என் வாழ்வில் மஹாபெரியவா -026

அற்புதத்தின் சுருக்கம்:வாழ்க்கையில் நமக்கு ஓர் இரவுக்குள் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றால் நாம் நண்பர்களை அழைப்போம் சொந்தங்களை அழைப்போம் உறவுகளை அழைப்போம்.. எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் ஒரே உறவு சர்வமும் சகலமுமான மஹாபெரியவா.. நினைத்தால் கொடுத்து விடுவார் கேட்டால் நடத்தி விடுவார். அப்படிப்பட்ட அற்புதம் தான் இந்தப்பதிவில் நீங்கள் படிக்கப்போவது. நினைத்தேன் கேட்டேன் நடத்தி கொடுத்து விட்டார்.
குருவே சரணம் குரு பாதமே சரணம்

என் வாழ்வில் மஹாபெரியவா -026
பிரதி வியாழக்கிழமை தோறும்
மஹாபெரியவா அற்புதங்கள்
நான் ஒவ்வொரு நாளும் அனுபவப்பட்டாலும்
ஒவ்வொரு அற்புதமும்
என் இதயத்தை பூத்து மலரவைக்கிறது
கேட்கவே வேண்டாம் நினைத்தாலே போதும்
மேகங்கள் அகன்று நீல வானம் தெரிந்து விடுகிறது
நீல் வானத்தில் மஹாபெரியவா தரிசனமும் கிடைத்து விடுகிறது