படுவோம்

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மஹாபெரியவா எனக்கு கொடுத்த உத்தரவு மறந்து போன இந்து தர்மங்களை திரும்பவும் இன்றைய பெற்றோர்கள் மனதிலும் வாலிபர்கள் மனதில் பதியும் படியும் எழுது. என்றார்..

நானும் சரி பெரியவா எழுதறேன் என்று சொல்லி மஹாபெரியவா பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கிறேன். முதலில் குங்குமத்தின் மகிமைகள் பற்றி எழுதுகிறேன். அது எப்படி தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது என்பதை பற்றியெல்லாம் உங்களுக்கு எழுதி சமர்ப்பிக்கிறேன் மஹாபெரியவா இந்த தலைமுறையை காப்பாற்றுடா. முடிஞ்ச வரைக்கும் எழுது.. உன் விரல் வலியை பார்க்காதே.. உன் ஆயுள் முடியும் வரை எழுது. உன்னை சுற்றி ஒரு பத்து பேராவது நீ சொல்வதையெல்லாம் உணர்ந்து வாழட்டும். அவர்களை பார்த்து இன்னும் பத்து பேர் திருந்தி வாழட்டும். எழுதுடா என்று எனக்கு கட்டளையிட்டார். நான் எழுதுகிறேன்..

ஏற்றுக்கொண்டு திருந்தி வாழ்ந்தால் உங்களுக்கும் நல்லது. சமுதாயத்திற்கும் நல்லது. நாளை குங்குமத்தின் மகிமைகளையும் அது எப்படி மங்களகரமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது என்பதை பற்றியும் எழுதுகிறேன்.

ஒவ்வொரு நாளும் நாம் இத்தனை நாளும் மறந்து போன நம் தர்மங்கள் வாழ்கை நெறிமுறைகள் இவைகளை பற்றி எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நாம் இருவரும் கை கோர்த்து சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை மீட்டெடுப்போம்.

நான் மஹாபெரியவா பாதையில் பயணிக்கும் ஒரு பயணி

நீங்களும் என்னோடு கை கோர்த்து என்னுடன் பயணியுங்கள்

இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம்

வரும் தலைமுறையினரை வளமாக வாழ வைப்போம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
 • Facebook Basic Square
 • Twitter Basic Square
 • Google+ Basic Square
bottom of page