Featured Posts

குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியி


குரு பூஜை பிரசாதத்தை பெற்றுக்கொள்ள ஆகாச கருடன் ரூபத்தில் வந்த மஹாபெரியவா. திருமதி விஜயலக்ஷ்மி மாமியின் அனுபவங்கள். சென்ற வாராம் நடந்த அற்புதம்

நீ அன்று சிறு பொறியாக என் கையில் கொடுத்த குரு பூஜை இன்று உலகமெங்கும் காட்டு தீயாக பரவி நிற்கிறது கலி காலத்தின் சவால்களை தவிடு பொடியாக்கும் குரு பூஜை உலகிற்கு வேண்டுமானால் நீ சூஷ்ம நிலை உன் பக்தர்கள் உருகி அழைக்கும் பொழுது நீ என்றுமே எங்களுக்கு ஸ்தூல நிலை தான் மஹாபெரியவா நின் பாதம் சரணம்

விஜயலக்ஷ்மி மாமியின் குரு பூஜை பிரசாதத்திற்கு வந்த கருடன்

குரு பூஜை என்பது ஏதோ பரிகாரமோ அல்லது சடங்கோ சாங்கியமோ அல்ல. மஹாபெரியவா ரூபத்தில் நம்முடன் வாழ்ந்த பரமேஸ்வரனை நேரில் அழைத்து கலிகாலத்தின் விகாரங்களில் இருந்து விடுதலை கேட்கும் ஒரு உண்மை நிகழ்வே. ஆகும்.

நாமும் எத்தனையோ மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்து வருகிறோம்.ஆனால் குரு பூஜை பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஒரு கருடன் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு இல்லத்தில் வந்து தங்கி இருந்து பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளை என்னவென்று சொல்ல.

வழக்கமாக தேவர்களும் இறைவனும் ஹோமத்தில் அக்னி ஸ்வரூபமாக வந்து அவர்களுக்கு உரிய அவிர் பாகத்தை பெற்று கொள்வார்கள்..மஹாபெரியவாளே தான் ஸ்தூலமாக வாழ்ந்த காலத்திலேயே அக்னி ஸ்வரூபமாக வந்து தன்னுடைய அவிர் பாகத்தை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் ஏராளம்.

குழாயடியில் கருடன்

ஆனால் மஹாபெரியவா சூஷ்ம நிலைக்கு உயந்தவுடன் எல்லைகளை கடந்த அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் மஹாபெரியவா குரு பூஜை என்னும் பிரபஞ்ச சக்தியையை ஒரு சேர திரட்டி குரு பூஜை மூலமாக மஹாபெரியவாளை நேரில் அழைத்து நம்முடைய கஷ்டங்களை நேரில் சொல்லி அழுது கஷ்டங்களுக்கு ஒரு நிவர்த்தியோ அல்லது கஷ்டங்களில் இருந்து விடுதலையோ கிடைக்க வேண்டுகிறோம்.

நம்முடைய வேண்டுதல்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதி படுத்தும் வகையில் ஒவ்வொரு பக்தர்களின் அற்புத அனுபங்களை அனுபவித்து வருகிறோம். இன்று ஒவ்வொரு இல்லங்களிலும் மஹாபெரியவா குரு பூஜை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குரு பூஜையை பற்றி இன்னும் விரிவாக வரும் நாட்களில