குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-II- சிவபார்வதி

அற்புதத்தின் சுருக்கம்:சென்ற வரம் நாம் எல்லோரும் படித்து அறிந்து மகிழ்ந்தது சிவபார்வதிக்கு வேலை ஒன்றுதான் மருந்து என்ற நிலையில் தன்னுடைய குரு பூஜையை செய்யச்சொல்லி குரு பூஜை முடிவின் இறுதி நாளில் மஹாபெரியவாளை நமஸ்கரித்து எழுந்தவுடன் வேலைக்கான அனுமதிக்கடிதம் வந்து சிவபார்வதியின் கையில் கிடைத்த அற்புதத்தை படித்து அதிசியத்தோம். நம்முடைய பக்தியும் மஹாபெரியவா அற்புத லீலைகள் மேல் இருக்கும் நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்ததை நாம் கண்கூடாக கண்டோம்..
குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-II-
சிவபார்வதி
பிரதி திங்கள் தோறும்
மற்றவர் நலனுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
அந்த உள்ளங்களே மஹாபெரியவா கோவிலில்
அர்ச்சனை மலர்களாகலாம்
நாம் எல்லோருமே நல்ல மலர்கள் தானே உள்ளத்தளவிலே
சென்ற வரம் நாம் எல்லோரும் படித்து அறிந்து மகிழ்ந்தது சிவபார்வதிக்கு வேலை ஒன்றுதான் மருந்து என்ற நிலையில் தன்னுடைய குரு பூஜையை செய்யச்சொல்லி குரு பூஜை முடிவின் இறுதி நாளில் மஹாபெரியவாளை நமஸ்கரித்து எழுந்தவுடன் வேலைக்கான அனுமதிக்கடிதம் வந்து சிவபார்வதியின் கையில் கிடைத்த அற்புதத்தை படித்து அதிசியத்தோம். நம்முடைய பக்தியும் மஹாபெரியவா அற்புத லீலைகள் மேல் இருக்கும் நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்ததை நாம் கண்கூடாக கண்டோம்..
சென்ற வார குருபூஜை அற்புதங்களை படித்து விட்டு எத்தனையோ ஆத்மாக்கள் தங்களுக்கும் தங்கள் வாழ்கை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வேண்டி மஹாபெரியவா குரு பூஜையை உடனே செய்யவேண்டுமென்றும் அதை எப்படி செய்வது என்றும் என்னிடம் கேட்டார்கள், நானும் மஹாபெரியவா குரு பூஜை செய்யும் வழிமுறையை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து மஹாபெரியவாளிடம் உத்தரவும் வாங்கிக்கொடுத்து அவர்கள் வாழ்க்கை சிறக்க மஹாபெரியவாளை நமஸ்கரிக்குமாறு சொன்னேன்.
நான் இந்த வாரம் சிவபார்வதியின் திருமணத்திற்கு மஹாபெரியவா எப்படி அனுக்கிரஹம் செய்தார் என்று எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் அடுத்த வாரம் சிவபார்வதி தன்னுடைய வேலையில்லாத நேரத்தில் சமுதாயம் அவளை எப்படி பார்த்தது அதை சிவபார்வதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை எழுதுவதைவிட இந்த வாரம் சிவபார்வதி எதிர்கொண்ட சமுதாயபிரச்னைகளை எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அடுத்த வாரம் மங்களகரமாக சிவபார்வதியின் திருமண வைபவத்திற்கான முஸ்தீபுகள் எப்படி ஆரம்பித்தன மஹாபெரியவா என்ற இறை சக்தி எப்படி தன்னுடைய லீலைகளை செய்து சிவபார்வதியை மணப்பெண்ணாக மாற்றியது என்பதை மங்களகரமாக அடுத்தவாரம் நிறைவு செய்கிறேன். நீங்களும் மணப்பெண் சிவபார்வதியை மன நிறைவோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துங்கள்.
ஒரு நல்ல எழுத்தாளன் சமுதாய சீரழிவுகளை மட்டும் எழுத்தமாட்டான். பிரச்சனைகளுக்கு தீர்வையும் அலசி ஆராய்ந்து தன்னுடைய எழுத்துக்களிலும் கட்டுரைகளிலும் சேர்ப்பான். நான் நல்ல எழுத்தாளனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மஹாபெரியவாளின் அணுக்கத்தொண்டன் என்ற வகையில் இந்த காயத்ரி ராஜகோபாலுக்கு சமுதாய அக்கறை நிச்சயம் இருக்கவேண்டும் என்பதுதான் உண்மை.
அதனால்தான் அக்கறையோடு சிவபார்வதி சமுதாயத்தால் பட்ட கஷ்டங்களை விலாவரியாக எழுதி உங்கள் கண்களில் கண்ணீரை வரவழிப்பதை விட அந்த கண்ணீரை துடைக்கும் கைகுட்டையாக என்னுடைய கருத்துக்களும் எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் முனைப்பாக இருக்கிறேன்.தொலைக்காட்சியில் மட்டும் தான் கண்ணீருக்கு விலையுண்டு சீரியல் என்ற பெயரில்.
ஆனால் இந்த இணையதளத்தில் கண்ணீருக்கு கண்ணீர்தான் விலை. நாமும் அவள் கண்ணீரை பகிர்ந்துகொள்வோம் இல்லையா . இந்த அனுபவlத்தை நீங்கள் மட்டுமல்ல நானும் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் சிவபார்வதி எதிர்கொண்ட சமுதாய பிரச்சனைகளை சில வரிகளில் சுருக்கமாக எழுதி விட்டு பிரச்சனைகளுக்கு தீர்வை பற்றி ஆராயலாம் என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் என்று எனக்கும் புரிகிறது.
சமுதாயபிரச்னையை குரு பூஜைக்கு முன் சிவபார்வதி எப்படி எதிர்கொண்டாள் குரு பூஜைக்கு பிறகு எப்படி துணிச்சலுடன் போராடினாள் என்பதை ஓரிரு வரிகளில் பார்ப்போம்.
குரு பூஜைக்குமுன் சமுதாயபிரச்னையும் சிவபார்வதியும்
சமுதாயம்
சிவபார்வதி
ஏளனப்பேச்சு
மனமும் உடலும் வாடி விடும்
கிண்டலும் கேலியும்
நம்பிக்கை அற்ற முயற்சி
பேய் பிடித்துவிட்டதாக பேச்சு
பேய் ஓட்டுபவரை தேடி அலைந்தாள்
நாடு இரவிலும் கேலிப்பேச்சு
தூங்கமுடியாத இரவுகள்
கற்பனை கரணங்கள்
நம்பிவிடுவாள்
இன்னும் எத்தனையோ சமுதாய பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்காக ஒரு சிலதை மட்டும் இங்கே காண்பித்துளேன். இந்த பதிவின் இறுதியில் குரு பூஜைக்கு பிறகு சமுதாய பிரச்னையை சிவபார்வதி எப்படி எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடினாள் என்பதயும் ஓரிரு வரிகளால் உங்களுக்காக கொடுத்துளேன்.
சிவபார்வதியின் வாழ்க்கை பிரச்சனைகள்